For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க காதுகளில் காதல் ரிங்டோன் கேட்கப்போகுது...

|

காதல் சிக்னல் அனுப்புவது என்னவோ கண்கள்தான் ஆனால் குட்டி இதயத்திற்குள்தான் மின்சாரம் பாய்கிறது இடி இடிக்கிறது காதல் மழையாக பெய்கிறது. காதல் என்ற வார்த்தையை இன்றைக்கு உச்சரிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். மனிதர்களாக பிறந்தவர்கள் ஏதாவது ஒரு கால கட்டத்தில் எப்போதாவது காதலை உணர்ந்திருப்பார்கள். சிலரது காதல் ஜெயித்திருக்கலாம். சிலரோ காதலின் நினைவுகளுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் யாருடைய காதுகளில் எல்லாம் காதல் ரிங்டோன் ஒலிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

Valentines Day horoscope predictions for these zodiac signs

காதல் என்பது மின்னல் போல தாக்கும் அது எப்போது யாரை தாக்கும் என்பது தெரியாது. காதல் மலர்வதற்கு காலம் வரவேண்டும். அந்த காலம் வந்து விட்டால் எந்த நொடி என்பதெல்லாம் கிடையாது உங்களுக்கான நபரை நீங்க பார்த்தே தீருவீர்கள். என்னா பொண்ணுடா என்று ஆணும், என்ன ஆளுடா என்று அந்த பெண்ணின் மனதிலும் தோன்றும் மன்னன் மகளாக இருந்தாலும் மனதளவில் காதலிக்க தயாராகி விடுவீர்கள்.

மன்மதன் அம்பு பாய்வதற்கு தயாராக இருக்கும் அதனை ஏற்றுக்கொள்ள இதயம் தயாராக இருந்தால் போதும் காதல் சட்டென்று மலர்ந்து விடும். பார்க்கும் இடமெங்கும் பூ பூக்கும். காதலின் மணம் சுகந்தமாய் எங்கெங்கும் பரவும். ரத்த அணுக்களில் எங்கும் காதல் பரவும். காதலை நேசிக்கத் தொடங்குபவர்கள் பின்னர் அந்த காதலையே சுவாசிக்கத் தொடங்குவார்கள். இந்த காதலர் தினத்தில் எத்தனை பேர் மீது மன்மதன் அம்பு பாயப்போகிறதோ யாருடைய காதுகளில் எல்லாம் காதல் ரிங்டோன் ஒலிக்கப் போகிறதோ. காதல் வயப்பட்டவர்கள் எப்படி எல்லாம் உருகப்போகிறார்களோ பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் தூது

காதல் தூது

புறா விடு தூது, அன்னம் விடு தூது என ஆரம்பித்து இன்று வாட்ஸ் அப் சாட்டிங் வீடியோ கால் என பரந்து விரிந்து காதல் உலகளாவியதாக மாறி இருக்கிறது. டெலிபோன், செல்போன் எல்லாம் வருவதற்கு முந்தைய காலத்தில் பிறந்த தாத்தா பாட்டிகள் சிலர் இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்களின் காதல் கதைகளை எல்லாம் இப்போது கேட்டாலும் ருசிக்கும். அந்த அளவிற்கு ரசிக்க ரசிக்க பேசுவார்கள். இப்போது போது போல அப்போது எளிதில் சந்திக்க முடியாது என்றாலும் காதலிப்பவர்கள் மனதளவில் நேசத்தை வளர்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். தூது செல்வதற்கு என்று சில நட்பு வட்டாரங்கள் அப்போது இருந்தே இருந்தது.

அமர காதல்கள்

அமர காதல்கள்

அம்பிகாபதி அமராவதி காதல் போல அமர காதல்கள் நம் நாட்டில் எழுதப்பட்டிருக்கிறது. பல சினிமாக்களில் காதல் சொல்லப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் காதலைப்பற்றி பேசும் போதும் எழுதும் போதும் மனதிற்குள் ஐஸ்கிரீம் போல ஒரு ஜில்லிப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. காதல் என்பது கடல் அலை போல அது எல்லோர் மனதிலும் ஓயாது அடித்துக்கொண்டேதான் இருக்கும்.

காதல் காலங்கள்

காதல் காலங்கள்

இதயங்களுக்கு இடையேயான பரிமாறல்கள் முடிந்து சின்னச் சின்ன ஸ்பரிசங்கள்,ஸ்பெஷல் முத்தங்கள் என கொடுத்த பின்னரும் சில நாட்களில் சின்ன பிரிவு ஏற்பட்டால் கூட அந்த பிரிவு காதலர்களுக்கு இடையே தாங்க முடியாததாகி விடுகிறது. அப்போதுதான் காதல் பாடல்களை கேட்கவும் பார்க்கவும் அதிகம் பிடிக்கிறது.

காதல் பாஷைகள்

காதல் பாஷைகள்

சின்னச் சின்ன வாட்ஸ் அப் மெசேஜ்களை தட்டி விட்டு காதலான வார்த்தைகளை பரிமாறி பசியாறி கொள்கின்றனர் காதலர்கள். "உன்னை பார்க்காத நாளெல்லாம் நாளே இல்லை" என்று அவன் உருக... பதிலுக்கு அவளோ, "நீ தீண்டாத பாகங்கள் உயிரோடு இல்லை என்னுடைய தேகத்திலே"... என்று உருக... உருக காதல் இருவருக்கும் இடையே ஒரே ரொமான்ஸ் ஆக இருக்கிறது. ரொமான்ஸ் செய்வதற்கும், காதலில் கசிந்து உருகுவதற்கும் காதல் கிரகங்களின் பங்கு மிக முக்கியமானது.

காதல் கிரகங்கள்

காதல் கிரகங்கள்

காதலை துண்டி காதலை ஏற்படுத்தி காதலோடு வாழ வைப்பதற்கு மனோ காரகன் சந்திரன், தைரியத்தை தரக்கூடிய செவ்வாய், காதல் களத்திரகாரகன் சுக்கிரன் பங்கு மிக முக்கியமானது. இந்த கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்தே காதல் ஏற்படுகிறது. அந்த காதல் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றியடைகிறது.

ஜாதகத்தில் காதல்

ஜாதகத்தில் காதல்

ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடம் களத்திர ஸ்தானம். இதுதான் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

குரு பார்வை காதல் வெற்றி

குரு பார்வை காதல் வெற்றி

ஜாதகத்தில் ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம். ஏழாம் வீட்டின் மீது குரு பார்வை விழுந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதல் வாழ்க்கை அமையும்.

காதல் ரிங்டோன் ஒலிக்கும்

காதல் ரிங்டோன் ஒலிக்கும்

இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். அந்த சுக்கிரனை தனுசு ராசியில் உள்ள செவ்வாய் பார்க்கிறார். இந்த பார்வை சஞ்சார பலனால் மீனம், தனுசு, கன்னி, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் ரிங்டோன் ஒலிக்கும். இந்த காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாட தயாராகுங்கள் மக்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Valentine's Day horoscope predictions for these zodiac signs

Valentine's Day horoscope predictions for Your love forecast for the year's most romantic day.
Story first published: Friday, February 14, 2020, 10:19 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more