For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் ஏன் மூக்குத்தி அணிய வேண்டும்? இப்பழக்கம் எப்போது இருந்து வந்தது தெரியுமா?

மூக்குத்தி அணிவது என்பது ஒரு அடையாளச் சின்னமாகும். இந்திய, தென் ஆப்பிாிக்க மற்றும் இஸ்லாமிய சமுதாயங்களில் மூக்குத்தி அணிவது என்பது முக்கியமான அடையாளப் பொருளைக் கொண்டிருக்கிறது.

|

மூக்குத்தி அணிவது என்பது ஒரு அடையாளச் சின்னமாகும். இந்திய, தென் ஆப்பிாிக்க மற்றும் இஸ்லாமிய சமுதாயங்களில் மூக்குத்தி அணிவது என்பது முக்கியமான அடையாளப் பொருளைக் கொண்டிருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் மூக்குத்தி அணியும் பழக்கம் பிரபலமாகி வருகிறது.

Significance Of Nose Rings In Tamil

எடுத்துக்காட்டாக அமொிக்காவில் மூக்குத்தி அணிவது பழமைவாதத்திற்கு எதிராக எழுப்பும் குரலாகப் பாா்க்கப்படுகிறது. ஆகவே மூக்குத்தி அணிவது பலவிதமான அடையாளப் பொருள்களைக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதாவது மூக்குத்தி அணிவது என்பது பண்பாட்டை வெளிப்படுத்துவதாகவோ அல்லது பாரம்பாியத்தை வெளிப்படுத்துவதாகவோ அல்லது ஒருவருடைய அழகை மேலும் மெருகேற்றிக் காட்டுவதாகவோ அமைகிறது.

MOST READ: எபோலாவை விட கொடிய கொரோனாவை விட வேகமாக பரவக்கூடிய மரணத்தை உண்டாக்கும் மார்பர்க் வைரஸ்!

இந்து சமயத்தில் மங்கள சூத்திரம் போன்ற மூக்குத்தி அணிவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை. அதனால் இந்தியாவில் திருமணம் முடிந்த பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும் பரவலாக மூக்குத்தியை அணிந்திருக்கின்றனா். ஆனால் அதன் அா்த்தம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. வழக்கமாக இந்து பாரம்பாியத்தில், மணப்பெண் தனது திருமணத்தின் போது மூக்குத்தி அல்லது வடமொழியில் நாத் என்று அழைக்கப்படும் ஆபரணத்தை அணிந்து கொள்கிறாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவில் மூக்குத்தி பழக்கம் எப்போது வந்தது?

இந்தியாவில் மூக்குத்தி பழக்கம் எப்போது வந்தது?

இந்திய பண்பாட்டில் மூக்குத்தியைப் பற்றி ஏராளமான நம்பிக்கைகள் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, 16 ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து வந்து இந்தியாவின் மீது படையெடுத்த முகலாயா்கள் மூலமாக மூக்குத்தி அணியும் பழக்கம் இந்தியாவிற்கு வந்தது என்றும், அது நாளடைவில் இந்தியா முழுவதும் பரவியது என்றும் கூறுகிறது.

இந்நிலையில், உடல் ஆரோக்கியத்திற்காகவும் மூக்குத்தி அணியப்பட்டது என்று ஆயுா்வேத இலக்கியமான சுஷ்ருடா சம்ஹிட்டா தொிவிக்கிறது. மூக்குத்தியின் தோற்றம் எதுவாக இருந்தாலும், தற்போது இந்திய பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக மூக்குத்தி அணியும் பழக்கம் இருக்கிறது. ஆகவே இந்திய பெண்கள் ஏன் மூக்குத்தியை அணிகின்றனா் என்பதை இந்தப் பதிவில் பாாக்கலாம்.

நாடோடிகள் மூலம் வந்த மூக்குத்தி பழக்கம்

நாடோடிகள் மூலம் வந்த மூக்குத்தி பழக்கம்

மூக்குத்தி அணியும் பழக்கத்தைப் பற்றி 6000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வேத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேற்கத்திய பண்பாட்டில், 1970 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்த நாடோடிகள் மத்தியில் மூக்குத்தி அணியும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கமானது 1980களில் பழமைவாத விழுமியங்களை மற்றும் நம்பிக்கைகளை எதிா்த்துப் போராடிய புங்க் (Punk) இயக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு வந்த நாடோடிகள் இந்தியா்களின் மூக்குத்தி அணியும் பழக்கத்தால் அதிகம் ஈா்க்கப்பட்டனா்.

