For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை பெற்றுக் கொள்ள மிகவும் சரியான வயது எது?...

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பலவிதம். சிலர் குழந்தைப் பேறை தள்ளிப்போடுகிறார்கள். சிலர் வேலைக்கு செல்வதால் குடும்ப பொறுப்பின் காரணமாக குழந்தைப் பெற்றுக்கொள்வது தள்ளிப்போகிறது.

|

குடும்ப வாழ்கையை தொடங்க சரியான வயது அல்லது நேரம் என்ற ஒன்று இல்லை என்று நிபுணர்கள் ஒரு பக்கம் வாதிடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு வயதுக்கேற்ப கர்ப்பம் அடைவதற்கான நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன.

pregnancy tips in tamil

கருவுறுதல் விகிதங்கள் காலப்போக்கில் மாறுபடுவதோடு மட்டுமல்லாமல், தனி நபரைப் பாதிக்கக்கூடிய பிற கவலைகள் உள்ளன. நீங்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள சிறந்த நேரம் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தால், இங்கே நன்மை தீமைகள் பற்றி கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் கவனத்தில் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
20-24 வயது

20-24 வயது

1. உடலமைப்பு

கருவுறுவதற்கு மிகச் சிறந்த காலம் இது. இந்த காலகட்டத்தில் மாதவிடாய் சீராக இருக்கும். கருமுட்டை உற்பத்தியும் வளமாக இருக்கும். கர்ப்பம் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் 20% உண்டு. குறிப்பாக ஹைபர்டென்ஷன் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கலாம். மேலும் இந்த காலகட்டத்தில் கர்ப்பகால நீரிழிவு அபாயம் பாதியாக குறைக்கப்படுகிறது.

2. உணர்வு ரீதியாக

தங்கள் உடலின் வடிவம் பற்றிய சிக்கல்களை பற்றி அதிகமாக கவலைப்படும் காலம் இது என்பதால் கருவுறுதலில் பிரச்சனை உண்டாகலாம். மேலும், இந்த காலகட்டத்தில் பொதுவாக பெண்கள் தங்கள் வேலை, படிப்பு மற்றும் திருமணம் போன்ற விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதால், குழந்தை பிறப்பு என்பது கடினமாகிறது.

3. குழந்தைக்கு பாதிப்பு

குழந்தை பிறப்பில் குறைவான ஆபத்து கொண்ட காலம் இதுவாகும். 9.5% கருச்சிதைவிற்கான வாய்ப்புகள் உண்டு. பிறப்பு குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அதாவது, 1667ல் 1 குழந்தை மட்டுமே பிறப்பு குறைபாட்டுடன் பிறக்கலாம் என்று கூறப்படுகிறது. அல்லது மரபுத்திரி பிறழ்ச்சி என்னும் குரோமோசோம் அசாதாரனநிலைக்கான வாய்ப்பு 526ல் 1 என்ற விகிதத்தில் உள்ளது.

25-29 வயது

25-29 வயது

1.உடலமைப்பு

சரியான உடற்பயிற்சி மற்றும் உணவு முறை மூலமாக எளிதான பிரசவம் மற்றும் பிரசவத்திற்கு பின், முந்தய உடலமைப்பை உங்களால் இந்த காலகட்டத்தில் பெற முடியும். இது கருவுறுவதற்கு உகந்த ஆரோக்கியமான நேரம் ஆகும். மற்றும் இந்த நேரத்தில் கருத்தரித்தல் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஆபத்துக்களை குறைக்க உதவும்.

2. உணர்வு ரீதியாக

மேலும் நிறுவப்பட்ட பணி வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை காரணமாக, இது பெற்றோருக்குரிய மன அழுத்தம் மற்றும் மாற்றங்களை கையாள ஒரு நல்ல நேரம் இருக்கலாம்.

3. குழந்தைக்கு பாதிப்பு

10% சற்று அதிகமான கருச்சிதைவு விகிதம் இருந்தாலும் , குறைந்த ஆபத்து கர்ப்பத்திற்கான நல்ல நேரமாக இந்த காலம் உள்ளது. மரபுத்திரி பாதிப்பு (476ல் 1 ) மற்றும் வளர்ச்சி பாதிப்புகள்(1250ல் 1 ) என்று நிலையில் உள்ளது. இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும் அவற்றைப் புறக்கணிக்கலாம்.

30-34 வயது

30-34 வயது

1. உடலமைப்பு :

கருவுறுதல் விகிதம் 30 வயது முதல் குறையத் தொடங்குகிறது. கருவுறாமை சிகிச்சை முறைகள் இந்த காலகட்டத்தில் அதிக வெற்றி விகிதத்தைப் பெறுகின்றன. IVF சிகிச்சை முறையில் 25-28% வெற்றி வாய்ப்புகள் உள்ளன. இதே சிகிச்சை 40 வயதில் அளிக்கப்படும்போது இதன் வெற்றி வாய்ப்புகள் 6-8% மட்டுமே உள்ளது. 20களில் இருக்கும் பெண்களின் அறுவை சிகிச்சை வாய்ப்புகளை விட இரண்டு மடங்கு அதிக வாய்ப்புகள் இந்த வயதில் உள்ளது.

