For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் விரல் சூப்பினால், அவர்களுக்கு எத்துப்பல் குறைபாடு ஏற்படுமா?

குழந்தைகள் விரல் சூப்புவது ஒரு பொதுவான பிரச்சனை; குழந்தைகள் விரல் சூப்பினால், அவர்களுக்கு எத்துப்பல் குறைபாடு ஏற்படுமா என்று இங்கு பார்க்கலாம்.

|

குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும்; ஏன் நாம் சிறுவயதினராய் இருந்த பொழுது, நம்முடைய குழந்தை பருவத்தில் நாமே விரல் சூப்பி தான் வளர்ந்திருப்போம். விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளுடன், விரல்களின் வலுவிழந்து, மனதில் நம்பிக்கையற்று நம்மில் பலர் வாழ்நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

teeth problems in thumb sucking babies

நம்மில் பலருக்கு நிகழந்த இந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று இங்கு படித்து அறியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழக்கம் தொடங்கியது எப்போது!?

பழக்கம் தொடங்கியது எப்போது!?

குழந்தைகளிடத்தில் அவர்கள் பிறந்து கொஞ்சம் வளர்ந்த பின் அல்லது பிறந்த உடனேயே அவர்கள் தங்கள் கையை, கையின் விரல்களை முக்கியமாக பெருவிரலை சப்ப தொடங்கி விடுகிறார்களே அது ஏன் என்று நீங்கள் சிந்தித்து பார்த்தது உண்டா? ஏனெனில் குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே கையை சூப்பும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்; இது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஏன் இந்த பழக்கம்?!

ஏன் இந்த பழக்கம்?!

இந்த பழக்கம் குழந்தைகளுக்கு கருவிலும் சரி, பிறந்த பின்னும் சரி ஏன் ஏற்படுகிறது என்றால், அது குழந்தைகளின் பய உணர்வு காரணமாக, பாதுகாப்பு உணர்வு காரணமாக இருக்கலாம். மேலும் அவர்களால் எந்த வேலையையும் குழந்தை பருவத்தில் செய்ய முடியாது; நம்மால் சும்மா இருக்க முடியவில்லை எனில் நகம் கடிப்பது, எதையாவது பிய்ப்பது என்று பொழுதை போக்குவது போல குழந்தைகளும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாத அந்த காலகட்டத்தில் விரல் சூப்பி தங்கள் நேரத்தை போக்கிக் கொள்வதாக அறியப்படுகிறது.

இதனால் கூட ஏற்படும்!

இதனால் கூட ஏற்படும்!

இந்த பழக்கம் குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாகவும் அவர்களில் ஏற்படலாம். குழந்தைகள் தாயின் வயிற்றில் தனித்து, ஒரே ஆளாய் பத்து மாதங்கள் அங்கும் செல்லாது ஒரே இடத்தில் இருந்து விட்டனர்; பிறந்தவுடன் பல புதிய மனித முகங்களை பார்ப்பதால், பல இடங்களில் இருப்பதால் அதனால் ஏற்படும் அசௌகரிய உணர்வு காரணமாகவும் குழந்தைகள் விரலை சூப்புகின்றனர்.

விளைவுகள் என்னென்ன?!

விளைவுகள் என்னென்ன?!

குழந்தைகள் இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்; அந்த விளைவுகள் எப்படி பின்னாளில் விஸ்வரூபம் எடுத்து அவர்களை பாதிக்க போகின்றன என்பதை உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாது பெற்றோர்களே! இவ்வளவு ஏன் பின்னாளில் பாதிப்புகள் ஏற்பட்ட பின் அதற்கு காரணம், உங்கள் குழந்தை குழந்தை பருவத்தில் விரல் சூப்பியது தான் காரணம் என்பதை அப்பொழுது உங்களால் யோசித்து கூட பார்க்க முடியாது.

இப்பொழுது குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைப்பதால், பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

பற்களில் பிரச்சனை!

பற்களில் பிரச்சனை!

குழந்தைகள் தனது வளரும் குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, ல் எப்பொழுது பார்த்தாலும் விரலை வைத்துக் கொண்டே திரிவது, அவர்கள் வளர்ந்த பின் பால் பற்கள் முளைத்து, அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல், ஏறுமாறாக கோணலாக, எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

விரல்களின் வலிமை!

விரல்களின் வலிமை!

குழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால், பின்னர் குழந்தையின் கையில், விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து அதனால் அவ்வுறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம். இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.

மனநிலை பாதிப்பு!

மனநிலை பாதிப்பு!

குழந்தைகள் பிறந்ததில் இருந்து கடைபிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால், அங்கு மற்ற குழந்தைகளின் ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவதை தேடும்; அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

பெற்றோர் செய்ய வேண்டியது!

பெற்றோர் செய்ய வேண்டியது!

இது போன்று பற்பல பாதிப்புகள் குழந்தையின் ஒரு சிறிய பழக்க வழக்கத்தால், விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, பின்னாளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆகையால், குழந்தைகளுக்கு இந்த பழக்கம் ஏற்படும் சிறு வயதிலேயே அவர்களுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்து சொல்லி வாயில் கையை வைத்து வளர விடாமல் தடுக்க வேண்டும்.

பெற்றோரின் கடமை!

பெற்றோரின் கடமை!

அதே சமயம் அவர்களின் உணர்வுகள் அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் பய மற்றும் பாதுகாப்பு உணர்வுகள் குறித்து எந்தவித பாதிப்புகளும் குழந்தைகளிடம் ஏற்படாத வகையில், அவர்களை இந்த விரல் சூப்பும் பழக்கத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிகழ்காலத்தில் அவர்கள் மனம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையில் அன்பாய் எடுத்து சொல்லி குழந்தைகளை திருத்துவது பெற்றோரின் கடமையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Teeth Problems In Thumb Sucking Babies

Teeth Problems In Thumb Sucking Babies
Desktop Bottom Promotion