Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Sports
ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்
- Movies
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜனவரி மாதத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!
கிரிகோரியன் நாட்காட்டியின் படி வருடத்தின் முதல் மாதம் தான் ஜனவரி. புத்தாண்டின் முதல் மாதத்தில் காலடியை எடுத்து வைக்கும் போது நம் அனைவருக்குமே மிகவும் சந்தோஷமாக இருக்கும். நம்மில் பலர் இந்த வருடம் புதிய இலக்குடன் பல தீர்மானங்களை எடுப்போம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஜனவரி மாதத்தைப் பற்றிய வரலாறு மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மைகளைப் பற்றி தெரியும் என்று கேட்டால் நிச்சயம் அது குறைவான அளவில் தான் இருக்கும்.
உங்களுக்கு ஜனவரி மாதத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

உண்மை #1
ஜனவரி மாதத்தின் பெயரானது இரண்டு முகம் கொண்ட ரோமானிய கடவுளான ஜானஸின் பெயரின் மூலம் வந்தது. ஜானஸ் என்பவர் மத்திய இத்தாலியில் உள்ள ஒரு இடமான லாட்டியம் மன்னராக கருதப்பட்டார். இவர் இரண்டு தலைகளால் ஆசீர்வதிக்கப்பட்டார். இதன் காரணமாக இவரால் இரண்டு வெவ்வேறு திசைகளில் பார்க்க முடிந்தது. அதோடு இவரால் கடந்த காலங்களில் ஒரு வருடம் முன்னும், ஒரு வருடம் பின்னும் காண முடிந்தது.

உண்மை #2
ஸ்காட்டிஷ் பாரம்பரியத்தின் படி, புத்தாண்டின் முதல் திங்கட்கிழமை குழந்தைகளுக்கு பரிசுகளைக் கொடுக்கும் நாளாகும். முந்தைய நாட்களில், கிறிஸ்துமஸ் 12 நாட்களுக்கு, ஜனவரி 5 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதற்கு மூன்று மன்னர்கள் பெத்லகேமுக்கான பயணத்தின் போது எடுத்த முடிவாகவும், ஜனவரி 5 தான் 12 ஆம் நாள் என்றும் மக்களால் நம்பப்படுகிறது.

உண்மை #3
ஹோரி செல்டிக் பாரம்பரியத்தில், ஜனவரி 5 என்பது 12 நாட்கள் குளிர்கால சங்கராந்தி கொண்டாட்டத்தின் முடிவாக இருந்தது. இந்த நாளில், மக்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் வஸ்ஸைல் கிண்ணத்திலிருந்து வாழ்த்தினர். வசைல் என்றால் "நல்ல ஆரோக்கியத்துடன் இருங்கள்" என்று பொருள்.

உண்மை #4
ஜனவரி 6 ஆம் தேதி எபிபானி கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரியா, கொலம்பியா, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற பல்வேறு நாடுகளில் இந்நாளின் போது பொது விடுமுறை ஆகும். ஒரு பழைய நம்பிக்கையின் படி, மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவுக்கு இந்நாளில் அன்பளிப்பு பரிசுகளை எடுத்துச் சென்றார்களாம். ஐரோப்பாவில், இளம் பருவத்தினர் ராஜா போன்று ஆடை அணிந்து வீடுகளுக்கு வருவார்கள். அவர்களுக்கு கைத்தட்டல், குக்கீஸ் போன்றவை வீட்டில் இருப்போர் வழங்குவராம்.

உண்மை #5
ஜனவரி 15, 1929 இல் மரியாதைக்குரிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்தார். அவர் பாதிரியார்களின் அமைச்சராகவும், அமைதிக்கான பரிசு வென்றவராகவும், சிவில் உரிமைத் தலைவராகவும் இருந்தார். நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரான போரில் அவர் வென்றார். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஒரு வலுவான பேச்சாளராகவும் இருந்தார். இதனால் பல நிறுவனங்களுக்கு இந்நாள் ஒரு தேசிய விடுமுறையாக உள்ளது.

உண்மை #6
1706 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்தார். இவர் உலகெங்கிலும் நன்கு அறியப்பட்ட கண்டுபிடிப்பாளர், விஞ்ஞானி மற்றும் அரசியல்வாதி ஆவார்.

உண்மை #7
ஆங்கிலோ-சாக்சன் காலங்களில், ஜனவரி மாதத்தில் ஓநாய்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தன என்று கருதப்பட்டது. அதனால் தான் இது "ஓநாய் மாதம்" என்று அழைக்கப்படுகிறது.

உண்மை #8
ஜனவரி மாதம் ஒரு "விவாகரத்து மாதமாக" பிரபலமாக உள்ளது. பிரிய விரும்பும் பெரும்பாலான தம்பதிகள் ஜனவரி மாதத்தில் விவாகரத்தை தாக்கல் செய்வதாக வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். வேலையின்மை அதிகரிப்பதால் ஜனவரி மாதத்தில் 2000-க்கும் மேற்பட்ட மனைவிகள் விவாகரத்து குறித்து ஆலோசனை பெறுவதாக என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

உண்மை #9
அமெரிக்காவில் ஜனவரி மாதம் தேசிய சூப் மாதமாக அறியப்படுகிறது. குளிர் உச்சத்தில் இருக்கும் போது ஆரோக்கியமான மற்றும் சூடான சூப் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, நிம்மதியையும் உணர வைக்கும். இந்த மாதத்தில் அமெரிக்காவில் சந்தைகள் சூப் விற்பனையாளர்களால் நிரப்பப்பட்டிருக்கும். இம்மாதத்தில் பல சுவையான பாரம்பரிய அமெரிக்க சூப்புகள் சந்தையில் கிடைக்கும்.