Latest Updates
-
மங்களாதித்ய ராஜயோகத்தால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது... -
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..! -
நெல்லூர் வெங்காய கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரமானாலும் கெட்டுப்போகாது.. -
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்? -
18 ஆண்டுக்கு பின் மகம் நட்சத்திரம் செல்லும் கேதுபகவான்: இந்த 3 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்... -
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...!
1 கப் கோதுமை மாவு, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க..
Apple Banana Pancake Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு ஆரோக்கியமானதாகவும், சற்று சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் வகையிலான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டில் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் கோதுமை மாவு இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் பேன் கேக் செய்யலாம்.
இந்த பேன் கேக் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இதை மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை உணவாகவும் சாப்பிடலாம். எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறினால், ஒருமுறை இந்த பேன்கேக்கை உங்கள் பிள்ளைகளுக்கு டிபனாக செய்து கொடுங்கள்.

உங்களுக்கு ஆப்பிள் வாழைப்பழ பேன் கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆப்பிள் வாழைப்பழ பேன் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* சிறிய ஆப்பிள் - 1
* வாழைப்பழம் - 1
* நாட்டு சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/2 - 3/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் 1 சிறிய ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி
சேர்க்க வேண்டும்.
* பின்பு 1 வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு
சேர்த்து, காய்ச்சி ஆற வைத்த பாலை 1/2 கப் ஊற்றி, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* மாவு மிகவும் இறுக்கமாக இருந்தால், இன்னும் சிறிது பாலை ஊற்றி
கலந்து கொள்ளுங்கள்.
* அடுத்து அதில் நல்ல மணத்திற்கு ஏலக்காய் தூளை 1/2 டீஸ்பூன் சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் அல்லது வெண்ணெயை
தடவி, கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊத்தாப்பம் போன்று
ஊற்றி, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க
வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சுட்டு வைத்துள்ள பேன் கேக்கை பரிமாறும் போது, மேலே தேன்,
சாக்லேட் சிரப் அல்லது மாப்பிள் சிரப் என எது வேண்டுமானாலும் ஊற்றி
கொடுங்கள். இப்போது சுவையான ஆப்பிள் வாழைப்பழ பேன் கேக் தயார்.



Click it and Unblock the Notifications











