Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
அகத்திக்கீரையை வாரம் 1 முறை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அல்சர் வேகமா குணமாகும்..
Agathi Keerai Paruppu Saaru Recipe In Tamil: வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். கீரையில் பல உள்ளன. அதில் ஒன்று தான் அகத்திக்கீரை. இந்த அகத்திக்கீரை முருங்கைக்கீரையை விட கசப்புமிக்கது. இதனால் இந்த கீரையை நிறைய பேர் விரும்பி சாப்பிடமாட்டார்கள். அதுவும் அகத்திக்கீரை வாங்கினால், நிறைய பேர் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். இப்படி பொரியல் செய்யும் போது, அதில் உள்ள கசப்புத்தன்மை நன்கு தெரியும்.
ஆனால் அதுவே இந்த கீரையைக் கொண்டு பருப்பு சாறு செய்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரையை சாப்பிடுவதன் மூலம் அல்சர் குணமாகும், கர்ப்பிணிப் பெண்கள் உட்கொண்டால் பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் சுரப்பில் பிரச்சனை எதுவும் இருக்காது. இந்த கீரை சாற்றினை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இது தவிர இதை சூப் போன்றும் குடிக்கலாம்.

உங்களுக்கு அகத்திக்கீரை பருப்பு சாறு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அகத்திக்கீரை பருப்பு சாறு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அகத்திக்கீரை - 2 கைப்பிடி
* அரிசி கழுவிய தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 3 பல் (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 50 கிராம் (வேக வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் -2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* பூண்டு - 1 பல் (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் அகத்திக்கீரையின் இலைகளை உருவி, 2 கைப்பிடி எடுத்துக்
கொள்ளுங்கள்.
* பின்னர் குக்கரில் 50 கிராம் துவரம் பருப்பை கழுவி சேர்த்து, நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் அகத்திக்கீரையை
போட்டு, அரிசி கழுவி நீரை ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய பூண்டு மற்றும் தக்காளியை சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் 1 கைப்பிடி நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,
பெருங்காயத் தூள், சோம்புத் தூள், சீரகத் தூள் சேர்த்து கலந்து, லேசாக
மூடி வைத்து, கீரையை வேக வைக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காய், மஞ்சள் தூள், வேக
வைத்த துவரம் பருப்பு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம்
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பல்லை சேர்த்து, பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வெங்காயத்தை
சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
கொதித்துக் கொண்டிருக்கும் சாறுடன் சேர்த்து கிளறி, இறக்கினால்,
சுவையான அகத்திக்கீரை பருப்பு சாறு தயார்.



Click it and Unblock the Notifications











