For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பயணத்தின் பொழுது மறக்காமல் குழந்தைகளுக்காக எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்..!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தேவையை கவனித்துக் கொள்ள வேண்டும்; பயணத்தின் பொழுது குழந்தைகளுக்காக மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் குறித்து இங்கு படிக்கலாம்.

|

பயணம் செய்யும் பொழுது நாம் தனித்து சென்றாலே எத்தனையோ விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்; இதில் ஒரு குழந்தைக்கு தாய் தந்தையாகி குழந்தையுடன் பயணம் செய்ய வேண்டும் என்றால் சொல்லவா வேண்டும். பயணத்திற்கு பல பைகளை கட்டி எடுத்துச் செல்லும் பொழுது, குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் சேர்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.

baby travel checklist - must carry things

அது கண்டிப்பாக பயணச் சுமையை அதிகரிக்கத் தான் செய்யும்; பயணச் சுமை அதிகரிக்கும் என்பதற்காக குழந்தைக்கு தேவைப்படும் விஷயங்களை வைத்து விட்டு செல்லவோ அல்லது குழந்தையுடன் பயணத்தில் ஈடுபடாமல் இருக்கவோ முடியாது. எனவே இந்த பதிப்பில் குழந்தைகளுடன் செய்யும் பயணத்தில் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்ன, குழந்தைகளுடனான பயணத்தில் சுமையை குறைத்து இனிமையை கூட்டுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் பொழுது, அவர்களுக்கு தேவைப்படும் மறக்காமல் ஏசுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டையப்பர்

டையப்பர்

குழந்தைகள் வீட்டில் இருக்கும் பொழுது அவர்களுக்கு துணியை ஈரமாக்க மற்றும் மலம் கழிக்க பயன்படுத்தி, அதனை துவைத்து தொடர்ந்து பயன்படுத்தும் முறையை பின்பற்றுவது நல்லது. பயணம் செய்யும் பொழுது குழந்தை ஈரமாக்கும் துணிகளை துவைத்துக் கொண்டு இருக்க முடியாது எனவே அச்சமயத்தில் டையப்பரை பயன்படுத்தலாம்; டையப்பர் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த மாதிரியான நேரங்களில் உதவ தான். அவசியம் உணர்ந்து பொருட்களை பயன்படுத்தினாலே, பத்தி பிரச்சனைகள் முடிந்து விடும்.

உடைகள்

உடைகள்

குழந்தைகளுக்கு தேவையான உடைகளை எடுத்துச் செல்ல வேண்டும்; குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுப்பது, சிறுநீர், மலம் கழிப்பது போன்ற விஷயங்களை செய்வதால், அவர்களுக்கு அதிக மாற்றுத்துணிகள் தேவைப்படும். ஆகையால், மறக்காமல் பயணத்திற்கு தேவையான அளவு துணிகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பொம்மைகள்

பொம்மைகள்

குழந்தைகள் அழுதால், அவர்களுக்கு பிடித்தமான பொம்மையை காட்டினால் கொஞ்சம் அமைதியாகி விடுவார்கள்; எனவே குழந்தைகளின் ஃபேவரைட் பொம்மையை பயணத்தில் மறவாமல் குழந்தையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் சமயமாய் இருந்தால் அதற்கான பிரத்யேக பொம்மைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

புத்தகம்..!

புத்தகம்..!

குழந்தைகள் உறங்கும் பொழுது நீங்கள் பாட்டுக்கு காட்டி, பாட்டுப்பாடி, அல்லது கதை சொல்லி, புத்தக கதைகளை காட்டி தூங்க வைக்கும் பெற்றோராக இருந்தால் அதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சில குழந்தைகள் வண்ணங்கள் நிறைந்த புத்தகத்தை பார்த்தால் அழாமல், அமைதியாக இருப்பர்; எனவே குழந்தைகளுக்கு பிடித்த புத்தகங்களை மறவாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

குல்லா - தொப்பி!

