Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஒரு மணி நேர இடைவெளியில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பாகிஸ்தான் பெண்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
ஒவ்வொரு குழந்தையுமே ஒரு அதிசயம்தான், ஆனால் சில அரிதான சந்தர்ப்பங்களில் குழந்தை பிறப்பே அதிசயசமாக மாறுகிறது. அப்படி ஒரு அதிசயம்தான் சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனையில் ஒரு மணி நேரத்தில் ஆறு குழந்தைகளை பிரசவித்த அபூர்வ சம்பவம் நிகழ்ந்துள்ளது. டான் அறிக்கையின்படி, ஜீனத் வஹீத் ஏப்ரல் 19 அன்று ஒரு மணி நேரத்திற்குள் ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என செக்ஸ்டுப்லெட்டுகளைப் பெற்றெடுத்துள்ளார்.

பிரசவ வலி காரணமாக வஹீத் கடந்த வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 18) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவர் வெற்றிகரமாக ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
தாயும் அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் எவ்வித பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். கைக்குழந்தைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன, ஒவ்வொரு குழந்தையும் இரண்டு பவுண்டுகளுக்கும் குறைவான எடையுடன் பிறந்திருக்கிறார்கள்.
"புதிதாக பிறந்த ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர், இருப்பினும் மருத்துவர்கள் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்துள்ளனர்,'' என மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஃபர்சானா பேட்டியில் தெரிவித்தார்.
செக்ஸ்டுப்லெட்ஸ் பிறந்தது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மற்றும் அவர்கள் தங்கியிருந்த காலத்தில் குடும்பத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ பராமரிப்பு மற்றும் வசதிகள் கிடைத்ததை உறுதியளித்தனர்.
" குழந்தைகள் வீட்டிற்குச் செல்லத் தயாராகும் வரை மருத்துவமனையின் குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி, தொடர்ந்து அங்கு மருத்துவ கவனிப்பைப் பெறுவார்கள்" என்றும் கூறியுள்ளார்கள்.
மிகவும் அரிதான நிகழ்வு
ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறப்பது மிகவும் அசாதாரணமான நிகழ்வாகும், அதிலும் sextuplets ஒரு மிகவும் அரிதான நிகழ்வாகும், ஒவ்வொரு 4.5 மில்லியன் கர்ப்பங்களில் ஒரு முறை மட்டுமே இந்த அரிதான நிகழ்வு ஏற்படுகிறது.
ஒரு பெண் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருக்களை சுமக்கும் பல கர்ப்பங்கள், கருவுற்ற முட்டை கருப்பையில் பொருத்துவதற்கு முன்பு பிளவுபடும் போது (இதன் விளைவாக ஒரே மாதிரியான இரட்டையர்கள்) அல்லது வெவ்வேறு விந்தணுக்களால் (சகோதர இரட்டையர்களுக்கு வழிவகுக்கும்) தனித்தனி முட்டைகள் கருவுற்றால் ஏற்படும் என்று க்ளீவ்லேண்ட் கிளினிக் கூறுகிறது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் கொண்ட கர்ப்பங்கள் விதிவிலக்காக அசாதாரணமானவை மற்றும் ஒற்றைக் கர்ப்பத்துடன் ஒப்பிடும்போது இந்த வகை கர்ப்பங்கள் அதிக சிக்கல்களையும், ஆபத்தையும் கொண்டுள்ளன.
இருப்பினும், ஐவிஎஃப் (விட்ரோ கருத்தரித்தல்) மற்றும் கருவுறுதல் மருந்துகள் போன்ற கருவுறுதல் சிகிச்சைகள் அதிகரித்து வருவதால், சமீபத்திய ஆண்டுகளில் பல பிறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சிகிச்சைகள் கருப்பைகள் அதிக முட்டைகளை வெளியிட தூண்டுவதன் மூலம் ஒரே நேரத்தில் பல கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. 1974 இல் தென்னாப்பிரிக்காவில் முதல் அறியப்பட்ட sextuplets பிறந்தார்கள்.



Click it and Unblock the Notifications

