Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
சூப்பரான வாழைப்பூ பிரியாணி ரெசிபி... இந்த வித்தியாசமான பிரியாணியை செஞ்சு பாருங்க... எல்லாரும் அசந்துருவாங்க...
Banana Flower Biriyani Recipe in Tamil: இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவென்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு பிரியாணி என்றுதான் கூறுவார்கள். இந்தியர்களுக்கு பிரியாணி என்பது வெறும் உணவல்ல அது விவரிக்க முடியாத உணர்வாகும். முகலாயர்கள் இந்தியாவிற்கு கொண்டு இந்த பிரியாணி தற்போது இந்தியர்களுடன் பின்னி பிணைந்ததாக மாறிவிட்டது.
பிரியாணி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிதான். வேறு வழியே இல்லாத நேரத்தில் வெஜ் பிரியாணியை சாப்பிடுவோம். ஆனால் பிரியாணியை வேறு சில பொருட்களை வைத்தும் சமைக்கலாம். அதில் மிகவும் வித்தியாசமான ஒன்றுதான் வாழைப்பூ. வாழைப்பூவை நாம் பல்வேறு வழிகளில் சமைத்து உண்டிருப்போம், ஆனால் அதில் பிரியாணி செய்ய நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம். உங்களுக்கு மற்ற பிரியாணிகள் போரடித்திருந்தால் இந்த பிரியாணியை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:
- சீரக சம்பா அரிசி - 2 டம்ளர்
- தக்காளி - 3
- பெரிய வெங்காயம் - 2
- நறுக்கிய வாழைப்பூ - 1 கப்
- பிரியாணி மசாலா தூள் - 2 ஸ்பூன்
- சிக்கன் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- கறி மசாலா தூள் - அரை ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- பட்டை - 2
- கிராம்பு - 5
- ஏலக்காய் - 2
- தயிர் - 4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
- நெய் - 4 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- புதினா - கால் கப்
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
- குக்கரில், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, கிராம்பு, 2 ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்திற்கு வந்தவுடன் இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- வதங்கிய பின், பொடியாக நறுக்கிய தக்காளி, ஒரு கைப்பிடி புதினா, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கு ஸ்பூன் புளிக்காத தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
- வாழைப்பூ மசாலா தயாரிக்க ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய், ஒரு கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, அரை ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஃப்ரை செய்யவும். பின், சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
இறுதியாக, தயார் செய்து வைத்துள்ள பிரியாணியை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, அதனுடன் ஃப்ரை செய்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
- சூப்பரான வாழைப்பூ பிரியாணி ரெடி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான மற்றும் வித்தியாசமான உணவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











