கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?

Posted By:
Subscribe to Boldsky

பலரும் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று பலரும் நினைக்கிறார்கள். இதற்கு இதுக்குறித்து மக்களிடையே உள்ள கட்டுக்கதைகள் தான் காரணம். ஆனால் உண்மையில் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானது மற்றும் தீங்கற்றது.

Making Love In The First Trimester: Is It Safe?

அதுவும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் கர்ப்ப காலத்தில் எந்த ஒரு பிரச்சனைகளையும் சந்திக்காமல் இருந்தால், கர்ப்ப காலத்தில் எப்பிரச்சனையுமின்றி உடலுறவில் ஈடுபடலாம்.

இருந்தாலும் பலருக்கும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா என்ற சந்தேகம் எழும். இதுக்குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் மூன்று மாத காலம்

முதல் மூன்று மாத காலம்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உடலுறவில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் கர்ப்ப காலத்தில் இது மிகவும் முக்கியமான காலம். இக்காலத்தில் கருவின் முக்கிய உறுப்புக்களின் வளர்ச்சி ஆரம்பமாவதால், சற்று விலகி இருப்பதே நல்லது.

வேறு காரணம்

வேறு காரணம்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் அதிகளவு சோர்வு மற்றும் உடலில் ஆற்றல் குறைவாக இருப்பதால், உடலுறவில் ஈடுபடுவதற்கு போதிய ஆற்றல் இல்லாமல் இருக்கும். இதன் காரணமாக உடலுறவில் ஈடுபடுவது மிகவும் கஷ்டமாகவும் இருக்கும். இப்படி கர்ப்ப காலத்தில் கஷ்டத்தை உணர்வது நல்லதல்ல.

இருப்பினும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

விஷயம் #1

விஷயம் #1

கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதாக இருந்தால், துணையை காண்டம் பயன்படுத்த சொல்லுங்கள். இதனால் யோனிப் பகுதியில் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

விஷயம் #2

விஷயம் #2

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உடலுறவினால் இன்பத்தை அடைய முடியாவிட்டால், துணையுடன் கொஞ்சி விளையாடுங்கள். இதனால் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதுடன், இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பு அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் தம்பதியருக்குள் பிணைப்பு மிகவும் அவசியமானது.

விஷயம் #3

விஷயம் #3

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அசௌகரித்தை உணர்ந்தாலோ, அடிவயிற்றில் பிடிப்புக்கள் ஏற்பட்டாலோ, உடனே உறவில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Making Love In The First Trimester: Is It Safe?

Keep these few things in mind while having sex during the initial months of your pregnancy. Read on to know more...
Story first published: Tuesday, November 15, 2016, 13:52 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter