For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் கர்ப்பிணிகளின் பழக்கங்கள்!!!

By Maha
|

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கெட்ட பழக்கங்களினால், நாம் பல்வேறு நோய்களுக்கு விரைவில் உள்ளாகிறோம். இத்தகைய கெட்ட பழக்கங்கள் ஆண்களிடம் மட்டுமின்றி, பெண்களிடமும் இருக்கிறது. அக்காலத்தில் எல்லாம் பெண்கள் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இக்காலத்தில் பெண்கள் தங்களால் முடியாதது எதுவும் இல்லை என்று, சற்று முன்னேறி ஆண்கள் பின்பற்றும் கெட்ட பழக்கங்களையும் பின்பற்றி வருகின்றனர்.

அதிலும் அழகான உயிரை படைக்கும் பெண்கள், கர்ப்பமாக இருக்கும் போதும் அந்த கெட்ட பழக்கங்களைப் பின்பற்றி, பின் குழந்தை பிறக்கும் போது மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஏனெனில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமற்ற பழக்கங்களை பின்பற்றுவதால், வயிற்றில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே நல்ல அழகான மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமானால், கர்ப்பிணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். சரி, இப்போது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் பழக்கங்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒயின் குடிப்பது

ஒயின் குடிப்பது

கர்ப்ப காலத்தில் ஆல்கஹாலுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹாலானது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் தடையை விதிக்கும். அதிலும் குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் எக்காரணம் கொண்டும் ஆல்கஹால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடித்தால், அது குழந்தைக்கு நினைக்க முடியாத அளவில் ஆபத்தை ஏற்படுத்தும். அதில் குழந்தையின் மூளை வளர்ச்சி தடுக்கப்படுவதோடு, சில சமயத்தில் குழந்தையின் உயிரையே பறித்துவிடும்.

மனநிலை

மனநிலை

கர்ப்பிணிகள் எப்போதுமே நேர்மறையாக சிந்தித்து சந்தோஷமான மனநிலையுடன் இருக்க வேண்டும். அதைவிட்டு எப்போதும் கஷ்டப்பட்டு, மனதை வருத்தியவாறு இருந்தால், குழந்தைக்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு தடை ஏற்பட்டு, மூளையின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், குழந்தை மூளை வளர்ச்சி குன்றி பிறக்கும்.

உடற்பயிற்சி செய்யாமை

உடற்பயிற்சி செய்யாமை

கர்ப்பிணிகள் அன்றாடம் சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். இதனால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போது பெரும்பாலான கர்ப்பிணிகள் எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்யாமல், எப்போதும் தூங்கியவாறே இருக்கின்றனர். இதனால் தாயின் ஆரோக்கியம் மட்டுமின்றி, குழந்தையின் மனநிலையும் பாதிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Habits That Affect Your Baby's Brain

Let us look at these habits that can affect your baby's brain. Here are 4 habits that can affect your baby's brain. Read on...
Story first published: Wednesday, September 3, 2014, 15:37 [IST]
Desktop Bottom Promotion