2. உணர்வு ரீதியாக

இந்த காலகட்டத்தில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள எல்லா விதத்திலும் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றல் மற்றும் ஆதாரம் அதிகமாக இருக்கும். ஆனால் குழந்தை பிறப்பிற்கு பின் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற அச்சம் மட்டும் உள்ளுக்குள் இருக்கும்.

3. குழந்தைக்கு பாதிப்பு

கருச்சிதைவு விகிதம் 11.7% ஆகும். மரபுத்திரி பிறழ்ச்சி 385ல் 1 என்ற விகிதத்தில் இருக்கலாம். மூளை வளர்ச்சியின்மை என்னும் டவுன் சின்றோம் பாதிப்பு 952ல் 1 என்ற விகிதத்தில் உள்ளது.

35-45 வயது

35-45 வயது

35 வயதிற்கு பிறகு கருவுறுதலுக்கான வாய்ப்பு குறைந்து கொண்டே இருக்கும். குறிப்பாக 38 வயதில் கூர்மையான வீழ்ச்சியை எட்டுகிறது. இந்த காலகட்டத்தில் சினை முட்டைகள் வயதும் அதிகரித்து இருக்கும். கருவுறுவதற்கான சிகிச்சைகள் இந்த காலத்தில் கடினமாக இருக்கும். சில சிகிச்சை மையங்களிலும் கருவுறாமை சிகிச்சைக்காக 38 வயதிற்கு மேல் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை. உயர் இரத்த அழுத்த அபாயம் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது .ஹைபர் டெண்ஷம் வாய்ப்புகள் 10-20% இருக்கும். கர்ப்பகால நீரிழிவு அபாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் சி செக்ஷன் என்னும் அறுவை சிகிச்சை வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம் உண்டு.

1. உணர்வு ரீதியாக

மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகள் மற்றும் பனிக்குட துளைப்பு போன்றவை அவசியமாகிறது. இதன் காரணமாக பதட்டம் உண்டாகலாம்.

2. குழந்தைக்கு பாதிப்பு

இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கிறது. கருச்சிதைவு விகிதம் 18% உள்ளது. மேலும் குழந்தை இறந்து பிறக்கும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

40 வயதிற்கு மேல்

40 வயதிற்கு மேல்

1. உடலமைப்பு

இந்த காலத்தில் கர்ப்பம் தரிப்பது மிகவும் கடினம். கருவுறாமை சிகிச்சையில் 25% மட்டுமே வற்றி வாய்ப்புகள் உண்டு. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிரசவ கால சிக்கல்கள் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் உண்டு. முன்கூட்டிய குழந்தை பிறப்பு, குழந்தை இறந்து பிறப்பது போன்றவற்றிற்கான வாய்ப்புகளும் அதிகம்.

2. உணர்வு ரீதியாக

அனுபவம், புத்திசாலித்தனம் மற்றும் பொருளாதாரத்தில் மேலோங்கி இருப்பதால், இந்த அனுபவம் குறித்த பயம் குறைவாக இருக்கும். இருப்பினும், ஒட்டுமொத்த ஆற்றல் குறைவாக இருக்கும்.

குழந்தைக்கு பாதிப்பு

குழந்தைக்கு பாதிப்பு

கருச்சிதைவு விகிதம் 24-40% உண்டு. பிறக்கும் குழந்தைக்கு டைப் 1 நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயம் இருக்கலாம். 40வயதில் கருவுறுவதால் 100ல் ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்மையுடன் பிறக்கும் வாய்ப்புகள் உண்டு. அதுவே 45 வயதிற்கு மேல் கருவுறும்போது இந்த பாதிப்பு 30 குழந்தையில் ஒரு குழந்தைக்கு ஏற்படலாம் என்று அறியப்படுகிறது. ஆகவே சரியான பரிசோதனைகள் மேற்கொள்வது இந்த பாதிப்பை குறைக்கும்.

ஆகவே, குழந்தை பெற்றுக் கொள்ள சரியான காலகட்டம் 20-29 வயது. ஆனால் பொருளாதார நிலைமை மற்றும் இதர காரணங்கள் தான் இந்த முடிவை நிர்ணயக்கும். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள நன்மை தீமைகளை துணைவருடன் கலந்து ஆலோசித்து கருவுறுதலுக்கு திட்டமிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: how to எப்படி
English summary

What is the right age for pregnancy?

a woman has multiple priorities. You would definitely want to have a settled career and a committed partner before you think of embracing motherhood.
Story first published: Friday, July 20, 2018, 10:54 [IST]
Desktop Bottom Promotion