Latest Updates
-
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும்
இரண்டாவது குழந்தைக்கு பிளான்.. மறக்காம ஃபாலோ பண்ணுங்க..!
முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் மூன்று அல்லது நான்கு வயது இடைவெளி இருந்தால் நல்லது. மூன்று வருடங்களுக்கு முன்னாடியே இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொண்டீர்களென்றால், நீங்களும் பெரிய அளவில் ஹெல்த்தியாக இருக்க மாட்டீர்கள். அதனால் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் பொழுது ஏற்படக்கூடிய ஒரு சில சாத்தியமான பிரச்சனைகள் பற்றியும், ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை உறுதி செய்ய என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் முக்கியம். ஆகவே இந்த பதிவில் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் பெற்றோருக்கான முக்கியமான சில குறிப்புகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
முதலில் கருத்தரிக்க முயற்சி செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஒரு சில பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. இது உங்களது ஆரோக்கியத்தை மதிப்பிடவும், உங்களின் மருத்துவ வரலாறு மற்றும் முந்தைய பிரக்னன்சியில் ஏற்பட்ட ஒரு சில காம்ப்ளிகேஷன் அடிப்படையில் வழிகாட்டுதலை பெறவும் உதவும்.

ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதி செய்வதில் சமச்சீரான உணவு மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பழங்கள் காய்கறிகள் முழு தானியங்கள் மெலிந்த புரதங்கள் லீன் புரோட்டீன்கள் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் அழியுங்கள். போலிக் அமிலம், கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் ஒரு சில சப்ளிமெண்ட்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சில இளம் அம்மாக்களுக்குப் பொருளாதார வசதி, குழந்தைகளையும் தன்னையும் பார்த்துக்கொள்ள அம்மா, மாமியார் என எல்லாமே நிறைவாக இருக்கும். ஆனால், முதல் குழந்தைப் பெற்றபோதே தைராய்டு, டயபடீஸ், உடல் பருமன் என்று உடல்நிலை மோசமாகி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொண்டு இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்.
சில அம்மாக்களுக்கு வேலையின் தன்மை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு வீடும் மன அழுத்தம் தருகிற மாதிரி இருந்தால், நிலைமை கஷ்டம்தான். இரண்டில் ஒரு மன அழுத்தத்தைச் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, அதைச் சரி செய்துகொண்டு இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுங்கள். உதாரணத்துக்கு, வீட்டு வேலைகள் மன அழுத்தத்தைத் தருகிறது என்றால், வீட்டு வேலைகளைக் கணவரையும் பகிர்ந்துகொள்ள சொல்லுங்கள். ஆஃபீஸ் வேலை மன அழுத்தத்தைத் தருகிறது என்றால், 2 வருடங்களுக்கு வேலையை விட்டுவிட்டு குழந்தையை பெற தயாராக இருங்கள்.
உணர்ச்சி ரீதியாக, இரண்டாவது கர்ப்பத்தின் அனுபவம் முதல் கர்ப்பத்திலிருந்து கணிசமாக வேறுபடலாம் என்று மருத்துவர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீப்தி அஷ்வினி கூறுகிறார். தாய்மார்கள் அதிக நம்பிக்கையுடனும் குறைவான கவலையுடனும் இருக்கலாம். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே ஒருமுறை பிரசவத்தை அனுபவித்து, எதிர்பார்ப்பது என்ன என்பதை அறிந்திருக்கிறார்கள். "கர்ப்பத்தின் சவால்களுக்கு அவர்கள் மிகவும் தயாராக இருப்பதாக உணரலாம்,பிரசவம், மற்றும் குழந்தை வளர்ப்பு, ஏற்கனவே வெற்றிகரமாக வழி நடத்தியதை டாக்டர் அஷ்வினி முன்னிலைப்படுத்துகிறார்.
சில தாய்மார்கள் தங்கள் இரண்டாவது கர்ப்பத்தின் போது பல்வேறு உணர்ச்சி சவால்களை எதிர்கொள்வதையும் காணலாம். அவர்கள் இருக்கும் குழந்தைக்கும் புதிய குழந்தைக்கும் இடையில் தங்கள் நேரத்தையும் கவனத்தையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய கவலை அவர்களுக்கு இருக்கலாம்.
ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பகால பயணமும் தனித்துவமானது என்றாலும் கூட, ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும், தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பெரிதும் கை கொடுக்கும். முக்கியமாக எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications