Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ஆந்திரா ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்...!
Andhra Style Onion Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை சுட திட்டம் போட்டுருக்கீங்களா? இட்லி, தோசை என்றாலே எப்போதும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்ப இந்த ஆந்திரா ஸ்டைல் வெங்காய சட்னியை செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம், புளி மற்றும் வரமிளகாய் போன்ற எளிய பொருட்கள் உள்ளதா? அப்படியானால் இவற்றை வைத்தே 10 நிமிடத்தில் சுவையான சட்னியை செய்யலாம். இந்த சட்னி அவரசமாக சமைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் எளிதாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதான மற்றும் சுவையான சட்னி என்றால் அது இதுதான்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சின்ன வெங்காய சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 20 நறுக்கியசின்ன வெங்காயம்
- 2 காஷ்மீரி மிளகாய்
- 5 வர மிளகாய்
- 1 இன்ச் புளி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- அரை ஸ்பூன் கடுகு
செய்முறை:
- காஷ்மீரி மிளகாயை சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் ஒரு 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- இதில் காரமான சிவப்பு மிளகாய்களைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அவை மென்மையாகி கண்ணாடி போல மாறும் வரை 3 முதல் 5 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் புளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
- வதக்கிய வெங்காயக் கலவையை, ஊறவைத்த காஷ்மீரி மிளகாய்களுடன் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- இந்த உள்ளி பச்சடியை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கரண்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- பின்னர் கடுகு சேர்த்து, அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் இதை சட்னி மீது கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான் ஆந்திரா உள்ளி பச்சடி ரெடி. சூடான இட்லி, தோசையுடன் சாப்பிட இது பிரமாதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











