Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தினம் 10 பீர் குடிச்சதால இந்த டாக்டருக்கு என்ன ஆச்சுனு பாருங்க...
பீருக்கு அடிமையாகி முடக்குவாதம் ஏற்பட்டு பரிதாபமாக இருக்கும் டாக்டரின் கொடூரக் கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
அளவுக்கு மீறினால் அமிர்தம் விஷமாகும். இது ஒரு பழமொழி. அதாவது எந்த ஒரு செயலும் அளவுக்கு மீறி செயல்பட்டால் அது விஷத்தைப் போல் கொடியதாகிவிடும். அமிர்தமே விஷமாக மாறும்போது விஷம் என்னவாகும்?

நாம் இப்போது காணவிருக்கும் ஒரு வழக்கில் ஒரு நபர் அளவுக்கு அதிகமாக பீர் அருந்தியதால் அவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

29 வயது வாலிபர்
வூ என்ற வாலிபர் 29 வயது நிரம்பியவர். இவர் சீனாவின் குவாங்க்டாங் நகரைச் சேர்ந்தவர். இவருக்கு கால் மூட்டு பகுதியில் சில நாட்களாக தீவிர வலி இருந்து வந்துள்ளது. இவரால் இயல்பாக நடக்க முடியாத அளவுக்கு வலி தீவிர நிலையை எட்டி இருந்தது. இதனால் அவருடைய தூக்கமும் தொலைந்தது.

கடும் வலி
தொடர்ந்து இரண்டு வாரங்கள் வலியால் அவதிப்பட்டு வந்த அவர் பின்னர் மருத்துவமனைக்குச் செல்லத் திட்டமிட்டார். அவரால் தனியாக மருத்துவமனை செல்ல முடியாத அளவிற்கு வலி இருந்ததால் நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய கால் மூட்டு பகுதியில் ஒரு அசாதாரண வீக்கம் இருப்பதைக் கண்டறிந்தனர். எனவே அந்த வீக்கத்தை குறைக்கும் சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

வீக்கம்
அந்த வீக்கம் ஏற்பட்ட பகுதியில் துளையிட்டு பார்க்கும்போது, அந்த இடத்தில் இருந்து வெண்மை நிற திரவம் வெளிப்பட்டது. இது மிகவும் அசாதாரணமாக இருந்தது.
பொதுவாக இந்த வித மூட்டு பகுதியில் உண்டான வீக்கத்தில் இருந்து திரவம் வெளியிடப்படும்போது அது வெறும் 3 முதல் 5மிலி அளவு வெளிர் மஞ்சள் நிற திரவம் மட்டுமே வெளிப்படும். இது சிறிது ஒட்டும்தன்மையுடன் இருக்கும். ஆனால் இந்த ழக்கில் வூவின் மூட்டு பகுதியில் இருந்து வெளிப்பட்ட திரவம் பால் போன்ற வெண்மை நிறத்தில் மிகவும் அடர்த்தியாக இருந்தது.

தினம் 10 பீர்
அவரை முழுவதும் பரிசோதித்தபின், வூ ஒரு மிகப்பெரிய பீர் பிரியர் என்பது தெரிய வந்தது. அவருடைய பதின் பருவ காலத்தில் இருந்து தினமும் பீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாளில் 10 கேன் பீர் குடிக்கும் அளவிற்கு பீர் மோகம் அவருக்கு இருந்தததை மருத்துவரிடம் வெளிப்படுத்தினார்.

முடக்குவாதம்
வூ தற்போது கடுமையான முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர். பீர் அவருடைய நிலைமையை மேலும் மோசமாக மாற்றியுள்ளது. யூரிக் அமில கற்கள் மூட்டு பகுதியில் படிவதால் கீல்வாதம் என்னும் முடக்கு வாதம் ஏற்படுகிறது, இதனால் அந்தப் பகுதி மிகவும் வலியுடன் வீக்கத்துடன் காட்சியளிக்கும்.
வூ ஓரளவிற்கு அதிர்ஷ்டம் செய்திருந்ததால், மருத்துவர்கள் அவருடைய பாதிப்பை சரிசெய்ய சிகிச்சை அளித்து வருகின்றனர். சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications