For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைய்யா! கடல் தண்ணி மட்டும் ஏன் உப்பா இருக்குனு ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு...!

|

நாம் வாழும் இந்த பூமியானது பல அதிசயங்கள் நிறைந்ததாகும். அதிசயங்கள் என்பதை விட நம் பூமி மட்டும்தான் ஆசீர்வதிக்கப்பட்ட கிரகமாகும். ஏனெனில் தற்போது வரை இங்கு மட்டும்தான் உயிரினங்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது. அனைத்து வகை உயிரினங்களும் வாழ ஏற்றசூழல் இருக்கும் இந்த பூமியில் மொத்தம் எத்தனை உயிரினங்கள் வாழ்கிறது என்பது இன்றுவரை கண்டறியமுடியாத புதிராக இருக்கிறது.

நாம் வாழும் பூமியைப் பற்றி நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்றால் அது மிக மிக குறைவுதான். இந்த பிரபஞ்சம் பற்றியும், பூமி பற்றியும் நாம் தெரிந்து கொள்ள தொடங்கிவிட்டால் நம்மால் தூங்கவே முடியாது. ஏனெனில் அவ்வளவு அதிசயங்களும், புதிர்களும் நிறைந்தது இந்த அண்டம். பிரபஞ்சம் பற்றி பிறகு தெரிந்து கொள்ளலாம், இந்த பதிவில் பூமி பற்றி சில ஆச்சரியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூமி வட்டமானது அல்ல

பூமி வட்டமானது அல்ல

பூமி கோள வடிவத்தில் இருக்கிறது, ஆனால் அதன் ஈர்ப்பு விசை காரணமாக பூமி சரியான வட்ட வடிவத்தில் இல்லாமல் இருக்கிறது. உண்மையில் பூமத்திய ரேகையை சுற்றி ஒரு வீக்கம் உள்ளது. பூமியின் துருவ ஆரம் 3,949.99 மைல்கள், அதன் பூமத்திய ரேகை 3,963.34 மைல்கள்.

பூமியின் பெயர்

பூமியின் பெயர்

பூமியை ஆங்கிலத்தில் எர்த் என்று அழைப்பார்கள். இந்த பெயருக்கு பின்னால் கூட ஒரு சிறப்பு உள்ளது. நமது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற ஒவ்வொரு கிரகத்திற்கும் கிரேக்கம் அல்லது ரோமானிய கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் பூமி என்ற சொல் ஆங்கிலோ-சாக்சன் வார்த்தையான எர்டாவிலிருந்து வந்தது, அதாவது "தரை" அல்லது "மண்", அதாவது 1,000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.

ஒரு நாளில் 24 மணி நேரம் இல்லை

ஒரு நாளில் 24 மணி நேரம் இல்லை

பகலில் போதுமான மணிநேரம் இல்லை என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள், அவர்கள் சொல்வது சரிதான். ஏனெனில் ஒரு நாளில் 24 மணி நேரம் இல்லை. பூமி அதன் அச்சில் சுழல எடுக்கும் உண்மையான நேரம் 23 மணிநேரம், 56 நிமிடங்கள் மற்றும் 4 வினாடிகள் ஆகும். இதைத்தான் ஒரு பக்க நாள் என்று அழைக்கப்படுகிறது.

MOST READ: உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...!

பூகம்பம்

பூகம்பம்

இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகளின் பூகம்பம் முக்கியமானதாகும். ஒரு வருடத்தில் மிதமானது முதல் வலிமையான நிலநடுக்கம் வரை என பல நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் ஒரு வருடத்திற்கு 1 மில்லியனுக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. ஆனால் அது மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்படுவதில்லை என்பதுதான் ஆறுதல்.

