For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி மீண்ட இந்திய பிரபலங்கள்!

இன்று உலக புற்றுநோய் தினம். இந்த விசேஷமான தருணத்தில், இந்த கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி உயிர் பிழைத்த சில வலிமையான மனம் கொண்ட இந்திய பிரபலங்களை நினைத்துப் பார்ப்போம்.

|

உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (யுஐசிசி) தலைமையிலான உலகளாவிய ஒன்றுபடும் முயற்சியாகும். உலகளவில் அதிக இறப்புக்கு புற்றுநோய் தான் இரண்டாவது முக்கிய காரணம். புற்றுநோய் என்றால் என்ன தெரியுமா? புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்களின் குழுவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். இது எந்த வயதிலும் ஏற்படலாம். இதை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், அது மரணத்திற்கு வழிவகுக்கும்.

World Cancer Day 2021: Indian Celebs Who Successfully Fought Cancer And Recovered

உலகில் எச்.ஐ.வி / எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை விட அதிகமான இறப்பு புற்றுநோயால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதைத் தடுப்பதை ஊக்குவிப்பதற்கும் உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி ஒரு சர்வதேச நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது.

MOST READ: ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

இன்று உலக புற்றுநோய் தினம். இந்த விசேஷமான தருணத்தில், இந்த கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி உயிர் பிழைத்த சில வலிமையான மனம் கொண்ட இந்திய பிரபலங்களை நினைத்துப் பார்க்கும் வகையில், தமிழ் போல்ட்ஸ்கை அந்த பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோனாலி பிந்த்ரே

சோனாலி பிந்த்ரே

90-களில் பலருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் தான் சோனாலி பிந்த்ரே. இவர் மெட்டாஸ்டேடிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மெட்டாஸ்டாஸிஸ் புற்றுநோயில், புற்றுநோய் செல்கள் நிணநீர் அமைப்பு அல்லது இரத்த ஓட்டம் மூலமாக உடலின் புதிய பகுதிகளுக்கு பரவுகின்றன. புற்றுநோயானது அது தோன்றிய பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பரவும் போது, அது மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. கல்லீரல், நுரையீரல், நிணநீர் மற்றும் எலும்புகள் போன்றவை மெட்டாஸ்டாசிஸின் பொதுவான பகுதிகள் ஆகும்.

தஹிரா காஷ்யப்

தஹிரா காஷ்யப்

எழுத்தாளரும், இயக்குநருமான, தஹிரா காஷ்யப் 2018 ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலையில் இருப்பதை கண்டறிந்ததார். ஆரம்ப கட்ட மார்பக புற்றுநோய் அல்லது DCIS என்பது புற்றுநோய் செல்கள் தாய்ப்பால் நாளத்தின் புறணியில் வளரும் ஒரு அசாதாரண புற்றுநோய் கெட்டிகளாகும். இந்த வகை புற்றுநோயில் சேதமடைந்த செல்கள் மார்பகத்தின் மற்ற பகுதிகளுக்கு பரவாது.

லிசா ரே

லிசா ரே

பல தசாப்தத்திற்கு முன் லிசா ரே மல்டிபிள் மைலோமா புற்றுநோயால் கண்டறியப்பட்டார். நீண்ட வருட போராட்டத்திற்கு பின், அவர் இந்த புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமாகியிருப்பதை அறிவித்தார். மல்டிபிள் மைலோமா என்பது ஒரு வகை புற்றுநோயாகும். இது பிளாஸ்மா செல்களில் உருவாகிறது. பிளாஸ்மா செல் என்பது ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் ஒரு வகை இரத்த வெள்ளையணு ஆகும்.

மனிஷா கொய்ராலா

மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு 2012 ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் நியூயார்க்கில் ஆறு மாத கால சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். கருப்பை புற்றுநோய் பெண் இனப்பெருக்க அமைப்பின் கர்ப்பப்பையில் தொடங்குகிறது. இந்த வகை புற்றுநோய் இடுப்பு மற்றும் அடிவயிற்றில் பரவும் வரை, பெரும்பாலும் கண்டறியப்படாமல் போகும்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கிற்கு 2011 ஆம் ஆண்டு இடது நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இது நுரையீரல் திசுக்கள் அல்லது காற்றுப்பாதைகளில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படுகிறது.

கௌதமி

கௌதமி

பாலிவுட்டை விட தென்னிந்திய திரைப்படங்களில் அதிகம் நடித்து புகழ்பெற்ற நடிகை கௌதமி மார்பக புற்றுநோயால் போராடினார். இந்த நோயில் போராடி வென்ற பின்னரும் நடிகை கௌதமி திரைப்படங்களில் நடித்தார். புற்றுநோயில் இருந்து மீண்ட பின்னர், இவர் புற்றுநோய் தொடர்பான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று வந்ததுடன், தனது அனுபவங்களை இந்தியாவிலும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் பகிர்ந்து வந்தார்.

அனுராக் பாசு

அனுராக் பாசு

இயக்குநரான அனுராக் பாசு இரத்த புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்தார். லுகேமியா என்பது இரத்த புற்றுநோயைக் குறிக்கிறது. இந்த வகை புற்றுநோய், உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இது பொதுவாக எலும்பு மஜ்ஜையில் தொடங்கி, அதிக எண்ணிக்கையிலான அசாதாரண இரத்த அணுக்களை உருவாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Cancer Day 2021: Indian Celebs Who Successfully Fought Cancer And Recovered

World Cancer Day 2021: A lot of Indian celebrities have successfully fought cancer too. Here's a list. Read on...
Desktop Bottom Promotion