For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத் தடை நீக்கும் ஆண்டாள் விரதம்!

|

ஜாதகத்தில் தோஷங்களோ, களத்திர ஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணி சரியில்லாமல் இருந்தாலோ, கிரகங்களின் பார்வை சரியில்லாமல் இருந்தாலோ திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடக்கலையே என்ற கவலை மனதை வாட்டும். திருமண தடை நீங்க மார்கழி மாதம் திருப்பாவை பாடி ஆண்டாளை தரிசனம் செய்தால் போதும் திருமண தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் கிடைக்கும். பெண்களுக்கு அந்த கண்ணனைப் போல மணவாளன் அமைய வாய்ப்பு உள்ளது. ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்கள் இறைவனாகிய கண்ணனே கணவனாக வரவேண்டும் என வேண்டுவதாக அமைந்துள்ளது.

திருமாலை தனது கணவனாக மனதில் எண்ணிக்கொண்டு, அவரையே நினைத்து உருகியவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்காக தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர் ஆண்டாள்.

ஒருவரின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை திருமண தடையை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள நபரையே திருமண தடையை ஏற்படுத்தும். களத்திர தோஷமும், செவ்வாய் தோஷம் போல திருமணம் நடப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பின் அதிகமாக சண்டை வந்து திருமண பந்தம் முடிவுக்கு வரும் என்ற நிலைமைக்கு கொண்டு செல்லும். திருமண தடைகள் நீங்கவும், முந்தைய பிறவியில் செய்த பாவங்களை போக்கவும் ஹோமங்கள் செய்யலாம். மார்கழியில் விரதம் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்டாள் நோன்பு

ஆண்டாள் நோன்பு

திருமாலை தவிர, மற்ற மானிடரை கணவனாக ஏற்க மாட்டேன் என்று சபதம் மேற்கொண்ட ஆண்டாள், கிருஷ்ணன் அவதாரத்தின் போது கிருஷ்ணரை மணக்க கோபியர்கள் மேற்கொண்ட பாவை நோன்பை, மார்கழி மாதத்தில் ஆண்டாளும் மேற்கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு, அவரது கையில் இருந்த சங்கை பார்த்தபடி, 'மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்' என தொடங்கி, வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று முடியும் முப்பது பாடல்களை திருமாலை நினைத்து பாமாலையாக பாடினார்.

கண்ணனுக்காக விரதம்

கண்ணனுக்காக விரதம்

உலகத்தை ஆளும் கண்ணனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக, ஆண்டாள் மேற்கொண்ட நோன்பு தான் பாவைநோன்பு. இந்த நோன்பை கடைபிடிப்பதற்காக அதிகாலையில் எழுந்து, தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துச் சென்று நீராடிவிட்டு வருவார். பின்பு தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமர்ந்த கோவிலை கண்ணனின் வீடாகவும் எண்ணிக்கொண்டு தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

ஆண்டாள் மகிமை

ஆண்டாள் மகிமை

ஆண்டாள் விரதம் இருந்து மனதிற்கு பிடித்த திருமாலை திருமணம் செய்தது போல, தனக்கும் விரும்பிய கணவர் அமைய வேண்டி விரதம் இருக்கும் பெண்கள், தங்கள் விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள்புரிவாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

திருவோண விரதம்

திருவோண விரதம்

ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அதனால், ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணமாகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மேலும், பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டாலும், வாரணம் ஆயிரம் பாடி வந்தாலும் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய கணவர் கிடைப்பார். பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

திருமண வரம் தரும் ஸ்லோகம்

திருமண வரம் தரும் ஸ்லோகம்

மார்கழி மாதத்தில் ஆண்டாளை மனதார வேண்டிக்கொண்டு இந்த ஸ்லோகத்தை கூறலாம்.

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்

அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:

தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா

தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம் என்று கூறி செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இத்துதியை பாராயணம் செய்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் கிடைப்பார்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

செவ்வாய்க்கிழமை ஆண்டாளை வணங்க இயலாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை சென்று தரிக்கலாம். பெரிய பெருமாள் கோவிலுக்கும், ஆண்டாள் கோவிலுக்கும் மத்தியில் துளசி நந்தவனம் உள்ளது. அங்கு ஆண்டாள் தனியே நிற்கும் சன்னதி உள்ளது. இதை ஆடிப்பூரம் தினத்தன்று 108 தடவை சுற்றினால் நினைத்தது நடக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும். என்ன விரதம் இருக்க தயாராகிவிட்டீர்களா?.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Magic Of Margazhi: Delay Marriage Remove Aandal Pasuram

The Thiruppavai is a collection of thirty paasurams written in Tamil by Andal also known as Nachiyar, in praise of the Lord kannan.Astrological combinations for Late Marriage Apart from seventh house, some planets play very significant role in delaying the marriage.
Story first published: Wednesday, December 18, 2019, 14:56 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more