குல்லா - தொப்பி!

குழந்தைகளுக்கு பயணத்தில் தேவைப்படும் குல்லா மற்றும் தொப்பி வகையறாக்களை உங்கள் பயணச் சுமை பைக்கெட்டுகளில் தவறாது எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது நீங்கள் பயணம் செய்யும் காலகட்டத்தை பொறுத்து, உங்கள் குழந்தையின் தேவையை பொறுத்து மாறுபடலாம்.

ஸ்வெட்டர்!

ஸ்வெட்டர்!

குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தால், வானிலை மாற்றமாக இருந்தால், குழந்தைகளுக்கு தேவைப்படும் ஸ்வெட்டர் போன்ற துணிமணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான கனமான கதகதப்பு தரும் உடைகளை கூட எடுத்துக் கொள்வது நல்லது.

டவல் மற்றும் போர்வை!

டவல் மற்றும் போர்வை!

குழந்தைக்கு தேவைப்படும் துண்டு அதாவது டவல் மற்றும் போர்வை போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு தேவைப்படும், அவர்களை ஏந்தி கொள்ள உதவும் துண்டு வகைகள், துணிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஷூ மற்றும் சாக்ஸ்

ஷூ மற்றும் சாக்ஸ்

குழந்தைகளுக்கு தேவைப்படும் ஷூ மற்றும் சாக்ஸ், செருப்பு வகைகள் மற்றும் பிற கிளவுஸ் வகைகள் போன்றவற்றை மறவாமல் எடுத்து செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு தேவைப்படும் மேக்கப் ஐட்டங்கள் மற்றும் கண்மை, பவுடர், லோஷன், ஷாம்பு, சோப் போன்ற குளியல் ஐட்டங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மருந்துகள்

மருந்துகள்

குழந்தைகளுக்கு தேவைப்படும் மாத்திரை மற்றும் மருந்துகளை மறக்காமல் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தையுடன் பயணம் செய்யும் பொழுது எப்பொழுதும் ஒரு முதலுதவி பெட்டியை உடன் வைத்துக் கொண்டு தான் பயணம் செய்ய வேண்டும். சிறு சிறு கை வைத்திய பொருட்களையும் பயணத்தின் பொழுது, குழந்தைக்காக எடுத்துச் சென்றால் மிகவும் நல்லது.

பயணத்தை இனிமையாக்குதல்!

பயணத்தை இனிமையாக்குதல்!

குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்றால் கண்டிப்பாக பயணம் தலைவலியாக மாறிவிடும்; மேலும் பொருட்களை எடுக்காமல் சென்றால் குழந்தையை சமாளிப்பது என்பது கடினமான செயலாகி விடும். எனவே, குழந்தைகளுக்கு தேவைப்படும் பொருட்களை பயணம் முடிந்து சென்று அடையும் இடத்தில் அதாவது உங்கள் வீட்டில் இருந்து குழந்தையின் தாத்தா பாட்டி ஊருக்கு செல்கிறீர் என்றால், அங்கு குழந்தைக்கு தேவையான டயப்பர், சோப், சீப்பு போன்றவற்றை அங்கு சென்று சேர்ந்த பின் வாங்கி கொள்ள முயலலாம்; இது பயணச்சுமையை குறைக்கும்.

இது போல் குழந்தைக்கு தேவைப்படும் பொருட்கள் நீங்கள் சென்று சேரும் ஊரில் கிடைக்கும் எனில், எங்கு போய் தேவையான அளவு வாங்கி பயன்படுத்துவது மற்றும் பயணத்தை சுமைகளின்றி பயணிப்பது பயணத்தின் இனிமையை கூட்ட உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Baby Travel Checklist: Must Carry Things

Baby Travel Checklist: Must Carry Things
Story first published: Tuesday, August 28, 2018, 17:03 [IST]
Desktop Bottom Promotion