Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
தீம்பார்க் போய்ட்டு செத்துப் பொழச்சு வந்த பெண்... எப்பனு நீங்களே பாருங்க...
நீர்நிலையில் ஏற்பட்ட ஒரு விபத்தால் கிட்டத்தட்ட உயிர் போன நிலையில் ஒரு பெண் 2.8 லிட்டர் இரத்தம் இழந்து, பின் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.
ஒரு மனிதனை துரதிர்ஷ்டம் எப்போது தொடும் என்று சொல்ல முடியாது. தீம் பார்க் அல்லது வேடிக்கைப் பூங்காக்களில் அமைந்திருக்கும் விளையாட்டு சாதனங்களின் தவறான செயல்பாட்டின் காரணமாக பல உயிர்கள் இழக்கப்பட்ட வழக்குகளை நாம் அறிந்திருக்கலாம். அப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு தான் இது.

தீம் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள நீர் நிலையில் ஏற்பட்ட ஒரு விபத்தால் கிட்டத்தட்ட்ட உயிர் போன நிலையில் ஒரு பெண் 2.8 லிட்டர் இரத்தம் இழந்து, பின் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். பொதுவாக, கை உடைந்து கால் உடைந்து வரும் கதைகள் இந்த தீம் பார்க் பற்றி நாம் அறிந்திருக்கலாம். ஆனால் மனதை உலுக்கு இந்த சம்பவம் ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது. இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

செங்குத்தான நீர்நிலை
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் டோனி ஸ்டீட்மேன். இவருக்கு வயது 25. அவர் ஸ்பெயினில் உள்ள அக்வாலாண்ட் நீர் பூங்காவில் நீர் ஸ்லைடில் ஒரு வேடிக்கையான சவாரிக்குச் சென்றிருந்தார். ஸ்லைடு மிகவும் செங்குத்தானதாக இருந்ததால், அவளது பிறப்புறுப்பு வழியாக தண்ணீர் உள்ளுக்குள் பாய்ந்து அவர் உடலில் ஏறியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அந்தப் பெண்ணின் கருப்பை ஏழு சென்டி மீட்டர் அளவுக்கு கிழிக்கப்பட்டது.

பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை
'காமிகேஸ் ஸ்லைடு' என்ற அந்த விளையாட்டிற்கு செல்வதற்கு முன்பு தனக்கு எந்தவிதமான பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என்று அந்த பூங்கா ஊழியர்கள் மீது அந்தப் பெண் குற்றம் கூறினார். அந்த ஊழியர்கள் தனக்கு முறையாக அறிவுறுத்தியிருந்தால், விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார். ஸ்லைடின் அடிப்பகுதியில் தண்ணீரைத் தாக்கியவுடன், அவர் உடலின் உட்பகுதியில் ஏதோ வெடித்ததை அவர் உணர்ந்திருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், அவர் எழுந்து நிற்கும்போது, சிறுநீர் கழிப்பதற்கான வேட்கையை உணர்ந்ததாகவும், அவரது கால்களுக்கு இடையில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது என்றும் கூறினார். அந்த நீர் நிலையிலிருந்து அவர் நடந்து செல்லும் தடத்தை உருவாக்கும் அளவிற்கு இரத்தப்போக்கு இருந்ததாகவும் அவர் கூறினார்.

அதிகரித்த இரத்தபோக்கு
உடனே அங்கிருந்த மக்கள் மருத்துவரை அழைத்தனர். மருத்துவர்கள் விரைந்து வந்து அவரை பரிசோதிக்க, கால்களை அகட்டி வைக்குமாறு கூறினர். அவர் அப்படி கால்களை அகட்டி வைக்கும்போது, மேலும் அதிக இரத்தம் வெளியேறத் தொடங்கியது.

மரண வாயில்
டோனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் இரத்தப்போக்கு நிறுத்த தீவிரமாக முயன்றனர். ஆனால் இரத்தப்போக்கு நிறுத்தப்படாது, ரத்த இழப்பு காரணமாக அவள் மரணத்திற்கு ஆளாக நேரிடும் என்று தோன்றியது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ரத்த இழப்பைக் கடக்க டோனிக்கு உடனடியாக மூன்று இரத்தமாற்றங்கள் வழங்கப்பட்டன. மருத்துவர்கள் அவர் படுக்கையறைக்கு ஒரு டிஃபிப்ரிலேட்டரை (கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தூண்டப்பட்ட மின்சார அதிர்ச்சிகளை உள்ளடக்கிய சிகிச்சையின் ஒரு வடிவம்) கொண்டு வந்தனர்.

அறுவை சிகிச்சை
பின்னர், அவர் வடக்கு டெனெர்ஃப்பில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது வலியைக் குறைக்க ஒரு மயக்க மருந்து கொடுத்தனர். தண்ணீர் பீச்சி அடித்ததால் உண்டான சரும சேதத்தை சரி செய்வதில் மருத்துவர்கள் வெற்றி கண்டனர்.

அதிர்ஷ்டசாலி டோனி
டோனி மிகவும் அதிர்ஷ்டசாலி. ஆம், அவர் முழுவதும் குணமடைந்து விட்டார். இப்படி ஒரு பயங்கரமான சம்பவம் நடந்த போதிலும், அந்தப் பெண் அதிர்ஷ்டசாலி என்பதால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என்றும் மருத்துவர்கள் வெளிப்படுத்தினர்.



Click it and Unblock the Notifications