Just In
- 18 min ago
நீங்கள் தினமும் சாப்பிடும் இந்த 3 பொருட்கள் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை அதிகமாக்குமாம்... உஷார்!
- 38 min ago
உங்க கணவன் & மனவிகிட்ட இந்த மோசமான பழக்கம் இருந்தா...நீங்க நரகத்துல மாட்டிகிட்டீங்கனு அர்த்தமாம்!
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள செல்வமும், புகழும் தேடி வருமாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
- 3 hrs ago
இந்த சமையல் உத்திகள் மூலம் உங்கள் உடல் எடையை ஈஸியா குறைக்கலாமாம் தெரியுமா?
Don't Miss
- Technology
எச்சரிக்கை! உங்க Wi-Fi Router இந்த 4 கம்பெனியை சேர்ந்தது என்றால் உடனே மாத்திடுங்க!
- Movies
நான் ரொம்பலாம் படிக்கமாட்டேன்னு சொன்ன சிவகார்த்திகேயன்.. அதுக்கு அர்ஜுன் ரியாக்ஷன பாத்தீங்களா?
- Automobiles
இனி தரம் குறைவான டயர்களை எல்லாம் தயாரிக்க முடியாது!! அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு!
- News
முதல்வரே ! கோடநாடு அரக்கன்.. கண்முன் நிழலாடும் களவாணியை பிடிங்க.. யாரை சொல்கிறார் இந்த அழகு!
- Sports
அடிக்கனும்னு நினைச்சா அடிச்சிடனும்.. சாதனை சதத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் மாஸ் பேச்சு
- Finance
வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சோமேட்டோ..!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் வெளிநாடு செல்லும் கனவு நனவாக போகிறது..
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 03 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

மேஷம்
உங்கள் பரபரப்பான வழக்கத்தின் காரணமாக இன்று உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், வேலையுடன் உங்கள் ஆரோக்கியத்தையும் முழுமையாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக உயர் அதிகாரிகளை மகிழ்விப்பதற்காக உங்கள் மீது அதிக வேலை அழுத்தத்தைத் தவிர்க்கவும். மேலும், ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாளுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இது பல தவறுகளுக்கு வழிவகுக்கும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். சமீபத்தில் எடுக்கப்பட்ட எந்தவொரு முக்கியமான வணிக முடிவுகளிலிருந்தும் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று குடும்பத்துடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்:32
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 11:25 மணி வரை

ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். குறிப்பாக சக ஊழியர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் உங்களைப் பற்றிய ரகசிய விஷயங்களை பிறருடன் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் இன்று எந்த பெரிய விஷயத்தையும் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சில புத்திசாலித்தனமான திட்டத்தில் பணியாற்றலாம். மற்றவர்களின் விருப்பத்தின் பேரில் முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்கள் துணைக்கு ஒரு நல்ல ஆச்சரியத்தை கொடுக்க திட்டமிட இன்று நல்ல நாள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் மதியம் 2:20 மணி வரை

மிதுனம்
இன்று மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள். நீங்கள் வழிபாட்டில் நிறைய ஆர்வத்தை உணர்வீர்கள். மேலும், நீங்கள் இயலாதவர்களுக்கு உதவ முடியும். வேலையைப் பற்றி பேசும்போது, இன்று எந்த முக்கியமான வேலையையும் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் எல்லா வேலைகளையும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அழகுசாதனப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுவோர் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரிவு சாத்தியமாகும். இருப்பினும், புரிதலுடன் உங்கள் துணையை சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:40
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

