For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்த சில வேடிக்கையான வழிகள்!

By Maha
|

Fun Ways to Tell Family You're Pregnant
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த உடனேயே, அந்த மகிழ்ச்சியான செய்தியை இந்த உலகிற்கு வெகு வேகமாக சொல்ல விரும்புவார்கள். ஆனால், இந்த முக்கியமான செய்தியை அனைவரிடமும் சொல்லும் முன், எங்கு மற்றும் எப்படி சொல்ல வேண்டும் என்பதை சற்று நேரம் யோசித்து, சற்று வித்தியாசமான மற்றும் வேடிக்கையான முறையில் சொன்னால், ஆச்சரியாமாக இருக்கும் அல்லவா? எனவே, கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெளிப்படுத்த சில வேடிக்கையான வழிகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குடும்பத்தில் உள்ளோருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து மகிழுங்கள்.

கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் நேரம்

தாங்கள் பெற்றோர் ஆகப் போவதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்வதற்கு சிலர் முதல் மூன்று மாதங்கள் முடியும் வரை காத்திருப்பார்கள். அவர்கள் காத்திருப்பதற்கு காரணம், அந்த முதல் சில மாதங்களில் ஏதேனும் தவறு நடந்து விட்டால், அவர்கள் தங்கள் வார்த்தைகளை திரும்ப பெற வேண்டியதில்லையல்லவா! மற்றும் சிலர், எப்படியாயினும், இந்த விஷயத்தில் என்ன நடந்துள்ளதோ அதனை சொல்ல முடிவெடுப்பார்கள் அப்போது என்ன நடந்தாலும், அவர்களால் தங்களுடைய மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் அவர்களுடைய ஆதரவை பெறவும் முடியும்.

குழந்தைகளை நினைவுபடுத்தும் வகையில் விருந்தளிப்பது

உங்கள் குடும்பத்திற்கு ஒரு இரவு விருந்து அளியுங்கள், அதில் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்க ஒரு வேடிக்கையான வழி என்னவென்றால், அனைத்து உணவு வகைகளையும் 'குழந்தை' வடிவில் செய்வதுதான். அதில் குழந்தைகளின் விரல்களைப் போல கேரட்டையும், குழந்தைகளின் முதுகெலும்பு போல உணவை வடிவமைப்பதும் மற்றும் குழந்தைகள் குடிக்கும் கோப்பையில் ஆப்பிள் ஜீஸ் கொடுப்பது போன்றவற்றை உள்ளடங்கியிருக்கும். அப்பொழுது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இதன் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார்களா என்று கவனியுங்கள். அப்படியில்லையென்றால், அதனை அவர்ளுடைய கவனத்திற்கு கொண்டு வாருங்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களிலும் எழும் ஆச்சரியமான புரிந்துகொள்ளும் உணர்வுடைய பார்வைக்காக காத்திருங்கள்.

போட்டோ எடுக்கும் போது கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கலாம்

உங்களுடைய குடும்பம் ஒன்றாக இருக்கும் போது நீங்களோ அல்லது உங்களது கணவரோ உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக நின்று போட்டோவிற்கு போஸ் கொடுக்க சொல்லுங்கள். அனைவரும் போட்டோவிற்கு தயாராக இருக்கும் வேளையில், போட்டோவை எடுப்பவர், கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சத்தமாக சொல்ல வேண்டும். அப்பொழுது உங்களுக்கு பல்வேறு ஆச்சரியமான முக பாவங்களை உடைய மனிதர்களும் மற்றும் இந்த விஷயத்திற்காக வெளிப்பட்ட அவர்களுடைய உணர்வுகளையுடைய விலை மதிப்பற்ற படமும் கிடைக்கும்.

டி-சர்ட் கொடுப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம்

உங்கள் குழந்தை முதல் பேரப்பிள்ளையாகவோ, சகோதர / சகோதரிகளின் மகன் அல்லது மகளாகவோ இருந்தால், இந்த முறை வேடிக்கையானதாக இருக்கும். அனைவரையும் விருந்துக்கு வரவழைத்து, 'பாட்டி', 'மாமா' மற்றும் 'சித்தப்பா' என்ற வார்த்தைகளையுடைய டி-சர்ட்களை அவர்களுக்கு பரிசளியுங்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய டி-சர்ட்களை திறந்து பார்க்கும் போது, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிந்திடுங்கள். இதற்காக கேமராவை தயாராக வைத்துக் கொண்டு, அந்த நேரம் போட்டோ எடுக்கலாம்.

கர்ப்பத்தை அறிவிக்கும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

உங்கள் கர்ப்பம் எதிர்பார்க்கப்படாததாகவோ அல்லது குடும்பத்தில் யாருக்காவது உண்மையில் விருப்பமில்லாததாகவோ இருந்தால், உங்கள் அறிவிப்பை சற்று அடக்கி வாசியுங்கள். ஏனெனில் பின்வரும் ஆண்டுகளில் உங்கள் ஆல்பத்தில் வைக்கும் போட்டோவில் யாருடைய முகமும் சோகமாக இருப்பது நன்றாக இருக்காது.

English summary

Fun Ways to Tell Family You're Pregnant | கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்த சில வேடிக்கையான வழிகள்!

Once you find out you're pregnant, you may be eager to announce your news to the world as soon as possible. But before you begin telling everyone, you may want to take some time to consider when and how you will break the momentous news.
Story first published: Saturday, January 19, 2013, 15:04 [IST]
Desktop Bottom Promotion