For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் மட்டும் உங்க குழந்தைகிட்ட இருந்தா... அவங்க எதிர்காலத்தில் மோசமானவரா வருவாங்களாம்!

உங்கள் குழந்தையின் கருத்து அல்லது முடிவுகளுடன் நீங்கள் உடன்படவில்லை என்றாலும், அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக்கொடுங்கள்.

|

உலகில் எவரும் நாசீசிஸத்துடன் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தங்கள் சூழலைப் பொறுத்து அதை உருவாக்க முனைகிறார்கள். நாசீசிஸம் மற்றும் நாசீசிஸ்டிக் என்னும் சொற்கள் பெரும்பாலும் இழிவுப்படுத்தக்கூடியவைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது வீண் தற்பெருமை, தற்செருக்கு அல்லது வெறுமனே சுயநலம் என்று குறிக்கிறது. குழந்தைகளும் இந்த நாசீசிஸ்டிக் நடத்தைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அவை மேன்மை, உரிமை மற்றும் பச்சாதாபம் இல்லாமை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நடத்தையை பெரும்பாலும் பெற்றவர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைக்கும் ஒரு கெட்ட பழக்கம். குழந்தை வளரும் பருவங்களிலே, இந்த நடத்தையை பெற்றோர்கள் மாற்றலாம்.

These mistakes that can raise narcissistic kids in tamil

நல்ல, இரக்கமுள்ள குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோர்கள் என்ன செய்யலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதைப் பற்றிப் பேசுவதற்கு முன், முதலில் தன்னம்பிக்கைக்கும் நாசீசிஸத்துக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உதவக்கூடிய வழிகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளில் நாசீசிஸத்தின் அறிகுறிகள்

குழந்தைகளில் நாசீசிஸத்தின் அறிகுறிகள்

  • மற்ற குழந்தைகளை கீழே தள்ளிவிடுதல்
  • தொடர்ந்து ஒருவரை கொடுமைப்படுத்துதல்
  • நல்ல மற்றும் நீண்டகால நண்பர்களை உருவாக்குவதில் சிரமம்
  • தொடர்ந்து ஆணவமாக இருப்பது
  • சகிப்புத்தன்மையற்றவராக இருப்பது
  • எப்பொழுதும் மற்றவர்களை குற்றம் சாட்டும் பழக்கம்
  • இத்தகைய நாசீசிஸ்டிக் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதாக நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளின் இத்தகைய குணநலன்களுடன் அடிக்கடி தொடர்புடைய சில பெற்றோரின் தவறுகள் இங்கே உள்ளன.
  • எதிர்மறை நடத்தைகளை அங்கீகரிக்கவில்லை

    எதிர்மறை நடத்தைகளை அங்கீகரிக்கவில்லை

    ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளையின் எதிர்மறையான நடத்தையை சரிசெய்ய உங்களுக்கு உரிமை இருக்கும்போது, வயது வந்தவராக, உங்கள் தவறுகளையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பெரும்பாலும், உங்கள் பிள்ளைகள் உங்களைக் கவனித்து, உங்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதாவது நீங்கள் உங்களை எதிர்மறையான நபராக சித்தரித்தால், அவர்கள் உங்களை அப்படியே பின்பற்ற வாய்ப்புள்ளது. ஆதலால், நீங்கள் இப்போது திருத்தங்களைச் செய்து, உங்கள் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக புத்திசாலியாக மாற உதவ வேண்டும். அதாவது மற்றவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    உணர்ச்சிகளை நீங்கள் செல்லாததாக்குகிறீர்கள்

    உணர்ச்சிகளை நீங்கள் செல்லாததாக்குகிறீர்கள்

    உங்கள் குழந்தையிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது, அவர்கள் இறுதியில் ஒரு நபராக மாறுவதையும் பாதிக்கிறது. அவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நீங்கள் தொடர்ந்து செல்லாததாக்கினால் அல்லது நிராகரித்தால், அவர்கள் என்ன தவறாக உணர்கிறார்கள் அல்லது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் தொடர்ந்து அவர்களிடம் சொன்னால், அவர்கள் தங்கள் நடத்தையை கட்டுப்படுத்த கடினமாக இருக்கும். எனவே, உங்கள் குழந்தையின் கருத்து அல்லது முடிவுகளுடன் நீங்கள் உடன்படவில்லை என்றாலும், அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக்கொடுங்கள். மாறாக, அவர்கள் ஏன் வருத்தப்படுகிறார்கள் என்பதை பெற்றோராகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களுக்கு உதவுங்கள் மற்றும் ஒரு தீர்வை ஒன்றாகக் கண்டறிய உதவுங்கள். இந்த வழியில் அவர்கள் பச்சாதாபத்தையும் புரிந்துகொள்வார்கள்.

    நாசீசிஸ்டிக் அணுகுமுறையை சரிபார்க்கவில்லை

    நாசீசிஸ்டிக் அணுகுமுறையை சரிபார்க்கவில்லை

    தங்கள் தவறை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, பிறர் மீது பழியைப் போடுவது ஆகியவை நாசீசிஸ்டிக் குழந்தையின் சில அறிகுறிகளாகும். ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளை முறையற்ற முறையில் நடந்து கொண்டால், அதைத் தவிர்க்க முயற்சிக்காதீர்கள். அவற்றை கண்டித்து, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். "என்ன நடக்கிறது?", "மற்ரவர்கள் எப்படி உணர்கிறீர்கள்?", என்பதை பற்றி பேசி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    என்ன செய்ய வேண்டும்?

    என்ன செய்ய வேண்டும்?

    குழந்தைகளில் நாசீசிஸத்தை சமாளிக்க பல வழிகள் உள்ளன.

    • உங்கள் குழந்தையை நிபந்தனையின்றி நேசித்தல், மற்றும் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அமைக்கமால் இருப்பது
    • அவர்கள் உணர்ச்சி ரீதியாக அறிவார்ந்தவர்களாக மாற உதவுங்கள்
    • அவர்களின் நடத்தை மற்றவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிய வையுங்கள்
    • நல்ல நடத்தையை சொல்லிக்கொடுங்கள்
    • அவர்களின் கேட்கும் சக்தியை பலப்படுத்துங்கள்
    • தேவையான எல்லைகளை அமைக்கவும்
    • அவர்கள் ஒருவருக்கு உதவும்போது அவர்களைப் புகழ்ந்து பேசுங்கள்
    • அவர்களின் உரிமை உணர்வைத் தெரிவிக்க தயங்காதீர்கள்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These mistakes that can raise narcissistic kids in tamil

Here we are talking about these mistakes that can raise narcissistic kids in tamil
Desktop Bottom Promotion