Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செய்யுங்க.. சுவையானதும்.. சத்தானதும் கூட..
Sweet Potato Pancake Recipe In Tamil: மாலை வேளையில் பசியுடன் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் பசியை ஆற்ற வேண்டுமா? அதுவும் நல்ல சத்தான ஸ்நாக்ஸை செய்து கொடுத்து, அவர்களின் பசியை ஆற்றுவதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வேண்டுமா?
அப்படியானால் தற்போது சீசனாக இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வைத்து, பேன் கேக் செய்து கொடுங்கள். இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு பேன்கேக் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். மேலும் இந்த பேன் கேக் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட மறுக்கும் பிள்ளைகளையும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு பேன்கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளி கிழங்கு பேன்கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 200 கிராம்
* ரவை - 1/2-3/4 கப்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* காய்ச்சிய பால் - 1 கப்
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - தேவையான அளவு
* வெள்ளை எள்ளு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சற்று
பெரிய துண்டுகளாக்கி இட்லி தட்டில் வைத்து, மிதமான தீயில் வைத்து 10
நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
* சர்க்கரை வள்ளிக்கிழங்கு நன்கு வெந்ததும், அதை எடுத்து குளிர வைக்க
வேண்டும்.
* சர்க்கரை வள்ளிக்கிழங்கு குளிர்ந்த பின், நன்கு கட்டிகளின்றி
மசித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் ரவையை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய் மற்றும்
சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை 1 கப் ஊற்றி நன்கு கலந்து விட
வேண்டும். பதம் என்றால் தோசை மாவை விட சற்று கெட்டியாக இருக்க
வேண்டும்.
* பிறகு அதில் இனிப்பிற்காக 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து
நன்கு கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மாவை கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய்
ஊற்ற சூடானதும், சிறிது மாவை எடுத்து கல்லில் ஊற்றி பரப்பி விடாமல்,
மேலே சிறிது வெள்ளை எள்ளு விதைகளை தூவி, நெய் ஊற்றி, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று
அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு
பேன்கேக் தயார்.



Click it and Unblock the Notifications











