For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா?

எல்லா பெற்றோர்களும் தங்களது முக்கிய கடமையாக எதை நினைக்கிறார்கள் என்றால், வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் வகையில் தன்னுடைய குழந்தைகளை தயார்படுத்துவது தான்.

|

எல்லா பெற்றோர்களும் தங்களது முக்கிய கடமையாக எதை நினைக்கிறார்கள் என்றால், வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் வகையில் தன்னுடைய குழந்தைகளை தயார்படுத்துவது தான். உடல் நல பாதிப்புகளும் இந்த வாழ்க்கையில் உள்ள ஒரு முக்கியமான சவால் தான். எல்லாரும் அதை அனுபவித்து தான் ஆகணும். பெற்றோர்களாகிய நம்முடைய தலையாய கடமை என்ன என்றால் இத்தகைய உடல் நல பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் நம் குழந்தைகளை வளர்ப்பது தான்.

vaccine

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரிவிகித உணவுகளை எடுத்து கொள்வதால் நோய்களை தூர விரட்டி விடலாம் என்பதில் துளி அளவும் ஐயமில்லை. ஆனால் அதேசமயம் நோய்களை விரட்டுவதில் தடுப்பூசியின் பங்கையும் மறுக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடுப்பூசி

தடுப்பூசி

குழந்தை பிறந்த உடனே குழந்தைகள் நல மருத்துவர், நம் குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் தடுப்பூசி போட வேண்டும் என பட்டியலை தந்து விடுகிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நாம் மருத்துவர் சொன்ன நேரத்தில் உரிய தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும் சாக்கு போக்கு சொல்லாமல்.

பல சமயம் நாம் நம்முடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஊசி போட தயாராகி விடுகிறோம். ஆனால் ஒரு வேளை மருத்துவர் ஊசி போட வேண்டும் என்று சொன்ன நேரத்தில் குழந்தைக்கு இருமல் அல்லது சளி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

அதே நாளில் ஊசி போட்டு விடலாமா? அல்லது தடுப்பூசி போடும் நாளை தள்ளி போடலாமா? இதே போன்ற நேரத்தில் குழப்பம் நம்மை சூழ்ந்து கொள்ளும். எதை செய்தால் குழந்தைக்கு நல்லது என தெரியாமல் போய் விடுகிறது. இதே போன்ற குழப்பமான நேரத்தில் உங்களை தெளிவுபடுத்த தான் இந்த கட்டுரை எழுதுகிறேன். இந்த நேரங்களில் உள்ள பலதரப்பட்ட வாய்ப்புகளை அறிந்து கொள்ள , அதில் எது சிறந்தது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது என்ன நடக்கும்?

உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது என்ன நடக்கும்?

குழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, நம்முடைய உடலுக்குள் ஏதேனும் அந்நிய கிருமிகள் நுழைவதை தான் உடல் நல கோளாறு என்கிறோம். இவ்வாறு நுழைந்த கிருமிகளை எதிர்க்க நமது உடல் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்துகளை சுரக்க ஆரம்பித்துவிடும். சுரக்கும் அளவு ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். இந்த எதிர்ப்பு பொருட்கள் உடலுக்குள் நுழைந்த கிருமிகளை அழிக்கும் போது உடல் நலம் சரியாகிவிடும். இதே கிருமிகள் எதிர்காலத்தில் நமது உடலில் நுழையும் போது, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இதே எதிர்ப்பு பொருட்களை கொண்டே கிருமிகளை அழித்து விடும், கிருமிகள் செயல்படும் முன்னரே இந்த எதிர்ப்பு பொருட்கள் செயல் பட்டு விடும்.

தடுப்பூசி போடுவதால் என்ன நடக்கும்?

தடுப்பூசி போடுவதால் என்ன நடக்கும்?

இது மேற்கூறிய நிகழ்வுக்கு ஒப்பானது தான். இங்கே குழந்தைக்கு ஏற்படும் நோய்க்கான மருந்து குழந்தையின் உடலில் சுரப்பதற்கு பதிலாக வெளியில் இருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால் குழந்தைக்கு உடல் நலக்குறைவுக்கு முன்னரே அந்த நோய்க்கான எதிர்ப்பு மருந்து குழந்தையின் உடலில் ஏற்றப்பட்டுகிறது. இந்த எதிர்ப்பு மருந்து குழந்தையின் உடலில் எவ்வளவு நாள் இருக்கும் என்பது செலுத்தப்படும் மருந்தின் தன்மையை பொருத்தது. சில மருந்துகள் குழந்தையின் உடலில் அதன் ஆயுள் காலம் முழுவதும் செயல்பட்டு கொண்டே இருக்கும்.

