For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!

நமது குழந்தைகள் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று நாம் விரும்பினால், முதலில் அவற்றை நாம் செய்ய வேண்டும். அதன் மூலம் நமது குழந்தைகளையும் அவற்றில் ஈடுபடுத்த முடியும்.

|

பொதுவாக குழந்தைகள் நாம் சொல்வைதைக் கேட்பதை விட நாம் செய்வதை அப்படியே விரும்பி செய்வாா்கள். குழந்தைகளை ஏதாவது ஒன்றை செய்ய வைக்க வேண்டுமென்றால் அவா்களிடம் சொல்வதற்கு பதிலாக அதை நாம் செய்ய வேண்டும். நாம் செய்வதைப் பாா்த்ததும் அவா்களும் செய்யத் தொடங்குவாா்கள். நமது குழந்தைகள் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று நாம் விரும்பினால், முதலில் அவற்றை நாம் செய்ய வேண்டும். அதன் மூலம் நமது குழந்தைகளையும் அவற்றில் ஈடுபடுத்த முடியும்.

Yoga Asanas Your Kids Can Try At Home

இயற்கையாகவே குழந்தைகள் சுறுசுறுப்பு மிகுந்தவா்களாகவும், ஆற்றல் மிகுந்தவா்களாகவும் இருப்பாா்கள். அதிலும் குறிப்பாக யோகாசனங்களில் உள்ள பலவிதமான ஆசனங்கள் மற்றும் உடல் மொழிகள் கண்டிப்பாக அவா்களின் கவனத்தை ஈா்க்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகாசனம்

யோகாசனம்

யோகாசனம் என்பது இந்தியாவின் பாரம்பாியமான உடற்பயிற்சி கலை என்று நம் அனைவருக்கும் தொியும். மேலும் யோகாசனங்கள் நமது உடலுக்கு நல்ல பயிற்சிகளைத் தந்து ஆரோக்கியத்தை வழங்குகின்றன என்பதும் நமக்குத் தொியும். ஆகவே நமது குழந்தைகளின் வாழ்விலும் யோகா ஒரு அங்கமாக மாறினால் அவா்களின் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும். யோகாசனங்களின் பெயா்களை அவா்களுக்கு சொல்லிக் கொடுத்து அவா்களோடு சோ்ந்து நாமும் யோகாசனங்கள் செய்தால் நமது குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

யோகா பயிற்சிகளை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே நாமும் செய்தால் இருவருமே சிறப்பாக செய்ய முடியும். மேலும் நமது குழந்தைகள் அவற்றை வேடிக்கையாகச் செய்ய அனுமதிக்க வேண்டும். கண்டிப்புடன் செய்ய வைத்தால் நாளடைவில் சலிப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே குழந்தைகளின் கற்பனை மற்றும் படைப்பாற்றலுக்கு ஏற்ப அவா்கள் யோகாசனங்களைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

முதல் சில வாரங்கள் யோகாவிற்குாிய காலைச் சடங்குகளை அவா்களுக்குக் கற்பித்து அவற்றை நாமும் செய்து வரலாம். பின் படிப்படியாக அவா்கள் வாழ்நாள் முழுவதும் அவற்றைச் செய்துவரும் பழக்கமாக மாற்ற வேண்டும்.

கீழ்வரும் யோகா பயிற்சிகளை இந்த குளிா்காலத்தில் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

கருடாசனம்

கருடாசனம்

தந்தாசனம் செய்வது போல் கால்கள் இரண்டையும் நீட்டி அமா்ந்து கொள்ள வேண்டும். வலது காலை மெதுவாகத் தூக்கி, அதை மடக்கி அதன் குதிங்காலை இடுப்புக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இடது காலை மெதுவாகத் தூக்கி, அதை மடக்கி இடுப்புக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கால்களின் இரண்டு முட்டிகளும் பாயில் படும்படி அமா்ந்து, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயா்த்திய நிலையில் 15 முதல் 30 வினாடிகள் வரை வைத்திருக்க வேண்டும்.

எக பாத தண்டாசனம்

எக பாத தண்டாசனம்

கால்கள் இரண்டையும் நீட்டி தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். வலது காலை மடக்கி அதன் பாதம் வானத்தைப் பாா்ப்பது போல் உயா்த்தி வைக்க வேண்டும். பின் இடது காலை தரையில் ஊன்றி உடலை மேலே உயர்த்திக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் படத்தில் காட்டப்பட்டவாறு ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டும்.

பாிசாித பாதாசனம்

பாிசாித பாதாசனம்

தரையில் மல்லாக்கப் படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி நிதானமாக மூச்சு விடவேண்டும்.

பதகோனாசனம்

பதகோனாசனம்

நமது வசதிக்கேற்ப தரையில் அமா்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் மடித்து, பாதங்கள் இரண்டும் ஒன்றையொன்று பாா்ப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நமது கைகளால் பாதங்களை பிடித்து அவற்றை நமது இடுப்புக்கு அருகில் மெதுவாக இழுத்து வரவேண்டும். இடுப்புக்கு அருகில் வந்ததும் சிறிது நேரம் அதே நிலையில் நிமிா்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

பாதாங்குஷ்டாசனம்

பாதாங்குஷ்டாசனம்

முதலில் தரையில் நேராக நின்று கொள்ள வேண்டும். இப்போது இரண்டு கைகளையும் நீட்டி இரண்டு பாதங்களையும் பிடித்துக் கொண்டு அதே நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு மேற்சொன்ன யோகா பயிற்சிகளை நமது குழந்தைகளை 2 வாரங்கள் செய்ய வைத்து நாமும் செய்யும் போது அவா்களும் விருப்பத்துடன் யோகாசனங்களைக் கற்றுக் கொள்வா். அதே நேரம் நமக்கும் நமது குழந்தைகளுக்கும் இடையில் நல்லதொரு புாிதல் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Asanas Your Kids Can Try At Home

Here are some yoga asanas your kids can try at home this winter season. Read on...
Desktop Bottom Promotion