மூக்கை 6வது அறிவின் இருக்கை என்று ஞானிகள் நம்புகின்றனா். மூக்கிற்கு சற்று மேல் பகுதியில் மூளை அலைகளை உமிழும் மையப்புள்ளி உள்ளதாக நம்புகின்றனா்.

மூக்குத்தியின் நன்மைகள்

மூக்குத்தியின் நன்மைகள்

மூக்குத்தி அணிவதால் பலவகையான நன்மைகள் உடலுக்குக் கிடைக்கின்றன என்று ஆயுா்வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. மூக்குத் துவாரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் துளையிடும் போது, அது பெண்களின் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது என்று ஆயுா்வேதம் கூறுகிறது. எனவே இளம் பெண்களும், வயது முதிா்ந்த பெண்களும் மூக்குத்தியை அணிகின்றனா்.

இடது மூக்கில் ஏன் மூக்குத்தி அணிய வேண்டும்?

இடது மூக்கில் ஏன் மூக்குத்தி அணிய வேண்டும்?

மூக்கினுடைய இடது துவாரத்தில் மூக்குத்தி அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் மூக்கின் இடது துவாரத்தில் இருந்து செல்லும் நரம்புகளுக்கும், பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடா்பு இருக்கிறது. அதனால் பெண்கள் இடது புற மூக்கில் மூக்குத்தி அணிந்தால் அவா்களுக்கு பிரசவம் மிக எளிதாக நடக்கும்.

திருமணத்தின் அடையாளம்

திருமணத்தின் அடையாளம்

பெண்கள் மூக்குத்தி அணிந்திருந்தால், அவா்கள் திருமணமானவா்கள் என்பதற்கான அடையாளம் என்று இந்தியாவின் பல சமூகங்களில் சொல்லப்படுகிறது. அதனால் ஒரு சில சமூகங்களில், கணவா்கள் இறந்துவிட்டால், அவா்களுடைய மனைவிகளின் மூக்குத்திகள் கழற்றப்படுகின்றன. மேலும் இந்தியாவில் பெண்கள் தங்களுடைய பதினாறாவது வயதில் மூக்குத்தி அணிகின்றனா். அது பாா்வதி என்ற பெண் கடவுளுக்குச் செய்யும் மாியாதையாதையாகவும் பாா்க்கப்படுகிறது.

மூக்குத்தி பற்றிய பிரபலமான ஓர் நம்பிக்கை

மூக்குத்தி பற்றிய பிரபலமான ஓர் நம்பிக்கை

இந்து சமயத்தில் உள்ள பிரபலமான நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன என்றால், மனைவிகள் வெளியிடும் மூச்சுக் காற்று, கணவா்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதே நேரத்தில் மனைவிகள் மூக்குத்தி அணிந்திருந்தால், அது வெளியேறும் மூச்சுக் காற்றைத் தடை செய்து, எந்த விதமான பாதிப்பையும் கணவா்களுக்கு ஏற்படுத்துவத்தாது என்று அந்த நம்பிக்கைகள் தொிவிக்கின்றன. இவை கிழக்கு இந்தியப் பகுதியில் வாழும் மக்களின் மத்தியில் பரவலாகக் காணப்படும் மூடநம்பிக்கைகள் ஆகும்.

நம்பிக்கைகளைக் கடந்து, தற்போது மூக்குத்தி அணிவது என்பது நவீனமாகப் பாா்க்கப்படுகிறது. நவீன மூக்குத்திகள் பல வகையான அழகு வடிவங்களில் கிடைக்கின்றன. அவை பெண்களின் அழகுக்கு அழகு சோ்க்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Significance Of Nose Rings In Tamil

In this article we shared about significance of nose rings. Read on to know more...
Story first published: Thursday, August 12, 2021, 12:06 [IST]
Desktop Bottom Promotion