For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்?

குழந்தை உணவு பற்றியும் அவர்களுக்குக் கொடுக்கும் இணை உணவுகள் பற்றியும் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.

|

குழந்தையின் குடல், உணவினுடைய செரிமானத்திற்கு 6 மாதத்திற்கு பின்பு தான் தயாராகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பாக இணை உணவுகள் கொடுக்கும் பொழுது,

suitable supplement foods for six months baby

தாய்ப்பால் குடிக்கும் நேரம் மற்றும் குடிக்கும் முறைகள், தடவைகள் ஆகியவை குறைந்து தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிட ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இணை உணவுகள்

இணை உணவுகள்

ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் தான் இணை உணவுகள் எணப்படும். இவைகள் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டதாக இருக்கின்ற பொழுது, குழந்தை எளிதில் பழகிவிடும்.

ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய் உண்ட உணவும் பின் தாய்ப்பால் மூலமாக நேரடியாகவும் வீட்டு உணவின் ருசி மூளையில் பதிவாகி, இருப்பதால் இது சுலபமாகும்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். அதேபோல் இணை உணவு ஆரம்பிப்பதை ஆறு மாதத்திற்குப் பின் தள்ளிப்போடவும் கூடாது. நம்முடைய முன்னோர்கள் அன்னம் குழந்தைக்கு ஊட்டுவதை ஆறு மாதத்துக்குப் பின்பும் அதை ஒரு சம்பிரதாயமாகவே வைத்திருந்தனர்.

இனிமேல் அன்னாசி பழத்தோலை தூக்கி வீசாதீங்க... அது எந்தெந்த நோயை தீர்க்கும் தெரியுமா?

 வீட்டு உணவுகள்

வீட்டு உணவுகள்

பொதுவாக குழந்தைகளுக்கு டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பூப்போன்ற வளரும் குழந்தைகளுக்கு அவ்வப்போது வீட்டுப் பக்குவத்தில் கொஞ்சம் குழைவாக ரசாயனங்கள் கலக்காத பொருள்கள் சேர்த்து ஆரோக்கியமாக சமைப்பது நல்லது.

 ரெடிமேட் உணவுகள்

ரெடிமேட் உணவுகள்

அடைத்து விற்கப்படுகின்ற உணவுகளில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் இனிப்பும் ரேசாயனப் பொருள்களும் நறுமணமும் கலந்து இருக்கும். உணவு பழகுகின்ற பருவமான ஆறு மாதத்திலிருந்து 10 மாதங்கள் வரை எந்த உணவினை கொடுக்கிறோமோ அதனுடைய ருசிக்கு ஏற்றபடி மாறிவிடுகிறது.

எப்படி கொடுக்கலாம்?

எப்படி கொடுக்கலாம்?

முதலில் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தரவும். ஆறு மாதங்களுக்குப் பிறகு அரிசிக்குக் கஞ்சி மற்றும் பருப்புக் கஞ்சி, காய்கறி, கீரை வேகவைத்த தண்ணீர் (சூப்), முளைகட்டிய பயறுகளை வறுத்து அரைத்து வீட்டிலேயே அரைத்த சிறுதானியங்களில் செய்த கஞ்சியைக் கொடுப்பது, நல்லெண்ணெயை அல்லது நெய்யோ சேர்த்துக் கொள்ளலாம். இதுபோன்ற மென்மையான உணவுகளை 6 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது.

காலையில எழும்போது இந்த இடத்துல வலிக்குதா?... அது இந்த நோயா இருக்கலாம்... ஜாக்கிரதை

6 மாதம் முதல் 12 வரை

6 மாதம் முதல் 12 வரை

இட்லி, தோசை, காரம் சேர்க்கப்படாத சாம்பார், உப்பு மட்டும் சேர்க்கப்பட்ட பருப்பு, காய்கறிகள் மசித்தது போன்ற உணவுகள் கொடுகு்கலாம்.

அரிசி சாதம், பருப்பு, நெய், ராகி கூழ், வாழைப்பழம், பொங்கல் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

ஆனால் 12 மாதங்கள் வரையிலும் குழந்தை சாப்பிட ஆரம்பித்துவிட்டதும் தாய்ப்பாலை நிறுத்திவிட வேண்டாம். தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆணுறுப்பு விறைப்பில் பிரச்சினை உண்டாகுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

suitable supplement foods for six months baby

here we are giving some facts about baby foods and suitable supplement foods for six months baby.
Story first published: Tuesday, December 18, 2018, 15:47 [IST]
Desktop Bottom Promotion