For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருத்தரிக்க முயலும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!!!

By Maha
|

கருத்தரிப்பதற்கும், உணவிற்கும் எப்படி சம்பந்தம் இருக்கும் என்று பலர் கேட்கலாம். ஆனால் உண்மையிலேயே கருத்தரிப்பதற்கும் உணவிற்கும் நிறைய தொடர்பு உள்ளது. எப்படி கருத்தரிக்க முயலும் போது ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால் எளிதில் கருத்தரிக்கலாமோ, அதேப்போல் ஒருசில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். இல்லாவிட்டால், கருத்தரிப்பதே சிரமமாகிவிடும். ஏனெனில் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் இனப்பெருக்க மண்டலமானது பலவீனமாக உள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் மற்றும் கருத்தரிப்பதற்கு இடையூறாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இங்கு அப்படி கருத்தரிப்பதற்கு இடையூறாக இருக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து கருத்தரிக்க நீங்கள் முயற்சித்தால், அவற்றை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன்

மீன்

உங்களுக்கு மீன் என்றால் கொள்ளை பிரியமா? ஆனால் நீங்கள் கருத்தரிக்க முயற்சித்தால், மீன் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள மெர்குரி கர்ப்பப்பையில் கருவை நிலைக்க விடாது.

சோடா

சோடா

சோடாவில் சர்க்கரை அதிகம் இருப்பதால், அதனைப் பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இதனால் கருத்தரிக்க முயலும் போது, அது இடையூறை ஏற்படுத்தும்.

ஆல்கஹால் வேண்டாம்

ஆல்கஹால் வேண்டாம்

ஆல்கஹால் குடித்தால், கருத்தரிப்பதிலேயே பிரச்சனை ஏற்படுவதுடன், கருச்சிதைவும் ஏற்படும். எனவே இதனை அறவே தவிர்க்க வேண்டும்.

காபி

காபி

காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியானது கரு உருவாவதற்கு தேவையான இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தடையை ஏற்படுத்தும். அதற்காக முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு கப் அருந்தலாம்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

ஆய்வு ஒன்றில் சோயாவை அதிகம் உட்கொண்டு வந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கருத்தரிக்க முயலும் போது, சோயா பொருட்களை டயட்டில் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

சரியாக வேக வைக்காத உணவுப் பொருட்கள்

சரியாக வேக வைக்காத உணவுப் பொருட்கள்

கருத்தரிக்க முயலும் போது, நன்கு வேக வைக்காத மற்றும் பச்சையான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம். குறிப்பாக அசைவ உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக வேக வைக்காத அசைவ உணவுகளில் உள்ள பாக்டீரியாவானது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். முக்கியமாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்க்கவும். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது கூட அதனை நன்கு நீரில் கழுவிய பின்னரே உட்கேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Avoid Before Getting Pregnant

When you avoid these foods the chances of conceiving is higher. On the other hand, avoiding these foods will also help keep away any problems for the baby.
Story first published: Friday, November 7, 2014, 17:52 [IST]
Desktop Bottom Promotion