For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதெல்லாம் சாப்பிட்டா சீக்கிரம் கர்ப்பம் தரிச்சிடுமாம்... குழந்தைக்கு ட்ரை பண்றவங்க உடனே சாப்பிடுங்க.

கர்ப்பமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில உணவுகளை உட்கொண்டால் போதும் உங்கள் கருவுறும் ஆசை எளிதாக நிறைவேறி விடும்.

|

ஒவ்வொரு பெண்ணும் தாயாக ஆகுவதைத் தான் மிகவும் விரும்புவாள். ஒரு பிஞ்சு குழந்தை தன் வயிற்றில் வளருகிறது என்றால் சந்தோஷமடையாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

pregnancy

அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு தகுந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் ஒரு தாய் வழங்க வேண்டும். நீங்கள் கருவுற கூட இந்த ஊட்டச்சத்துகள் உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியம். இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் போதும் உங்கள் கருவுறும் ஆசை எளிதாக நிறைவேறி விடும். அதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருவுறுதல்

கருவுறுதல்

நீங்கள் தாயாக ஆசைப்படுகிறீர்களா? அப்போ இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க. நல்ல ஆரோக்கியமான உணவுகளை முதலில் எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள். ஏனெனில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது என்று ஹோலி க்ரிங்கர், ஆர்.டி., வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து வல்லுனர் ஒரு தாயுக்கு கூறுகிறார்.

அதே மாதிரி உங்கள் உடல் எடையை சரியாக பராமரிப்பதும் மிகவும் முக்கியம். 30% கருவுறாமை நிகழ காரணம் அதிகமான உடல் பருமன் இதன் விளைவாக ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது என்று தேசிய கருவுறாமை சங்கம் தெரிவிக்கிறது.

எனவே நீங்கள் இப்பொழுதே தாயாக ஆசைப்பட்டால் இந்த 9 உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும் உங்கள் ஆசையும் கனவும் உங்கள் கையில் அமையும்.

புரோட்டீன்

புரோட்டீன்

புரோட்டீன் நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். அமெரிக்க விவசாய பிரிவு கூறும் கருத்தாவது அமெரிக்கர்கள் அதிக அளவு விலங்கினங்களின் புரோட்டீனை எடுத்துக் கொள்கின்றனர் என்கின்றனர். எனவே நீங்கள் இந்த மாமிச புரோட்டீனுக்கு பதிலாக தாவரங்களிலிருந்து கிடைக்கும் புரோட்டீன்களை பயன்படுத்துவது நல்லது. காய்கறிகள் அல்லது பால் பொருட்கள், பருப்பு வகைகள், நட்ஸ், டோஃபு போன்ற பொருட்களில் இருந்து கிடைக்கும் புரோட்டீன்களுக்கு தாய்மையை உண்டு பண்ணும் பவர் இருக்கிறது என்று ொது சுகாதாரத்தின் கீழுள்ள ஹார்வர்டு பள்ளியின் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. விலங்கின் மாமிசத்திலிருந்து பெறப்படும் புரோட்டீன்கள் 36% கருவுறாமையை மட்டுமே கொடுக்கிறது. ஆனால் நீங்கள் தாவரங்களில் இருந்து பெறப்படும் புரோட்டீன்களை எடுத்துக் கொண்டால் சீக்கிரமே தாய்மை அடைய இயலும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஸ்கிரிட்ஃபீல்ட், ஆர்டி, வாஷிங்டன், டி.சி என்ற டயட்டீசியன் கூறுகிறார்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பாலால் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் உங்கள் தாய்மைக்கு உதவும். காரணம் இதிலுள்ள கொழுப்புகள். செவிலியர் சுகாதார ஆய்வில் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு நாளும் பால் அல்லது பால் பாலாடை போன்ற முழு பால் உணவுகள், யோகார்ட், சீஸ், தினமும் சாப்பிட்டு வந்தால் கருத்தரிப்பு நிகழ்கிறது என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் கருவுறாமையை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். பாலிருந்து பெறப்படும் கொழுப்புகள் உடலுறவு ஹார்மோனை தூண்டி ஓவுலேசன் நிகழ்வை சரியாக்குகிறது.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து

நீங்கள் தாய்மை ஆக கண்டிப்பாக இரும்புச் சத்து மிகவும் முக்கியம். நீங்கள் கருவுற்ற பிறகு உங்கள் இரும்புச் சத்து குழந்தைக்கு சென்று விடுவதால் அனிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவு பராமரிக்க வேண்டும். செவிலியர் இரண்டாம் தர ஆய்வுத் தகவல் படி இரும்புச் சத்து உணவுகளான பீன்ஸ், பருப்பு வகைகள், கீரைகள், தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று "ரெபேக்கா ஸ்கிரிட்ஃபீல்டின், RD, வாஷிங்டன், டயட்டீசியன் கூறுகிறார். மருத்துவரை ஆலோசித்து இரும்புச் சத்துடன் விட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது இன்னும் நல்லது என்கிறார் அவர்.

தானியங்கள்

தானியங்கள்

தானியங்களை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் போலிக் அமிலத்தின் அளவு அதிகரித்து நீங்கள் சீக்கிரம் தாய்மை அடைய உதவும். மேலும் உணவு கட்டுப்பாடு வாரியம் 1998 ல் வெளியிடப்பட்ட கருத்துப்படி போலிக் அமிலம் அடங்கிய தானியங்கள் நரம்பு குழாய் குறைபாட்டை தடுக்கிறது என்கின்றனர். இந்த போலிக் அமில விட்டமின் பி சத்து நமது உடலில் புதிய செல்கள் உருவாக்கத்தை கொடுக்கிறது. எனவே ஒரு பெண் கருவுற இந்த போலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஒன்று. மேலும் இது கருவில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று ரெபேக்கா ஸ்கிரிட்ஃபீல்ட் என்பவர் கூறுகிறார். அமெரிக்க வேளாண்மை துறை கருத்துப்படி ஒரு நாளைக்கு 6 அவுன்ஸ் தானியங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிகின்றனர். இல்லையென்றால் 3 அவுன்ஸ் முழுதானியமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ

ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அல்லது 8 அவுன்ஸ் காபி என்று இரண்டு முறை பருகலாம் என்று சில மருத்துவ எக்ஸ்பட்ஸ் கூறுகின்றனர். ஆனால் தற்போது நடைபெற்ற மெட்டா பகுப்பாய்வு கருத்துப்படி ஒரு நாளைக்கு 100 மில்லி கிராம் அளவு காஃபைன் எடுத்தாலே போதும் 14% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே மாதிரி 19% பிறப்புக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐரோப்பிய நோய்த்தாக்கம் பற்றிய ஐரோப்பிய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே காஃபைன் இல்லாத ஹெர்பல் டீயை குடியுங்கள். லெமன் இஞ்சி டீ, சிட்ரஸ் லாவண்டர், கோக்கோ கேரமல் போன்ற டேஸ்டியான ப்ளோவர் கூட நீங்கள் தேர்ந்தெடுத்து பருகலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைய பைட்டோ நியூட்ரிஷன் அடங்கியுள்ளது. இது உங்கள் உடலுக்கு மிகவும் சிறந்தது. இந்த பைட்டோ கெமிக்கல்கள் உங்களுக்கு தாய்மை அடைய உதவும். பூசணிக்காய், மாதுளை, கலே, மிளகாய் இவைகள் இயற்கையாகவே விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை உடலுக்கு வழங்குகிறது என்று உணவு நிபுணரான ஹோலி க்ரிங்கர் கூறுகிறார். இந்த காய்கறிகள் சேர்த்து பாஸ்தா, முட்டை கறி, பழங்கள் சேர்த்த ஸ்மூத்தி, வெஜ்ஜி ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வரலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் ஒரு மோனோசேச்சுரேட் கொழுப்பு ஆகும். இது நமது உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டி அழற்சியை குறைக்கிறது. ஏனெனில் அழற்சி நமது ஓவுலேசன் முன்னதாகவே நடக்க வைத்து விடும். எனவே சரியான நேரத்தில் ஓவுலேசன் நடப்பதை தூண்டுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், பேக்கிடு உணவுகள் இவற்றை தவிர்த்து ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் சீரற்ற ஓவுலேசனை சரி செய்ய இயலும். ஹார்வர்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த கொழுப்பு அடங்கிய உணவுகள், கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த கொழுப்பு அடங்கிய பால் பொருட்கள் இவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு கருத்தரிப்பு எளிதாகிறது என்கின்றனர். எனவே உங்கள் உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவரான ரெபெக்கா ஸ்கிரிட்ஃபீல்ட் கூறுகிறார்.

மீன்கள்

மீன்கள்

சால்மன், இறால், டிலாபியா, காட்பிஷ் போன்ற மீன்களில் மெர்குரி அளவு குறைவாகவுமக ்ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் உள்ளது. இவை கருத்தரிப்பிற்கான ஹார்மோனை உயர்த்தி இனப்பெருக்க மண்டலத்திற்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளிக்கிறது. எனவே வாரத்திற்கு சில முறை மீன் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள டோடோஸாஹெக்சேனெனிக் அமிலம் (டிஹெச்ஏ) மற்றும் ஈசோசாபெண்டனெனிக் அமிலம் (ஈ.பீ.ஏ)அல்லது இந்த எண்ணெய் அடங்கிய மாத்திரைகளை 1000 மில்லி கிராம் ஒரு நாளைக்கு என எடுத்து வரும் போது நல்ல பலன் கிடைக்கும். மேலும் 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் ஒமேகா 3 மற்றும் ஏஎல்ஏ போன்றவைகள் உள்ளன என்று சூசன் பி. டோபார்ட், MS, RD, CDE, கூறுகிறார். இதன் மூலம் நீங்கள் ஒரு ஆரோக்கியமான கருவுறுதலை உண்டாக்க இயலும் என்கிறார். அதே நேரத்தில் அதிக மெர்குரி அடங்கிய மீன்களான சார்க், ஸ்வார்டுபிஷ்,கானாங் கெளுத்தி, வால் மீன்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

விட்டமின்கள்

விட்டமின்கள்

இதே போல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான விட்டமின்களும் அவசியம். அதிலும் தாய்மை அடைய நினைக்கும் பெண்களுக்கு இது மிகவும் முக்கியமானது. எனவே எல்லா ஊட்டச்சத்துகளும் அடங்கிய விட்டமின்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். போலிக் அமிலம் (400 மைக்ரோ கிராம்), டிஎச்ஏ (200-300மில்லி கிராம்) என்று டயட்டீசியன் ரெபேக்கா ஸ்கிரிட்ஃபீல்ட் கூறுகிறார்.இந்த இரண்டு சத்துகளும் கருவுறுவதற்கு முன்பும் பின்பும் அவசியம் என்கிறார் அவர். எனவே நீங்கள் தாய்மை அடைய நினைக்கும் 3 மாதங்களுக்கு முன்பே இந்த மாதிரியான விட்டமின்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பு இந்த சத்துகளை சேர்த்து வைத்து எளிதில் கருத்தரிக்க உதவும். மாத்திரைகளாக எடுக்கும் போது குமட்டல் போன்றது தென்பட்டால் மருத்துவரிடம் அணுகி விட்டமின் ட்ரிங் மாதிரி குடியுங்கள்.

என்னங்க இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க? இந்த உணவுகளை உங்கள் உணவுப் பழக்கத்தில் எடுத்துக் கொண்டு சீக்கிரம் சந்தோஷமான செய்தியை உங்கள் கணவரிடம் பரிமாறுங்கள். ஒரு ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Foods to Eat Now If You Want to Get Pregnant

Trying to get pregnant? Consider a date night to the grocery store. "Keeping your body healthy by eating good-for-you foods
Story first published: Thursday, June 7, 2018, 17:16 [IST]
Desktop Bottom Promotion