ஆழமான நீர்நிலைகள்

ஆழமான நீர்நிலைகள்

உலகின் மிக ஆழமான ஏரி முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உள்ளது, அது பைக்கால் ஏரி. இதன் நீளம் 400 மைல், சுமார் 30 அகலம், ஆனால் அதன் ஆழம் ஒரு மைல் ஆகும், கிட்டதட்ட 5371 அடி ஆகும். இதற்கு அடுத்தடுத்த இடத்தில் இருக்கும் ஐந்து ஏரிகளை இதற்குள் அடைத்துவிடலாம். உலகின் மிகப்பெரிய கடல் காஸ்பியன் கடல் ஆகும். இது ஈரான் மற்றும் ரஷ்யாவின் எல்லையில் உள்ளது.

உப்பு கடல்

உப்பு கடல்

பூமியில் இருக்கும் அனைத்து கடலிலும் இருக்கும் நீரை ஆவியாக்கி அதில் இருக்கும் உப்பை கொண்டு பூமியின் நிலப்பரப்பை மூடினால் பூமியின் நிலப்பரப்பில் இருந்து கிட்டதட்ட 500 அடி வரை மேல்நோக்கி நிரப்பலாம். இதன் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

MOST READ: மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

கடல் நீரின் உப்பு சுவைக்கான காரணம்

கடல் நீரின் உப்பு சுவைக்கான காரணம்

மழைநீர்தான் கடலுக்கு செல்கிறது ஆனால் கடல் நீர் மட்டும் ஏன் உப்பு சுவையுடன் இருக்கிறது என்று சிந்தித்து உள்ளீர்களா?. மழை நீர் வளிமண்டலத்தில் நுழையும் போது காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடுடன் சேர்வதால் அதற்கு சிறிதளவு அமிலத்தன்மை ஏற்படுகிறது. மழை பாறை மற்றும் கற்கள் மீது பெய்யும்போது, அயனிகளாக பிரிக்கும் கனிம உப்புகளை வெளியிடுகிறது. ஆறு மற்றும் ஏரி போன்றவற்றில் இந்த அமிலத்தன்மையும், கனிம உப்புகளும் குறைவாக இருக்கும். அதனால் நம்மால் உப்பு சுவையை உணரமுடிவதில்லை. ஆனால் அனைத்து நீரும் கடலில் சென்று கலக்கும்போது அதிகளவு அயனி உப்புகள் வெளிப்படுவதால்தான் கடல் நீரில் மட்டும் உப்பு சுவையை உணர முடிகிறது.

பாலைவனம்

பாலைவனம்

பொதுவாக பாலைவனம் என்றாலே மணலால் நிரப்பப்பட்டது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அனைத்து பாலைவனமும் மணலால் நிரப்பப்பட்டது அல்ல. அதில் 85 சதவீதம் பாறைகளால் ஆனது. உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா ஆப்பிரிக்காவின் 1/3 பகுதியை நிரப்பக்கூடும்.

காற்றுமண்டலம்

காற்றுமண்டலம்

வளிமண்டலத்தின் பல அடுக்குகள் மீசோஸ்பியர், அயனோஸ்பியர், எக்ஸோஸ்பியர் மற்றும் தெர்மோஸ்பியர் உள்ளிட்ட நமது கிரகத்தை மூடுகின்றன. ஆனால் இது வெப்பமண்டலம், கிரகத்திற்கு மிக நெருக்கத்தில் உள்ளது. இது நம் வாழ்க்கையை ஆதரிக்கிறது. உண்மையில், மிக மெல்லியதாக அடுக்கான இது பூமியில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளது.

MOST READ: ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா?

எரிமலை

எரிமலை

பூமியின் மற்றொரு அற்புதமான அம்சம் என்னவென்றால், உலகளவில் கிட்டத்தட்ட 500 எரிமலைகள் உள்ளன. பூமியின் 80%, மேற்பரப்புக்கு மேலேயும் கீழேயும் காணப்படுவது எரிமலை மண்ணால் ஆனது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing facts about Planet Earth

Read to know the some amazing facts about planet earth
Desktop Bottom Promotion