For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் சில முக்கிய பழக்க வழக்கங்கள்!

குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான விஷயம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய சில முக்கிய பழக்க வழக்கங்கள் பற்றி படிக்கலாம்.

|

குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறித்த பின் குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் குழந்தைகள் கண்டிப்பாக நூறு சதவிகிதம் பெற்று, பெற்றாரை போலவே மாறுகின்றனர். இந்த காரணத்திற்காக தான் தாய்-தந்தை தான் குழந்தையின் முதல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி என்று கூறப்படுகிறது.

9 must teach good habits to kids

பெற்றோர்கள் நல்லவர்களானால், குழந்தையும் நல்லவர்களாக வளர்வர்; பெற்றோரே கேடு கெட்டவர்களானால், குழந்தையும் அப்படியே வளரும். நீங்கள் பெற்று எடுத்த குழந்தை நல்லவராவதும் கெட்டவராவதும் உங்கள் கையில்! இந்த பதிப்பில் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்கும் முதல் மற்றும் முக்கிய விஷயங்களை குறித்து படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு

உணவு

நீங்கள் எப்படி உண்ணுகிறீர்களோ அதே போல் தான் குழந்தையும் உண்ணும். நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை குழந்தையும் சுவை பார்க்க ஆசைப்படும்; நீங்கள் வெறுத்து ஒதுக்கும் உணவுகளை உங்கள் முகபாவனையை பார்த்தே குழந்தையும் ஒதுக்கிவிடும். நீங்கள் உணவினை சிந்தி சாப்பிட்டால், குழந்தையும் அதையே செய்யும்; அது தவறு என்று குழந்தை உணரவே வெகுகாலம் ஆகலாம்.

உணவுக்கு மரியாதை

உணவுக்கு மரியாதை

குடும்பமாக அனைவரும் அமர்ந்த பின், அனைவரும் சேர்ந்து சாப்பிடுதல், உணவுகளை வீணாக்காத பண்பு, உணவிற்கு தரும் மரியாதை போன்ற முக்கிய விஷயங்களை குழந்தைகள் முதன் முதலாக பெற்றோரிடம் இருந்து கற்கின்றனர்; கற்றதையே அப்படியே சரியா தவறா என்று அறியாமலேயே தன் வாழ்க்கை முழுதும் பின்பற்றுகின்றனர்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்தால் உங்கள் குழந்தையும் உங்களோடு சேர்ந்து செய்ய ஆரம்பித்துவிடும்; அதுவே நீங்கள் மதியம் வரை உறங்குபவராக, சோம்பேறியாக இருந்தால் உங்கள் குழந்தையும் கண்டிப்பாக வாழ்வில் பெரும் சோம்பேறியாக திகழ்வான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டு வேலைகளை நீங்கள் செய்வது, வீட்டில் உள்ளோரின் வேலைகளில் பங்கு கொண்டு, வேலைகளை பகிர்ந்து செய்வது போன்ற விஷயங்களை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து உள்வாங்கிக் கொள்கின்றனர்.

ஆர்வம்

ஆர்வம்

நீங்கள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற செயல்கள், உங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே அவற்றை செய்ய வைக்கும்; குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது இயற்கையான ஆர்வம் உருவாகும். நீங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் குழந்தையும் அதை பின்பற்றும்; நீங்கள் நன்கு தின்று கொண்டு தீனிப்பண்டாரமாக உண்டு கொளுத்து இருந்தால், குழந்தையும் அதையே தன் வாழ்வில் பின்பற்றும்.

நண்பர்கள்

நண்பர்கள்

உங்கள் நட்பு வட்டம் எப்படிப்பட்டது, எப்படி அவர்களுடன் பழகுகிறீர்கள், அவர்கள் முன்னிலையில் எப்படி பேசுகிறீர், அவர்கள் பின்னால் எப்படி பேசுகிறீர் போன்ற அத்தனை விஷயங்களையும் குழந்தைகள் வெகு ஜாக்கிரதையாக கவனிப்பர்; அதையே தன் பழக்க வழக்கமாக மேற்கொள்வர். நீங்கள் புறம் பேசினால் குழந்தையும் புறம் பேசும்; நீங்கள் நல்ல நண்பனாக இருந்தால், குழந்தையிடமும் அந்த பண்பு காணப்படும்.

