Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..
Vegetables For Diabetes In Tamil: தற்போது உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் சுமார் 101 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமின்றி சுமார் 136 மில்லியன் மக்கள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இப்படி சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணங்களாக கூறப்படுவது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவை தான்.

இதனாலேயே சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். என்ன தான் பழங்களும், காய்கறிகளும் ஆரோக்கியமானவையாக இருந்தாலும், குறிப்பிட்ட பழங்களில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகமாக இருப்பதால், சில பழங்களை மட்டுமே சர்க்கரை நோயாளிகள் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
முக்கியமாக "காய்கறிகளில் அனைத்து காய்கறிகளையும் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், குறிப்பிட்ட 5 காய்கறிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்" என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர். அருண் கார்த்திக் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த 5 காய்கறிகள் என்னவென்பதை இப்போது காண்போம்.
1. கீரை
கீரைகளில் முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் புரோட்டீன் அளவு அதிகமாக உள்ளது. அதுவும் 100 கிராம் கீரையில் 3-4 கிராம் புரோட்டீனும், அதிகளவில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த மூன்று கீரைகளையும் தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருவது நல்லது என்று டாக்டர் கூறினார்.
2. காலிஃப்ளவர்
பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான காலிப்ளவர் பலரது விருப்பமான காய்கறி என்றே கூறலாம். இந்த காலிஃப்ளவரும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற காய்கறியாகும். இதில் 2 கிராம் புரோட்டீனும், 2 கிராம் நார்ச்சத்தும் இருந்தாலும், இதன் தனித்துவமான குணம் தான் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக ஆக்குகிறது. அது தான் பசியைக் கட்டுப்படுத்தும் பண்பு. ஒருவரது பசி கட்டுப்பட்டாலே இரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
3. வெண்டைக்காய்
வெண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதை அனைவருமே அறிவோம். மேலும் பல ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வெண்டைக்காயில் உள்ள மியூசிலாஜ் என்னும் வழுவழுப்பான பொருள், வயிற்றுக்குள் சென்று உணவுடன் கலந்து சர்க்கரையை இரத்தத்தில் மெதுவாக வெளியிடச் செய்யும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வருவது நல்லது.
4. பாகற்காய்
கசப்புச்சுவையுடைய பாகற்காய் சர்க்கரை நோயாளிகள் அனைவருமே சாப்பிடலாம் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறப்பு என்னவென்றால் இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் சி அனைத்தும் 100 கிராம் பாகற்காயின் மூலம் கிடைக்கும். ஆகவே பாகற்காயை சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிகம் சேர்ப்பது சிறந்தது.
5. அவரைக்காய்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மிகவும் சிறந்த காய்கறிகளுள் முதன்மையானது அவரைக்காய். ஏனெனில் 100 கிராம் அவரைக்காயில் 8-9 கிராம் புரோட்டீனும், அதிகளவு நார்ச்சத்துக்களும் உள்ளன. குறிப்பாக இதில் அயனோஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இந்த அவரைக்காய் மிகவும் அருமையான தேர்வாக இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