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

குழந்தைகளுக்கு செலுத்தப்படும் எல்லா தடுப்பூசி மருந்துகளும் சமம் இல்லை என நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில தடுப்பூசி மருந்துகள் மிக மிக முக்கியமானது. எந்த தடுப்பூசி மருந்துகள் முக்கியமானவை என கண்டறிய பல விதமான காரணிகள் உள்ளன. உயிர் கொல்லி நோய்க்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகள் முக்கியமானவை. அதே போல போடப்படும் ஊசி ஏதாவது ஒரு நோய் வருவதை மட்டும் எதிர்கிறதா இல்லை அதை தொடர்ந்து வரும் எல்லா நோய்களையும் எதிர்க்கிறதா போன்றவை தடுப்பூசியின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கும். சில நோய்களுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசி மருந்துகள் ஒரு முறை மட்டும் போடாமல் உரிய இடைவெளியில் தொடர்ந்து செலுத்துவது போல் இருக்கும்.(ஹெப்பட்டிஸ், டைபாய்டு, போலியோ போன்றவைகளுக்கு எதிராக போடப்படும் ஊசிகள்) இந்த மாதிரி நேரங்களில் குழந்தைக்கு சளி, இருமல் இருந்தாலும் மருத்துவர் சொன்ன நேரத்தில் உரிய தடுப்பூசிகளை போட்டு விடுவது நல்லது. இந்த தடுப்பூசிகளை போடுவதை நாம் தள்ளி போட்டால் அது நல்லது கிடையாது.

எப்போதெல்லாம் தடுப்பூசியை தள்ளி போடலாம்

எப்போதெல்லாம் தடுப்பூசியை தள்ளி போடலாம்

உங்கள் குழந்தைக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல், சளி இருந்தால் அதன் உடலில் அதற்கான நோய் எதிர்ப்பு பொருட்களை எதிர்ப்பு மண்டலம் உருவாக்கி கொண்டு இருக்கும். இந்த நேரத்தில் தடுப்பூசி போட்டால் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அதிகமான சுமை கொடுத்தது போல் ஆகிவிடும். அதனால் இந்த நேரத்தில் ஊசி போடுவதை தாமதிப்பது சிறந்தது.

எப்போது தடுப்பூசி போடலாம்

எப்போது தடுப்பூசி போடலாம்

ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருக்கும். சளி, இருமல் போன்ற சிறிய பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும். இந்த மாதிரி சூழ்நிலைகளில் காய்ச்சல் இல்லை என்றால் அல்லது குழந்தைக்கு ஏற்பட்ட சளி, இருமல் இரண்டு நாளுக்கு மேல் நீடிக்காது என்றால் நாம் இதை கண்டுகொள்ளாமல் தடுப்பூசி போடுவது தான் சரியான முடிவு. தடுப்பூசி போட மருத்துவர் குறித்த நாளின் காலையில் இருந்து தான் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நாம் இதை பொருட்படுத்தாமல் ஊசி போடுவது சிறந்தது. அப்படி இல்லாத பட்சத்தில் குழந்தைக்கு உடல் நலம் சரியாகும் வரையில் தாமதியுங்கள்.

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை

எல்லா குழந்தைகளின் உடல்நிலையும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் உடலுக்கு வந்த நோய்க்காக செய்யப்படும் மருத்துவமும் வெவ்வேறானவை. குழந்தைகள் தனக்கு ஏற்படும் உடல் நல குறைவை சமாளிப்பதும் மாறுபடும். அதனால் தான் இந்த வயதுள்ள குழந்தைகளின் உடல்நிலையை கணிப்பது கடினம். இந்த மாதிரி சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் மையத்தை தொடர்பு கொண்டு, அங்குள்ள மருத்துவ ஆலோசகரிடம் குழந்தையின் உடல் நிலையை விளக்கி குறிப்பிட்ட நாளில் ஊசி போட வரலாமா? வேண்டாமா? என தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Vaccination Be Given If Your Baby Has Cold Or Cough?

It is a MYTH that you have to avoid or delay your child's vaccination if they have a mild illness without a fever, such as a cough or cold, or if they have an allergy, such as asthma, hay fever or eczema.
Story first published: Tuesday, June 5, 2018, 12:38 [IST]
Desktop Bottom Promotion