Just In
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும்...
- 15 hrs ago
புதினா துவையல்
- 16 hrs ago
இந்த ஒரு பொருளை இப்படி யூஸ் பண்ணுனா.. கடன் மற்றும் பணப் பிரச்சனை விரைவில் நீங்குமாம்..
- 17 hrs ago
இந்த உணவுகள் உங்கள் பற்களில் மஞ்சள் கறையை உண்டாக்குவதுடன் பற்களை அரிப்பையும் ஏற்படுத்துமாம்...!
Don't Miss
- Technology
Vivo V25 இல்ல Vivo V25 Pro-வை வாங்கலாம்னு வெயிட் பண்றீங்களா? டைம் வேஸ்ட்!?
- News
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை? என்ன சொன்னது சந்துரு குழு! சாட்டை எடுக்கப் போகும் முதல்வர்!
- Finance
டாடா குழுமத்தின் பெரும் பங்குதாரர் பலோன்ஜி மிஸ்திரி 93 வயதில் மறைந்தார்..!
- Movies
கமல் என் கான்ஃபிடன்ட்டையே உடைச்சிட்டாரு.. என்ன பிருத்விராஜ் இப்படி சொல்லிட்டாரே?
- Sports
"பாரபட்சமே கிடையாது.. ஒரே அடிதான்".. இந்தியாவுக்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை.. மிகவும் பலம்தான் போல...!
- Automobiles
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!
- Travel
என்ன? உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் இந்தியாவில் தான் உள்ளதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Aloo Paneer Recipe : ஆலு பன்னீர் கிரேவி
பன்னீர் பிரியர்களே! இன்று உங்களுக்காக ஒரு அற்புதமான பன்னீர் ரெசிபியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது தான் ஆலு பன்னீர் கிரேவி. இந்த ஆலு பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
உங்களுக்கு ஆலு பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆலு பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கசகசா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* பன்னீர் - 200 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - ஒரு கையளவு (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியில் தக்காளி மற்றும் கசகசாவை போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அதை இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு சிறிது நீரை ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடம் மூடி வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், அரைத்த தக்காளியை ஊற்றி கிளறி, வேண்டுமானால் இன்னும் சிறிது நீரை ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவியில் இருந்து பச்சை வாசனை போனதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், ஆலு பன்னீர் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi