For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புட் பாய்சன் ஏற்பட்ட தாய் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

இந்த பதிப்பில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு புட் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டால், அது தாய்ப்பாலூட்டும் பொழுது, அவர்கள் அளிக்கும் தாய்ப்பாலால் குழந்தையின் நலம் பாதிக்கப்படுமா என்று படித்து அறியலாம்.

|

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது, தாய் உண்ணும் உணவுகளை தான் உறிஞ்சி எடுத்து, உண்டு குழந்தை உயிருடன் கருவறையில் வளர்கிறது; பிறந்த பின் கூட தாய் உண்ணும் உணவை தாய்ப்பால் வழியாக உறிஞ்சி தான் குழந்தை பிறந்து ஓரிரு வருடங்கள் வரை உயிர் வாழ்கிறது. இதில் இருந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்க மட்டும் அல்லாமல், பிறந்த பின் ஆரோக்கியமாக வளர்க்கவும் தாய்மார்கள் - பெண்கள் மிகவும் அவசியமானவர்கள் என்று அறியலாம்.

breastfeeding and food poisoning

மேலும் அவர்களின் ஆரோக்கியம், பெண்கள் உண்ணும் சத்தான உணவுகள் போன்ற அனைத்துமே குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த பதிப்பில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு புட் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டால், அது தாய்ப்பாலூட்டும் பொழுது, அவர்கள் அளிக்கும் தாய்ப்பாலால் குழந்தையின் நலம் பாதிக்கப்படுமா என்று படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புட் பாய்சன்

புட் பாய்சன்

பொதுவாக புட் பாய்சன் அதாவது உணவு விஷம் என்பது விஷத் தன்மையை அடைந்து விட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலமாக, கெட்டுப்போன, பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தாக்கப்பட்ட காய்கறிகள், பொருட்கள் கொண்டு உணவு தயாரிக்கும் பொழுது தயாரிக்கப்பட்ட உணவு, ஆட்டோமேட்டிக்காக விஷமாக மாறி விடுகிறது. இந்த விஷ உணவை உண்ணும் நபர்களின் உடலில் புட் பாய்சன் எனும் கோளாறு ஏற்படுகிறது.

இந்த புட் பாய்சன் வயிறு வலி, வயிற்றுப்போக்கு, பலவீனம் போன்ற குறைபாடுகளை உடலில் ஏற்படுத்தும். இதை அதிகம் தோற்றுவிக்கும் பாக்டீரியாக்களாக விளங்குபவை: சால்மோனெல்லா, எ-கோலை, லிஸ்டிரா போன்ற பாக்டீரியாக்கள் ஆகும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

ஒருவரின் உடலில் புட் பாய்சன் ஏற்பட்டிருப்பதை வாந்தி, டையேரியா, பலவ்வீனம், மயக்கம், தலை சுற்றல், வாந்தியில் இரத்தம் வெளிப்படுதல், மலத்தில் இரத்தம் வெளிப்படுதல், வயிற்று வலி, காய்ச்சல், நீர்ச்சத்து குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறியலாம். உடலில் இந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், உடனே சிகிச்சை மேற்கொண்டு உடல் நலம் அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

புட் பாய்சனின் போது தாய்ப்பால் அளிக்கலாமா?

புட் பாய்சனின் போது தாய்ப்பால் அளிக்கலாமா?

புட் பாய்சன் தாயின் உடலில் ஏற்பட்டால், அதன் பாதிப்புகள் தாயின் வயிறு, குடல் மற்றும் மலக்குடல் தொடர்பான உடல் பாகங்களில் மட்டுமே ஏற்பட்டு இருக்கும். இது எந்த விதத்திலும் மார்பில் சுரக்கப்படும் தாய்ப்பாலில் விஷத்தை கலக்காது; தாய்ப்பாலை விஷமாக மாற்றாது. ஆனால், தாயின் உடலில் மட்டும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும்; தாய் தன் நிலையை சமாளித்து, குழந்தைக்கு பாலூட்டுவதை கண்டிப்பாக தொடர வேண்டும்.

தாயின் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தால், மருத்துவ ஆலோசனையுடன் தாய்ப்பால் அளிப்பதில் குழந்தையின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க, புட் பாய்சன் ஏற்பட்ட நேரத்தில் தாய்மார்கள் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து இப்பொழுது காணலாம்.

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்

புட் பாய்சன் ஏற்பட்ட நேரத்தில் தாயின் உடலில் இருந்து வாந்தி, வயிற்றுப்போக்கு என அதிகமான தண்ணீர் வெளியேறுவதால், தாய்மார்கள் திரவ நிலையில் உள்ள சுகாதாரமான, பாதுகாப்பான உணவுகளை, நீராகாரங்களை உட்கொண்டு வருதல் வேண்டும். உடல் எப்பொழுதும், எந்நேரமும் நீர்ச்சத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்மார்கள் பழச்சாறு, பசியை போக்கும், உடனடி சக்தி மற்றும் ஆரோக்கியம் அளிக்கும் பழங்களை - காய்களை ஜூஸ் மற்றும் சூப் போட்டு பருகுதல் வேண்டும்..!

மருத்துவர் - மாத்திரைகள்

மருத்துவர் - மாத்திரைகள்

புட் பாய்சன் ஏற்பட்டவுடன் மருத்துவரை உடனே அணுகி உடல் நிலையை சோதித்து கொள்ள வேண்டும்; சரியாக, முழுவதுமாக சோதித்த பின்பு, மருத்துவர் நீங்கள் தாய்ப்பால் தருவதால், குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்த பின்பு தான் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும்; மேலும் உங்கள் உடல் நிலையை பழையபடி ஆரோக்கியமாக்க மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை மற்றும் மாத்திரை மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டும். பெற்றுக் கொண்ட மருந்து மற்றும் மாத்திரைகளை தகுந்த நேரத்தில் உட்கொண்டும் வருதல் அவசியம்.

தாய்ப்பால்

தாய்ப்பால்

குழந்தைக்கு எந்த நிலையிலும் தாய்ப்பால் அளிப்பதை நிறுத்த வேண்டாம்; நீங்கள் மீறி நிறுத்தினால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவும் உணவுகளை சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான முறையில் தயாரித்து உட்கொண்டு வருதல் வேண்டும்; குழந்தைக்கு தாய்ப்பாலை நேரத்திற்கு, உங்களின் உடல் சோர்வை கருத்தில் கொள்ளாமல் அளித்து வருதல் வேண்டும்.

ஓய்வு

ஓய்வு

குழந்தைக்கு படுத்த நிலையிலேயே தாய்ப்பால் அளித்து வருதல் நல்லது; மேலும் குழந்தை உறங்கும் நேரங்களில் எல்லாம் படுத்து உறங்கி, நன்கு ஓய்வு எடுத்து வருதல் வேண்டும். நீங்களும் ஆரோக்கியமான உணவு உண்டு, குழந்தைக்கும் ஆரோக்கியமான தாய்ப்பாலை அளித்து வாருங்கள்! குழந்தையை நன்கு ஓய்வெடுக்க செய்து, நீங்களும் நன்கு ஓய்வு எடுத்து வாருங்கள்!

உடல் நலம் விரைந்து தேறுவதற்கு ஆவன செய்து, உங்கள் உடல் நலம் மற்றும் குழந்தையின் நலத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Safe Breastfeeding While Food Poisoning

Is It Safe Breastfeeding While Food Poisoning
Story first published: Thursday, August 16, 2018, 13:31 [IST]
Desktop Bottom Promotion