For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்தி ஜெயந்தியின் வரலாறு, உண்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்!

2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி அவர்களின் 151 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

|

'சுதந்திரம்' என்ற வார்த்தைக்கு பின்னால் நம் நாட்டில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பலரின் உயிர் தியாகம் மறைந்துள்ளது. வெள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட நமது நாட்டை மீண்டும் நாம் பெறுவதற்கு ஒரு மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பலரின் பெரு முயற்சி அடங்கியுள்ளது.

When Is Gandhi Jayanti 2020? History, Significance, Facts and Celebration In Tamil

அவர்களுள் ஒரு முக்கியமான நபர் மகாத்மா காந்தி. இவரை 'தேசப்பிதா' என்றும் அழைப்பார்கள். இவருடைய சித்தாந்தங்கள் மற்றும் அகிம்சை வழிமுறை, இந்தியா சுதந்திரம் பெற முக்கிய காரணமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி அவர்களின் 151 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியடிகளின் பிறந்த நாளை காந்தி ஜெயந்தி என்ற பெயருடன் நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம். காந்தியடிகளின் பிறந்த நாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனிய நாளில் காந்திஜியின் யோசனைகள், உணர்வுகள் சித்தாந்தங்கள் போன்றவற்றை ஒரு முறை நினைவு கூறுவதால் தேசப்பற்று நமது நாடி நரம்புகளில் துளிர்க்கலாம்.

பிறப்பு

பிறப்பு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அன்புடன் மகாத்மா காந்தி என்று அழைப்பார்கள். இவர் அக்டோபர் 2 , 1869 ஆம் ஆண்டு பிறந்தார். குஜராத் மாநிலம் போர்பந்தரில் அவர் பிறந்தார். சிறு வயது முதல் தேசம் குறித்த பற்று மற்றும் உணர்வு அவருக்குள் நிறைந்து காணப்பட்டது, மற்றும் அவ்வப்போது அந்த உணர்வினை அவர் வலிமையாக வெளிப்படுத்தி வந்தார்.

வன்முறையின்றி போராட்டம்

வன்முறையின்றி போராட்டம்

தொழில்முறை வழக்கறிஞராக இருந்த காந்திஜி, அவருடைய சித்தாந்தங்கள் மூலம் நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றினார். சமாதானம் , அமைதி மற்றும் அகிம்சை ஆகிய மூன்றையும் விரும்பிய காந்தியடிகள் நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்று திரட்டி சுதந்திரத்திற்காக வன்முறை இல்லாமல் போராடினார். அவருடைய போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட பலர் அவருடன் இணைந்து அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்டனர். 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘தண்டி யாத்திரை'க்கு தலைமை ஏற்று நடத்தினார். 1942 ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு' என்னும் இயக்கத்தை தொடங்கி உடனடியாக வெள்ளையர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

இது மட்டுமில்லாமல் இந்தியாவில் ஏற்கனவே வியாபித்திருந்த ஜாதி வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். தீண்டாமை என்னும் மனித தன்மையற்ற திட்டத்தை ஒழிக்க அயராது பாடுபட்டார். அவர் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

பொதுமக்கள் மத்தியில் அழியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய மிகச் சில தலைவர்களுள் காந்தியும் ஒருவர். நாடு சுதந்திரம் அடைவதற்காக சில வலிமையான வழிமுறைகளையும் , கடின உழைப்பையும் கொடுத்த மிகச்சிறந்த தலைவர் காந்தியடிகள். அவருடைய இந்த சிறப்பைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான காந்தி ஜெயந்தி அன்று பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மற்றும் இதர குழுக்களில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. பல்வேறு மொழி, மதம், இனம் போன்றவற்றை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து கலை நிகழ்ச்சிகள், பிரார்த்தனை வழிபாடுகள் மற்றும் கூட்டங்கள் நடத்தி அன்றைய நாளை சிறப்பிக்கின்றனர்.

ஒற்றுமை, தேசப்பற்று போன்றவற்றை வலிமையாக எடுத்துரைக்கும் வீதி நாடகங்களை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்றனர். இந்த மாபெரும் தலைவரின் சேவையை நினைவுகூரும் வகையில் தேசிய கொடி ஏந்தி இளைஞர்கள் பெருமை கொள்கின்றனர். பள்ளி மாணவர்கள் தேசியம் சார்ந்த பல்வேறு விவாதங்கள், ஓவியப்போட்டி , கைவினைப்பொருட்கள் செய்யும் போட்டி, கவிதை போட்டி, ஒப்புவித்தல் போட்டி போன்றவற்றில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இந்த மாபெரும் மனிதரை கௌரவப்படுத்தும் ஒரு நாளாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக சில பிரபல திரையரங்கங்கள் வெளியிடுகின்றன. தாய்நாட்டிற்கான அவருடைய பங்களிப்பு இந்தியர்களால் மட்டுமல்ல உலகத்தினர் அனைவராலும் பாராட்டப்படத் தக்கது.

காந்தியின் சித்தாந்தம்

காந்தியின் சித்தாந்தம்

வலிமையான காலனித்துவ சாம்ராஜ்யத்தை வீழ்த்த காந்தியடிகளின் நம்பிக்கை மற்றும் கொள்கைகள் வெகுஜன மக்களுக்கு ஒரு முக்கிய உந்துதலாக இருந்தன. அவருடைய சிந்தனைகள் இன்றுவரை மக்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. சரியான விஷயத்திற்கு போராட வேண்டும் என்ற எண்ணத்தை பாமர மக்களுக்கும் வழங்கக்கூடியதாக அவருடைய சித்தாந்தம் உள்ளது. வன்முறை இல்லாத அஹிம்சை முறையில் போராடுவது என்ற வழிமுறை வாழ்க்கைக்கான ஒரு மிகப்பெரிய பாடம். இந்த வழியை பின்பற்றி உலகையே அசைத்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Is Gandhi Jayanti 2020? History, Significance, Facts and Celebration In Tamil

When is gandhi jayanti 2020? History, significance, facts and celebration in tamil. Read on...
Desktop Bottom Promotion