Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
Weight Loss Pachai Payaru Kanji Recipe In Tamil: இந்த கோடை வெயில் நேரத்தில் உடல் சூடு பிரச்சனையை எதிர்கொள்வோர் ஏராளம். அதே சமயம் உடல் எடையைக் குறைக்க நினைப்போரும் அதிகம். இப்படி உடல் எடையைக் குறைக்கும் அதே சமயம் உடல் சூட்டையும் தணிக்கும் ஒரு அற்புதமான கஞ்சியை தேடிக் கொண்டிருந்தால், பச்சை பயறு கஞ்சியை தயாரித்து குடியுங்கள். இந்த கஞ்சி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையும் பிரமாதமாக இருக்கும்.

சொல்லப்போனால் இந்த கஞ்சியை செய்தால், மற்றவர்களை குடிக்க வற்புறுத்த வேண்டும் என்பதில்லை. இதன் மணமும், சுவையுமே ஆளை இழுத்து குடிக்க வைத்துவிடும். அந்த அளவில் ருசி அருமையாக இருக்கும். கோடைக்காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செய்து காலை, மாலை வேளைகளில் காபி, டீ-க்கு பதிலாக குடித்து வந்தால், உடல் சூடும் குறையும், உடல் எடையும் குறைவதைக் காணலாம்.
இந்த பச்சை பயறு கஞ்சி குறித்து டீ கடை கிச்சன் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சைப்பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சைப்பயறு - 250 கிராம்
* பச்சரிசி - 75 கிராம்
* தண்ணீர் - 1 1/2 லிட்டர்
* வெல்லம் - 1/4 கிலோ
* உப்பு - 2 சிட்டிகை
* ஏலக்காய் - 3
* சுடுநீர் - 1/4 லிட்டர்
* துருவிய தேங்காய் - 1 கையளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து நன்கு பொரிய விட்டு
இறக்கி, அதையும் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பச்சை பயறை சேர்த்து, ஓரளவு
கொரகொரவென்று அரைத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் வறுத்த பச்சரிசியை சேர்த்து, அதையும் கொரகொரவென்று
அரைத்து பச்சை பயறு பொடியுடன் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2
லிட்டர் நீரை ஊற்றி, அத்துடன் பொடித்த இரண்டையும் சேர்த்து
கட்டிகளின்றி தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* கஞ்சி ஓரளவு வெந்து கெட்டியாகத் தொடங்கியதும், அதில் பொடித்த
வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 3 ஏலக்காயை தட்டிப் போட்டு நன்கு கிளறி 1 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1/4 லிட்டர் சுடுநீரை ஊற்றி கிளறி, ஒரு கொதி
வந்ததும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான
பச்சைப்பயறு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications