கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!!

Posted By:
Subscribe to Boldsky

கருத்தடை மாத்திரைகள் என்பது தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்க பயன்படுத்தப்படுவது. பெரும்பாலும் இந்த மாத்திரைகள் சாதாரணமாகவே மருந்தகங்களில் கிடைக்கின்றன. புதுமண தம்பதிகளுக்கு இது ஒரு வரப்ரசாதமாக திகழ்கிறது.

உடலில் டாட்டூ குத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

ஆனால், இந்த வரப்ரசாத்தில் இருக்கும் விஷமம் பற்றி பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. கருத்தடை மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதனாலும், முறை தவறி பயன்படுத்துவதனாலும் ஓர் கட்டத்தில் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு பெண்கள் தள்ளப்படும் அபாயம் இருக்கின்றது.

ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

கருக்கலைப்பு செய்வதனால் பெண்களுக்கு உடல்நிலை வலுவிழக்கிறது என்பதனால் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி இனி காணலாம்....

காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயது வரம்பு

வயது வரம்பு

கருத்தடை மாத்திரைகள் 25 - 45 வயதுள்ள பெண்களுக்கு, அவர்களது உடல் நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது என்பது பெரும்பாலுமான மக்களுக்கு தெரிவதில்லை. பதின் வயது பெண்கள் இதை உட்கொண்டால் நிரந்திரமாக அவர்களால் கருத்தரிக்க முடியாத அளவு பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் இடையூறு

மாதவிடாய் இடையூறு

கருத்தடை மாத்திரை என்பது அவசர தேவைக்கானது ஆகும். சிலர் அடிக்கடி இதை உட்கொள்வதனால் மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்பட இவை காரணமாகிவிடுகின்றன.

உறவில் நாட்டம் குறைபாடு

உறவில் நாட்டம் குறைபாடு

அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதனால் உடலுறவில் நாட்டம் குறைய வாய்ப்புகள் இருக்கிறதாம். இது, உணர்சிகளை குறைத்துவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

அதிகமாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதனால், குமட்டல், தலைவலி, வாந்தி, கீழ் வயிற்று வலி, உடல் எடை அதிகரித்தல், மாதவிடாய் தள்ளிபோவது, மார்பகங்கள் உணர்ச்சி மாற்றம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுமாம்.

எடுத்துக் கொள்ள வேண்டிய முறை

எடுத்துக் கொள்ள வேண்டிய முறை

பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக் கொண்ட உடனேயே அல்லத 48 மணிநேரத்திற்குள் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லை எனில் அது வேலை செய்யாது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Caused By Emergency Contraceptives

Do you know about the side effects caused by emergency contraceptives? read here.
Subscribe Newsletter