Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
பிரசவத்திற்குப் பிறகு முதுகு மோசமாக வலிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…
கர்ப்பம் அல்லது பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். இதனை தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நம்மைப் பொறுத்தது. ஒரு குழந்தையின் வருகை மிகவும் இனிமையானதாக இருந்தாலும், அத்தகைய வலிகளால் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது. முக்கிய பிரச்சனை முதுகு வலி.
இந்த முதுகு வலி என்பது உடலில் உள்ள தசைநார் தளர்ச்சி, பிரசவத்தின் போது ஏற்படும் உள் அதிர்ச்சி ஆகியவற்றால் ஏற்படலாம். இதற்கு ஐஸ் பேக் அல்லது மருந்தின் உதவியுடன் வீட்டிலேயே சிகிச்சையளிக்க முடியும். சில சமயங்களில் உங்களுக்கு மருத்துவரின் ஆலோசனையும் தேவைப்படலாம். முதுகு வலியில் இருந்து விடுபடுவது எப்படி இந்த பதிவில் என்று பார்க்கலாம் வாங்க...

முதுகுவலிக்க காரணம்
பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வருவதற்கு மிக முக்கிய காரணங்கள், மகப்பேறு காலத்தில் ஏற்படக்கூடிய அதிக உடல் எடை, பின்பு பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையாமல் இருப்பதும், இரண்டாவதாக அவர்கள் உட்காரும் நிலை மற்றும் உட்கார்ந்து குழந்தைக்கு பால் கொடுக்கும் நிலை மிக மோசமாக குனிந்த நிலையில் உட்காருவது, மூன்றாவது, பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகிய காரணத்தினால் சில மாதங்களில் முதுகு வலி வருவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
முதுகுவலியிலிருந்து குணமாக முக்கிய குறிப்புக்கள்
சுகப்பிரசவத்தைவிட, சிசேரியன் (C-Section) டெலிவரிக்கு பிறகு அதிக வலி, கடுமையான இரத்தப்போக்கு, தொற்று ஏற்படலாம். இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நேரம் எடுக்கும், இரத்த உறைவு போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படுவதும் உண்டு. முதுகுவலியை தடுப்பதற்கு சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செய்தாலே போதும், நிச்சயம், முதுகுவலியிலிருந்து முற்றிலும் குணமடையலாம். எனவே கட்டாயம் பிரசவத்திற்கு பிறகு நல்ல ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதும், நிமிர்ந்த நிலையில் குழந்தைக்கு பால் கொடுப்பதும், தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், விரைவில் வலியிலிருந்து குணமாகலாம்.
ஐஸ் பேக்
20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் வீக்கம் குறைவதுடன், உடல் நலமும் பெறலாம். இதனால் முதுகு வலியும் குறையும்.
சூடான குளியல்
தினமும் சூடான குளியல் நல்லது, 10 முதல் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் உட்காரவும். இப்படி செய்வதன் மூலம், இடுப்பை சுற்றியுள்ள தசைகள் நிவாரணம் பெறுகின்றன.
நீட்சி உடற்பயிற்சி
உடல் சிகிச்சை நிபுணரின் உதவியுடன் சில நீட்சிப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளலாம். இதை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
மலச்சிக்கலைத் தவிர்க்கவும்
உங்களுக்கு முதுகுவலி இருந்தால், மலச்சிக்கலைத் தவிர்க்கவும். இது வலியை மோசமாக்குகிறது. இதற்கு, நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் மற்றும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
புரோட்டீன் நிறைந்த உணவுகள்
முதுகுவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், திராட்சை, பிளம்ஸ், பருப்பு, பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இவை உடலில் ஏற்படும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் முதுகு வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க புரதச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒமேகா 3 உணவுகள்
ஒமேகா 3 நிறைந்த உணவுகளான அக்ரூட் பருப்புகள், நெய், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவற்றையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த உணவுகள் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டவை, இது முதுகு வலியைப் போக்க உதவும். தினமும் இரவில் தூங்கும் முன் மஞ்சள் கலந்த பால் குடிக்கவும். மஞ்சள் பாலை உட்கொள்வதால் முதுகு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
எத்தனை நாட்களில் குணமாகும்
பொதுவாக இந்த வலி 4 வாரங்களில் சரியாகிவிடும். ஆனால் சில நேரங்களில் குணமடைய 8 முதல் 10 வாரங்கள் ஆகும். அப்படியும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது அவசியம்.



Click it and Unblock the Notifications