For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்களே! உங்க குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

உங்கள் பிள்ளை அதிக எடையுடன் இருந்தால், உடல் எடையை குறைப்பது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். அவருடன் பேசுங்கள் மற்றும் அவரது உடல்நிலையை பராமரிக்க உடல் எடையை குறைப்பது ஏன் முக்கியம் என்பதை அவருக்கு புரிய வைக்கவு

|

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலனவருக்கு சர்க்கரை நோய் காணப்படுகிறது. வயது வித்தியாசம் இன்றி இந்நோய் அனைவரிடத்திலும் உள்ளது கவலையை ஏற்படுத்துகிறது. எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் வகை 2 நீரிழிவு நோயைத் தடுக்க உதவும். உடல் பருமன், அதிக கொழுப்பு அல்லது நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு காரணமாக நீங்கள் அதிக ஆபத்தில் இருந்தால், சர்க்கரை நோய் தடுப்பு இன்னும் முக்கியமானது. நீரிழிவு நோய் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பொதுவானது. குழந்தைகளைப் பொறுத்தவரை, இந்த நிலையைத் தடுக்க பெற்றோர்கள் பல விஷயங்களைச் செய்யலாம்.

Healthy diet to keep your children safe from the risk of diabetes in tamil

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்ப்பதன் மூலம் நீங்கள் சர்க்கரை நோயை வராமல் ஆரம்பத்திலே தடுத்து நிறுத்தலாம் மாற்றலாம். ஏனென்றால், நீங்கள் செய்வதைப் பார்த்து குழந்தைகள் விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்க எடுக்கக்கூடிய சில எளிய வழிமுறைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுறுசுறுப்பாக இருங்கள்

சுறுசுறுப்பாக இருங்கள்

பொதுவாக குழந்தை பருவத்தில் எல்லா குழந்தைகளும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எதையாவது ஒன்றை செய்து கொண்டு விளையாடி கொண்டு இருப்பார்கள். ஆனால், இந்த நாட்களில், குழந்தைகள் பெரும்பாலும் திரையில் ஒட்டப்படுகிறார்கள். ஆதவாது செல்போனில் நேரத்தை செலவழிக்கிறார்கள். மேலும், கொரோனா தொற்றுநோய் அவர்களின் உடல் செயல்பாடுகளை இன்னும் குறைத்துள்ளது. நடந்து செல்லுங்கள், அவர்களுடன் பந்து விளையாடுங்கள், அவர்கள் விரும்பும் உடல் விளையாட்டுகளை விளையாடுங்கள். குழந்தைகளுக்கு தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் உடல் செயல்பாடு தேவை.

எடையை நிர்வகிக்கவும்

எடையை நிர்வகிக்கவும்

உங்கள் பிள்ளை அதிக எடையுடன் இருந்தால், உடல் எடையை குறைப்பது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். அவருடன் பேசுங்கள் மற்றும் அவரது உடல்நிலையை பராமரிக்க உடல் எடையை குறைப்பது ஏன் முக்கியம் என்பதை அவருக்கு புரிய வைக்கவும். உடற்பயிற்சி தினமும் செய்ய சொல்லுங்கள். நீங்களும் சேர்ந்து செய்யுங்கள்.

சர்க்கரையை குறைக்கவும்

சர்க்கரையை குறைக்கவும்

குழந்தைகள் இனிப்பான தின்பண்டங்களை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் அதை ஒரு கண் வைத்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின் சர்க்கரை உட்கொள்ளலை குறைக்க வேண்டும். அவர்களுக்கு மிட்டாய்கள், இனிப்பு தின்பண்டங்கள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுகளை எப்போதும் ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டாம்.

ஆரோக்கியமான தின்பண்டங்களை வழங்குங்கள்

ஆரோக்கியமான தின்பண்டங்களை வழங்குங்கள்

சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு பழங்கள், முழு தானியங்கள் மற்றும் நட்ஸ்கள் கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள். ஒரு நேரத்தில் ஒரு உணவை அறிமுகப்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதன் மூலம் அவர்கள் அதை சுவைக்க முடியும். சிறுதானிய ஸ்நாக்ஸ்களையும் கொடுக்கலாம்.

திரை நேரத்தை வரம்பிடவும்

திரை நேரத்தை வரம்பிடவும்

அதிக நேரம் செல்போனை பார்த்துக்கொண்டிருப்பது, விளையாடுவது கண் பிரச்சனைகள், தூக்க பிரச்சனைகள் மற்றும் குறைவான உடல் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

இரவு உணவை நேரத்துக்குச் சாப்பிடுங்கள்

இரவு உணவை நேரத்துக்குச் சாப்பிடுங்கள்

இரவு உணவு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். சாப்பிடும்போது, கவனம் சாப்பிடுவதில் மட்டும் இருக்க வேண்டும். தொலைக்காட்சியை அணைத்து வைத்து சாப்பிடும் போது வேறு எந்த வித கவனச்சிதறலையும் தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy diet to keep your children safe from the risk of diabetes in tamil

Healthy diet to keep your children safe from the risk of diabetes in tamil
Story first published: Saturday, November 13, 2021, 18:19 [IST]
Desktop Bottom Promotion