For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

பசும்பால் என்பது தாய்ப்பாலுக்கு அடுத்ததாக கருதப்படுகிறது; பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது நல்லதா? கெட்டதா? என்று இங்கு படிக்கலாம்.

|

குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்று எடுத்த பின் அவர்களை வயிற்றில் இருக்கும் பொழுது எப்படி ஆரோக்கியமாக பார்த்துக் கொண்டீர்களோ அது போல், இல்லை அதற்கும் மேலாக ஆரோக்கியமாக பார்த்து வளர்க்க வேண்டியது அன்னையரின் கடமை. ஏனெனில் வயிற்றில் எந்த ஒரு நோய்த்தாக்குதல், கிருமிகள், தொற்றுகள் பரவாமல் குழந்தைகள் வளர்ந்தனவோ அதற்கு எல்லாம் மாறான சூழலாக புவிக்கு வந்த பின்னான நிலைமை இருக்கும்.

cow milk for babies

பிறந்த உடன் குழந்தைகளை பலர் தூக்குவர், வெளிக்காற்று அவர்கள் மீது படும், பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள் போன்ற அனைத்தும் நேரடியாக குழந்தையை தீண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்ப்பால் = சக்தி!

தாய்ப்பால் = சக்தி!

இம்மாதிரியான நேரத்தில் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க வேண்டியது அவசியம். குழந்தைக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சக்தி அன்னையின் தாய்ப்பால் மூலம் மட்டுமே கிடைக்கும். என்னதான் தாய்ப்பால் ஆரோக்கியத்தை அளித்தாலும் அதை நம்மால் ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே குடிக்க முடியும்; அதன் பின்னர் அனைத்து குழந்தைகளும் பருகி வளரும் பால் பசும்பால் தான்.

இப்படிப்பட்ட பசும்பாலை தாய்ப்பால் சரியாக இல்லாத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கலாமா? அவ்வாறு குழந்தைகளுக்கு பசும்பால் அளிப்பது நல்லதா? கெட்டதா? இதனால் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்.

நல்லதா? கெட்டதா?

நல்லதா? கெட்டதா?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் சுரப்பு இல்லாத தாய்மார்கள் பசும்பாலை அளிப்பது நல்லதா? கெட்டதா? என்று பார்த்தால், கண்டிப்பாக அது கெட்ட விஷயம்; பச்சிளம் குழந்தைக்கு தாய் தரக்கூடாத பால், பசும்பால். ஏனெனில் குழந்தைகள் பிறந்த பின்னர் தான் படிப்படியாக தங்கள் உடல் மற்றும் மன ரீதியாக வளர்கின்றனர். இவ்வகையில் குழந்தைகளின் வயிறு மற்றும் செரிமான உறுப்புகளும் சரியான வளர்ச்சியை பெற்று இருக்காது.

எனவே குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கும் பொழுது பார்த்து பக்குவமான காலம் மற்றும் பதத்தில் அளிக்க வேண்டும்.

எப்பொழுது கொடுக்கலாம்?

எப்பொழுது கொடுக்கலாம்?

குழந்தைகளின் உடல் உறுப்புகள் சரியான வளர்ச்சியை பெற்று இருக்காததால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை காத்திருந்து பின்னர் தான் பசும்பாலை அளிக்க வேண்டும். குழந்தைகள் முதல் வருடத்தை முடிக்கும் பொழுது அதாவது குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்னர் தான் குழந்தைகளுக்கு பசும்பாலை கொடுக்க தொடங்க வேண்டும். அப்படி ஒரு வயதிற்கு பின் குழந்தைகளுக்கு பசும்பால் அளிக்கும் பொழுது ஒரேயடியாக அளித்து விடக்கூடாது.

குழந்தைகளுக்கு பசும்பால் அளிப்பது எப்படி என்று அடுத்த பத்தியில் படித்து அறியலாம்.

பசும்பாலை எப்படி அளிப்பது?

பசும்பாலை எப்படி அளிப்பது?

குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு பின் பசும்பால் அளிக்கும் பொழுது, முன்பு கூறியது போல் ஒரே நேரத்தில் தந்து விடக்கூடாது. குழந்தைக்கு ஒரு வயது ஆனாலும் குழந்தையின் உடல் மற்றும் உள்ளுறுப்புகள் இன்னும் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே பசும்பால் அளிக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அளிக்க வேண்டும். என்னதான் குழந்தைகளுக்கு பசும்பால் அளித்தாலும் அந்த சமயத்திலும் தாய்ப்பாலை நிறுத்தாமல் அளித்து வர வேண்டும்.

பசும்பாலை மிகக்குறைந்த அளவில் முதலில் அறிமுகப்படுத்தி அதையே சில மாதங்கள் தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று வயதை எட்டும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமான அளவு பசும்பாலை கொடுக்க தொடங்குங்கள்..!

பசும்பாலின் நன்மைகள்!

பசும்பாலின் நன்மைகள்!

குழந்தைகளுக்கு பசும்பலால் ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று பயந்து தராமல் விட்டு விடக்கூடாது. கண்டிப்பாக ஒரு வயதிற்கு பின் சிறிது சிறிதாக பசும்பாலை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்; ஏனெனில் பசும்பாலில் அதிக அளவு வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகளின் எலும்பு, தசை மற்றும் உடலின் வளர்ச்சிக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு இந்த சத்துக்கள் மிகவும் உதவுகின்றன.

எவ்வளவு கொடுக்க வேண்டும்?

எவ்வளவு கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 12 முறைகள் வரை குழந்தைகளுக்கு பால் அளிக்க வேண்டும். இந்த 8 அல்லது 12 முறைகளில் ஏதேனும் ஓரிரு முறை பசும்பாலை கொஞ்சமாக குழந்தைகளுக்கு அளிக்கலாம். குழந்தைகளுக்கு 6 மாதம் முடிந்த பின் திட உணவுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும்; எனவே எப்பொழுது பால் கொடுக்க வேண்டும், உணவளிக்க வேண்டும் என்று ஒரு உணவு அட்டவணை தயாரித்து கொள்ளவும்; அல்லது மருத்துவர் உதவியுடன் குழந்தைக்கான உணவு அட்டவணை பெற்றுக் கொள்ளவும்.

பக்க விளைவுகள்!

பக்க விளைவுகள்!

முன்பே கூறியது போல் குழந்தைகளின் செரிமான மற்றும் வயிறு தொடர்பான உறுப்புகள் சரியான வளர்ச்சி பெற்று இருக்காததால் குழந்தைகளுக்கு வயிற்று வலி, மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் குழந்தைகளின் உடல் பசும்பாலை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் குழந்தையின் உடலில் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும் குழந்தைகளின் உடல் பலவீனமாக மற்றும் சக்தி குறைந்து வளரும் நிலையை எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தாய்ப்பாலுக்கு மாற்று என்ன?!

தாய்ப்பாலுக்கு மாற்று என்ன?!

குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுக்கும் பொழுது, தாய்ப்பால் சுரப்பு என்று வரை இருக்கிறதோ அது வரை பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு பசும்பாலை கொடுக்கலாம் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம், அதற்கு என்ன காரணம் என்பதை நாம் முந்தைய பத்திகளிலேயே பார்த்து விட்டோம்; அப்படியெனில் என்ன தான் அளிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

குழந்தையின் நலம் முக்கியம்!

குழந்தையின் நலம் முக்கியம்!

தாய்ப்பால் இல்லாத சூழல் ஏற்பட்டால் அப்பொழுது குழந்தைகளுக்கு பார்முலா பால் தயாரித்து அளிக்க வேண்டும். அது விலை உயர்வாக இருக்கிறது என்று அதனை குழந்தைகளுக்கு தராமல், பசும்பாலினை கொடுத்து விடக்கூடாது. என்னதான் விலை உயர்வாக இருந்தாலும் குழந்தைகளின் நலம் முக்கியம் என்பதை நினைவில் வைத்து தாய்ப்பால் அளிக்க முயலவும்.

தாய்ப்பால் சுரப்பு குன்றினாலும் அதை அதிகரிக்க முயல வேண்டும். அது அதிகரிக்கும் தருணங்களில், குழந்தைக்கு பார்முலா பால் அளித்து வருதல் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Cow Milk Safe For Babies?

Is Cow Milk Safe For Babies?
Story first published: Friday, August 31, 2018, 12:02 [IST]
Desktop Bottom Promotion