For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் சில உணவுகளால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணங்கள்!

|

உணவுகள் மட்டும் வாழ்க்கையின் முக்கியமான பகுதி இல்லை. உணவுகள் உயிர் வாழ்வதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் தான். உணவுகள் புதிய சமையலின் மூலம் மக்களை ஒன்றாக இணைக்கவும் உதவுகின்றன. அப்படிப்பட்ட உணவு சில சமயங்களில் மிகவும் அபாயகரமானதும் கூட. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி தான் எப்பேற்பட்ட ஆரோக்கியமான உணவையும் ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அதனால் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Unfortunate Deaths Caused By Food

அப்படி உலகில் உணவுகளால் சில துரதிர்ஷ்டமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரையில் அந்த மரணங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள், நீங்களே அசந்து போய்விடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காப்ஃபைன் பானம்

காப்ஃபைன் பானம்

2010 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தொடர்ச்சியாக கொக்கோ கோலா குடித்த நடாஷா என்னும் பெண் திடீர் மாரடைப்பால் மரணத்தை சந்தித்தார். இதுக்குறித்து அவரது கணவரிடம் கேட்ட போது, 30 வயதான நடாஷாவிற்கு கொக்கோ கோலா பானம் மிகவும் பிடிக்கும் என்றும், காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரை அதிகளவு கோலா குடிப்பதாகவும் கூறினார். அதுவும் ஒரு நாளைக்கு சுமார் 10 லிட்டர் கோலாவை அவர் மனைவி குடிப்பதாகவும் கூறினார்.

தண்ணீர்

தண்ணீர்

ஒருவர் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது தான். இருப்பினும் ஒருவர் அளவுக்கு அதிகமாக நீரைப் பருகினால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு பெண், அதிகமான நீரைப் பருகுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து அறியாமல், 2007 இல் ஒரு வானொலி நிலையம் நடத்திய தண்ணீர் குடிக்கும் போட்டியில் பங்கேற்று இறந்தார்.

டூனா/சூரை மீன்

டூனா/சூரை மீன்

அலுவலகத்தில் பணியாற்றும் போது தகவல் தொடர்பு மிகவும் முக்கியம். குறிப்பாக விடுமுறை நாட்களில் அல்லது அலுவலகத்தில் யாரும் இல்லாத போது அலுவலகத்திற்கு சென்றால், யாரேனும் ஒருவருடனாவது இதுக்குறித்து தெரிவிக்க வேண்டும். ஆனால் கலிஃபோர்னியாவில் ஆறு வருடங்களாக பம்பிள் பீ ஆலையில் பணிபுரிந்த திரு. ஜோஸ் மெலினா, டுனாவுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்துறை அடுப்பின் உட்புறத்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்தார் . அவர் அடுப்புக்குள் இருப்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்கவில்லை. இது தெரியாததால், அவரது சக ஊழியர் அவர் உள்ளே இருக்கும் போது அதை இயக்கிவிட்டார். இதனால் அவர் அந்த அடுப்பில் சுமார் 2 மணிநேரமாக டூனா மீனுடன் உள்ளே சிக்கி வெந்து போய் கொடூரமாக இறந்தார்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள். ஆனால் திரு. விண்செண்ட் ஸ்மித் என்பவர் சாக்லேட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு அகால மரணமடைந்தார். 2009 ஆம் ஆண்டில், 29 வயதான திரு. ஸ்மித், சமீபத்தில் நியூ ஜெர்சியிலுள்ள கேம்டனில் உள்ள லியோன்ஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இது ஒரு சாக்லேட் கம்பெனி. ஒருமுறை ஸ்மித் சாக்லேட் உருக்கும் குழாயின் மேல் உள்ள மேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வழுக்கி குழாயினுள் விழுந்துவிட்டார். அவர் விழுவதைக் கண்ட உடன் பணிவோர் அவரைத் தூக்குவதற்குள், அவர் இறந்துவிட்டார்.

மிட்டாய் இயந்திரம்

மிட்டாய் இயந்திரம்

சிங்கப்பூரில் உள்ள செங் மிட்டாய் தொழிற்சாலையின் உரிமையாளரான 73 வயதான திரு. என்.ஜி.செ குவாங்கைப் பொறுத்தவரை, ஒரு வழக்கமான நடைமுறையாகத் தோன்றியது அவரது வாழ்க்கையை இழந்த ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டில், திரு. என்ஜி மிட்டாய்களுக்காக சிவப்பு பீன் பேஸ்ட் தயாரிக்கும் இயந்திரத்தில் நழுவி விழுந்திருந்தார். இந்த கலவையை வேகமாக கலக்கியதால், இயந்திரத்தில் விழுந்த என்ஜி நசுங்கி இறந்தார்.

பேக்கிங்

பேக்கிங்

பராமரிப்பு பணிகள் மிகவும் அபாயமானது. குறிப்பாக மிகப்பெரிய, கனமான இயந்திரங்களைப் பராமரிக்கும் பணி இன்னும் ஆபத்தானது. இம்மாதிரியான பணிகளில் இருப்பவர்கள் எப்போதும் கவனமாகவும், முன்னெச்சரிகையுடனும் இருக்க வேண்டும். 1998 ஆம் ஆண்டு லெய்செஸ்டரில் உள்ள ஹார்வெஸ்டைம் பேக்கரீஸ் ஆலையில் டேவிட் மாயீஸ் மற்றும் லான் எரிக்சன் இருவரும், பிரட் பேக்கிங் ஓவனைப் பராமரிக்கும் பணியை செய்து வந்தார்கள். இந்த ஓவனானது சுமார் 23 மீட்டர் நீளமானது. இந்த ஓவனை பராமரிக்கும் பணியை செய்வதற்கு 12 மணிநேரம் முன்னே இந்த ஓவனை அணைத்துவிட வேண்டும். ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு முன் அணைக்கப்பட்ட ஓவனில் இவர்கள் இருவரும் நுழைந்துவிட்டனர். இதனால் அதிகமான வெப்பநிலையின் காரணமாக இருவரும் கடுமையான தீக்காயங்களால் இறந்துவிட்டனர்.

கேரட்

கேரட்

கேரட் மிகவும் ஆரோக்கியமான காய்கறி. இதில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட கேரட்டை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பயங்கரமான விளைவை சந்திக்க நேரிடும் அப்படி தான் 48 வயதான பேசில் ப்ரௌன், ஒரு வித்தியாசமான டயட்டை மேற்கொள்ள நினைத்தார். 1974 இல், இவர் தினமும் 3.8 லிட்டர் கேரட் ஜூஸ் குடிக்க ஆரம்பித்தார். இவரது இப்படிப்பட்ட டயட்டை அறிந்த இவரது டாக்டர் இவரை எச்சரித்தும், இவர் தொடர்ந்து 10 நாட்கள் கேரட் ஜூஸைக் குடித்தார். அதுவும் ஒரு நாளைக்கு குடிக்க வேண்டிய அளவை விட 10,000 மடங்கு அதிகமாக கேரட் ஜூஸைக் குடித்தார். இதனால் இவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு, இறந்தார். அளவுக்கு அதிகமாக வைட்டமின் ஏ எடுத்ததால், அது நச்சானதுடன், கல்லீரல் செயலிழந்து போனது. மேலும் அதிகமான கரோட்டீன் உடலில் இருந்ததால், இவரது சருமம் மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் மாறியிருந்தது.

ஹாட் டாக்

ஹாட் டாக்

உலகில் பல வெரைட்டியான உணவுகளைக் கொண்டு போட்டிகள் நடத்தப்படுவது சாதாரணம். அதில் ஒரு வகையான உணவுப் போட்டி தான் ஹாட் டாக் போட்டி. சான் பெட்ரோ பகுதியைச் சேர்ந்த 13 வயது நோவா அகர்ஸ், ஹாட் டாக் சாப்பிடும் விளையாட்டு போட்டியின் போது, அது சிக்கி மூச்சுத் திணறி இறுதியில் இறந்தார்.

விஸ்கி

விஸ்கி

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரைன் எட்டில்ஸ், க்ளென்பிடிச் டிஸ்டில்லரியில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். ஒரு நாள் இரவு தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, மறுநாள் எப்போதும் போன்று வேலைக்கு சென்றார். அவரது செயல்பாடு மற்றும் தோற்றம் சாதாரணமாகவே இருந்தது. இவர் 5 மீட்டர் உயரமுள்ள சுமார் 50,000 லிட்டர் டேங்கின் மீது ஏறினார். அப்போது அந்த டேங்கில் அவர் விழுந்துவிட்டார். அவசரகால குழுவினர் அவரை அடைந்து சிகிச்சை அளிக்கும் முன், அவர் இறந்துவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unfortunate Deaths Caused By Food

Here are some unfortunate deaths caused by food. Read on...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more