நேரம்

நேரம்

நீங்கள் எந்த நேரத்தில் உறங்குகிறீர், எப்பொழுது விழிக்கிறீர், எந்த நேரத்தில் என்ன செயல்களை செய்கிறீர், உங்கள் உழைப்பினை எப்படி மதிக்கிறீர், வேலைக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு, நேரத்திற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு போன்ற விஷயங்களை உங்கள் ஒவ்வொரு செயலின் மூலம் குழந்தைகள் கவனித்து கற்றுக்கொண்டு அதையே தாங்கள் வளர்ந்த பின் தங்களது பழக்க வழக்கமாக மேற்கொள்கின்றனர்.

சுத்தமும் உதவியும்

சுத்தமும் உதவியும்

நீங்கள் எந்த அளவு உங்கள் வீட்டை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்கிறீர், உங்கள் உடலின் சுத்தம் போன்ற விஷயங்களை குழந்தைகள் கவனித்து கண்டிப்பாக அதே போன்று செய்ய முயற்சிப்பர். மேலும் நீங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்யும் உதவி, மற்றவர்களுக்கு செய்யும் உதவி போன்ற விஷயங்களை பார்த்து உணர்ந்து அதையே தன் வாழ்க்கையிலும் மேற்கொள்வர்.

பணம்!

பணம்!

பணம் பணம் என்று நீங்கள் அலைந்தால், உங்களுக்கு பிறந்த பிள்ளை உங்களை விட பலமடங்கு பணத்தின் பின் அலையும்; இப்படி அலைய வேண்டும் என்பதை அது பெற்றோரான உங்களை பார்த்து தான் கற்றுக் கொள்கிறது. பணத்தை மிச்சப்படுத்த உங்கள் பெற்றோரை நீங்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால், நாளை உங்கள் பிள்ளையும் அதே பணம் எனும் காரணத்திற்காக உங்களையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப பெருமளவு வாய்ப்பு இருக்கிறது.

மற்ற உயிரிகள்

மற்ற உயிரிகள்

விலங்குகள் மற்றும் பறவைகள், தாவரங்கள் போன்றவற்றை நீங்கள் எப்படி நடத்துகிறீர்களோ, எந்த அளவுக்கு மற்ற உயிரிகளுக்கு மரியாதையை கொடுக்கிறீர்களோ, அவைகளை காக்க முயற்சிக்கிறீரோ அவை அனைத்தும் உங்கள் குழந்தையின் நாளைய வாழ்க்கைப் பழக்க வழக்கமாக மாறும்.

குழந்தைகள் நீதி நேர்மையோடு, மற்றவரிடம் அன்பு செலுத்தி வாழ விரும்பினால், நீங்களும் அதேமாதிரி குழந்தைகளின் முன்னிலையில் வாழ்ந்து காட்ட வேண்டும்! நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்கு சூப்பர் ஹீரோ மற்றும் ஹீரோயின்; குழந்தைகள் உங்களை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடிகள்!

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

நீங்கள் குழந்தைகளுக்கு எந்த வழியை காட்டுகின்ரீரோ அந்த வழியை தான் பின்னாளில் உங்கள் குழந்தைகள் பின்பற்ற போகின்றனர். ஆகையால் குழந்தைகள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ அந்த துறை தொடர்பான செயல்களை நீங்கள் கொஞ்சமாவது செய்தால் தான் குழந்தைகளும் உங்களை பின்பற்றி அதை செய்ய முயற்சிப்பர். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை; உங்கள் குழந்தைகள் எப்படி வளர வேண்டுமோ அப்படி நீங்கள் இருக்க முயலுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Parents Must Teach Good Habits To Kids

Parents Must Teach Good Habits To Kids
Story first published: Saturday, August 18, 2018, 15:52 [IST]
Desktop Bottom Promotion