For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி தசை காலத்தில் யோகத்தை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

சனி போல பணத்தை அள்ளிக்கொடுப்பவர் யாரும் இல்லை. சனி தசை காலத்தில் தொழில் தொடங்குவார்கள். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னகாரர்களுக்கும் ராசி காரர்களுக்கும் சனிபகவான் தனது தச

|

சனி பகவான் நீதிமான். ஆயுள்காரகன், ஜீவன காரகன், எனவேதான் மனிதர்களை 19 ஆண்டுகள் தசாபுத்தி காலத்தில் சனி தன்னுடைய பிடியில் வைத்து நல்லது கெட்டது போன்றவைகளை கொடுத்து அனுபவ பாடங்களை உணர வைப்பார். நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும். அது போல சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு தேடி வரும். சனி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள இந்த கால கட்டத்தில் சனி திசை காலத்தில் யாருக்கு என்ன நடைபெறும் என்று பார்க்கலாம்.

How Shani Mahadasha Effects the Career and Personal Life

நவகிரகங்களின் சஞ்சாரம் போல ஒன்பது திசைகள் நமது வாழ்க்கையில் நடைபெறும் என்று பஞ்சாங்கங்கள் சொல்கின்றன. சூரிய திசை 6 வருடங்கள், சந்திர திசை 10 வருடங்கள், செவ்வாய் திசை 7 வருடங்கள், ராகுதிசை 18 வருடங்கள், குருதிசை 16 வருடங்கள், சனி திசை 19 வருடங்கள், புதன்திசை 17 வருடங்கள், கேது திசை 7 வருடங்கள், சுக்ர திசை 20 வருடங்கள் ஆக மொத்தம் 120 வருடங்கள் தசா புத்திகள் ஆட்சி செய்யும். இன்றைய கால கட்டத்தில் 9 திசைகளும், ஒருவருக்கு நடைபெற்றால் 120 வருடங்கள் வாழலாம் ஆனால் உணவுப்பழங்கக்கங்கள் நமது ஆயுளை தீர்மானிக்கின்றன.

சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு தேடி வரும். அதே நேரத்தில் செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகத்தில் சனி அமர்வது நல்லதல்ல. மேஷம் ராசியில் சனி நீசமடைகிறார். சுய ஜாதகத்தில் சனியின் இருப்பு மேஷம், விருச்சிகத்தில் இருந்தால் அவர்களுக்கு நெருப்பினால் கண்டம் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவகிரகங்கள்

நவகிரகங்கள்

அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்கள் அதிபதியாக உள்ளன. ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும். மேஷம் விருச்சிகம், லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருகிறார். கடகம், சிம்மம் , தனுசு, மீனம் லக்னங்களுக்கு சனி சுமாரான பலன்களையே சனி திசை கொடுக்கும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை கொடுக்கும்.

சனி தசை

சனி தசை

ஒவ்வொரு தசைகளும் ஒன்பது புத்திகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சனி தசை 19 ஆண்டுகள் நடைபெறுவதால் அதில் சனி புத்தி 3 வருடம் 3 மாதங்கள் நடைபெறும். உடல் நலப்பிரச்சினை, மன அழுத்தங்கள் வீட்டில் பிரச்சினை வரலாம். சிலருக்கு பண நஷ்டம் ஏற்படும். சனி தசை புதன் புத்தி 2 வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும். அப்போது நிதி நிலைமை மேம்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடைபெறும்.

தொழிலில் லாபம்

தொழிலில் லாபம்

சனி தசை கேது புத்தி ஒராண்டு ஒரு மாதம் 9 நாட்கள் நடைபெறும். இந்த கால கட்டத்தில் உடல் வழி வரும். பணம் விரையமாகும். சனி தசை சுக்கிர புத்தி 3 வருடம் 2 மாதங்கள் நடை பெறும். செழிப்பான கால கட்டம் இது நினைத்தது நிறைவேறும் செய்யும் தொழிலில் லாபம் வரும். வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

சனி தசை சூரிய புத்தி காலம் 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும். சனிக்கும் சூரியனுக்கு ஆகாது நோய்கள் வாட்டி வதைக்கும். பணம் நகையை பத்திரப்படுத்தவும். மன உளைச்சல் அதிகமாகும். சனி தசை சந்திரபுத்தி ஓராண்டு 7 மாதங்கள் நடைபெறும். சிலர் வீடு மாறலாம் ஊர் மாறலாம்.

வேலையில் பதவி உயர்வு

வேலையில் பதவி உயர்வு

சனி தசை செவ்வாய் புத்தி ஒரு வருடம் ஒரு மாதம் நடைபெறும் வேலையில் இடம் மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும். நோய் பாதிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். சனி திசை ராகு புத்தி காலத்தில் பிரச்சினைகள் அதிகமாகும். பாதங்களில் நோய்கள் வரலாம். கடைசியாக வரும் சனி தசை குரு புத்தி காலமான 2 ஆண்டு 6 மாதம் 12 நாட்களில் அற்புதங்கள் நிறையும். பட்ட கஷ்டங்களுக்கு நன்மைகள் நடைபெறும். இழந்த செல்வத்தை மீட்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். புதிய தொழில் தொடங்கலாம் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Shani Mahadasha Effects the Career and Personal Life

Shani Mahadasha is the period when Shani comes to ruling and teaches us some harsh lessons of life. Shani judges every action and wants us to be more persistent with our work. The planet Saturn is one of the most influential planets in the astrological and predictive world.
Desktop Bottom Promotion