கடகம்
இன்று வேலை அடிப்படையில் உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் வேலையில்லாமல் இருந்தால் இன்று பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல சலுகையைப் பெறலாம். நீங்கள் ஏற்கனவே வேலை செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு பிடித்த திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படலாம். முன்னேறுவதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. எனவே உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவும். வணிகர்களின் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். குறிப்பாக பால் பொருட்கயை வர்த்தகம் செய்தால், நீங்கள் நல்ல லாபம் பெறலாம். மருந்து வணிகம் செய்பவர்கள் அதிக அளவு பொருட்களை சேமித்து வைக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், சில குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கம் மோசமடைய வாய்ப்புள்ளது. உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு சிறுநீர் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்:20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சிம்மம்
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளைத் தவிர, சக ஊழியர்களுடனும் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். ஆணவம் மற்றும் மோதலால் இழப்பு உங்களுக்கே ஏற்படும். இன்று வணிகர்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் உங்கள் கவலைகள் அதிகமாகும். உங்களின் எந்த முக்கிய வேலையிலும் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு கொஞ்சம் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இந்த பண்டிகை காலங்களில் உங்கள் செலவுகள் சற்று அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சிப் பிணைப்பு அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவில் கவனக்குறைவாக இருப்பதன் காரணமாக, உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

கன்னி
நீங்கள் ஒரு தொழிலதிபர் மற்றும் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் சிறிய முதலீடுகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன் மூலம் வரும் நாட்களில் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். நீங்கள் வேலை தொடர்பான ஆலோசனைகளை வழங்கினால், உங்கள் வார்த்தைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் விடாமுயற்சியுடன் முடிப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று நீங்கள் அன்புக்குரியவர்களுக்காக சில முக்கியமான கொள்முதல் செய்யலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். உங்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். நிதி விஷயத்தில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், எண்ணெயில் பொரித்த உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 4:20 மணி வரை

துலாம்
உங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை நீங்கள் எதிர்கொண்டால், விரக்தியடையத் தேவையில்லை. பொறுமையாகவும் கடவுள் நம்பிக்கையுடனும் இருங்கள். விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் உங்களுக்காக திறக்கப்படும். வியாபாரிகள் இன்று லாபத்திற்காக கடுமையாக போராட வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையின் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் உணர்வுகளை புண்படுத்தும். அவர்களின் கசப்பான வார்த்தைகள் உங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை ஆழமாக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், வானிலை மாற்றத்தால் உங்கள் ஆரோக்கியம் குறையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை

விருச்சிகம்
வேலை முன்னணியில் உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் வழிகாட்டுதல் கிடைக்கும். இன்று உங்கள் முயற்சிகளை புதிய திசையில் தொடங்கலாம். விரைவில் உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். இன்று சில சாதகமான மாற்றங்கள் சாத்தியமாகும். வியாபாரிகளுக்கு பணம் சம்பந்தமான கவலைகள் விலகும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நல்ல நாளாக இருக்கும். குறிப்பாக உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் அன்புக்குரியவருக்கு மதிப்புமிக்க பரிசையும் வாங்கலாம். இன்றைய நாள் நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். இன்று உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தனுசு
நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தால், படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவையற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டாம். பணவரவு குறைவதால், இன்று உங்கள் கவலைகள் சற்று அதிகரிக்கலாம். உங்கள் நிதி முடிவுகளை நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். இன்று வேலையில் கலவையான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் நடத்தையை நன்றாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்:12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மகரம்
இன்று குடும்பப் பொறுப்புகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இன்று அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நாளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. அதுமட்டுமின்றி மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகள் இன்று திடீர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் நிதி முன்னணியில் கலவையான முடிவுகளைப் பெறலாம். குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் குறையலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் இன்று மிகவும் சோர்வாக உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

கும்பம்
உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த விரும்பினால், உங்கள் நிதி முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். இது தவிர, உங்கள் செலவுகளின் சரியான கணக்கையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதிக உற்சாகத்துடன் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு வேலை தொடர்பான ஆலோசனைகளை வழங்கினால், நீங்கள் அதை கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்தால் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். அவர்களுடனான உறவு வலுவாக இருக்கும். நீங்கள் தனிமையில் இருந்தால், விரைவில் உங்கள் திருமணம் பற்றி வீட்டில் விவாதிக்கப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மீனம்
இன்று ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் பெரும் பயன் பெறலாம். நீங்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல நீண்ட காலமாக முயற்சித்துக்கொண்டிருந்தால், இன்று நீங்கள் வெற்றியைப் பெறலாம். நிதி விஷயத்தில் இந்த நாள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். திடீரென்று உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். மேலும் உங்கள் முக்கிய முடிவுகளில் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை