For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடு செல்லும் இந்தியர்கள் அங்கு செய்யும் முட்டாள்தனமான பிரபல காரியங்கள் என்னென்ன தெரியுமா?

|

அனைவருக்குமே வெளிநாடுகள் செல்ல வேண்டும் என்பது அவர்கள் ஆழ்மனதில் இருக்கும் ஒரு ஆசையாக இருக்கும். ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதே உண்மை. எவ்வளவுதான் வெளிநாட்டிற்கு சென்றாலும் இந்தியர்கள் இந்தியர்களாகவேதான் நடந்து கொள்வார்கள்.

Funny Things Indians Do When They Go Abroad

இந்தியர்களுக்கு என்று சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது. அது எந்த நாட்டிற்கு சென்றாலும் மாறாது. நமது மக்கள் அங்கு சென்றும் அவரை செய்யும்போது அது பலருக்கும் வேடிக்கையாகவும், முட்டாள்தனமாகவும் தெரியலாம். இந்த பதிவில் இந்தியர்கள் வெளிநாடு சென்றால் செய்யும் வேடிக்கையான செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒன் பை டூ

ஒன் பை டூ

ஒன் பை டூ போட்டு சாப்பிடுவதை கண்டுபிடித்ததே இந்தியர்கள் என்றுதான் கூறவேண்டும். ஒரு பானத்தையோ, உணவையோ இரண்டாக பிரித்து இரண்டு பேர் சாப்பிடுவதை இந்தியாவை தவிர வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது. இந்த பழக்கத்தை வெளிநாடு செல்லும்போதும் நமது மக்கள் விட்டுவிடாமால் கடைபிடிக்கிறார்கள்.

பணம் மாற்றுவது

பணம் மாற்றுவது

விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு பணம் மாற்றுவது என்பது எப்போதும் இருக்கும் ஒரு பிரச்சினை ஆகும். ஒவ்வொரு டாலராக எண்ணி அதனை கணக்கு பார்த்து சரியாக இருக்கிறதா என்று ஆராயச்சி செய்யவே நமக்கு பாதி நாள் முடிந்துவிடுகிறது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

நமது நாட்டில் இருக்கும் சாலைகளை போல வெளிநாட்டு சாலைகள் இருக்காதுதான் ஆனால் அதற்காக சாலையில் நடக்கும் அனைத்து தருணங்களையும் புகைப்படம் எடுப்பது முட்டாள்தனமானது. இயற்கை காட்சிகள், வித்தியாசமான இடங்களை புகைப்படம் எடுக்கலாம் தவறில்லை ஆனால் சாதாரண இடத்தை கூட ஆச்சரியமாக பார்த்து புகைப்படம் எடுப்பது வேடிக்கையானது.

பேரம் பேசுவது

பேரம் பேசுவது

பேரம் பேசுவதில் இந்தியர்களை யாராலும் அடித்துக்கொள்ள இயலாது. பேரம் பேசி பொருள் வாங்குவது என்பது நமது இரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று. கடைக்கார்கள் விலை குறைவாகவே சொன்னலும் அவர்கள் கூறியதை விட குறைத்து வாங்கினால் மட்டுமே நமக்கு நிம்மதியாக இருக்கும். இதற்கு வெளிநாடு மட்டும் விதிவிலக்காக இருக்குமா? அங்கு சென்றாலும் நமது ஆட்கள் பேரம் பேசத்தான் செய்கிறார்கள்.

MOST READ: தெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...!

சத்தமான விவாதங்கள்

சத்தமான விவாதங்கள்

சத்தமாக பேசுவது என்பது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகும். பயணங்களின் போதும் சரி, சாதாரண நேரத்திலும் சரி சத்தம் போட்டுத்தான் நாம் பேசுவோம். இதே பழக்கம்தான் வெளிநாட்டிலும் தொடரும். ஒரு இடத்தில் சத்தமான விவாதங்களை நீங்கள் கேட்டால் அங்கு நிச்சயம் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

தவறான உச்சரிப்புகள்

தவறான உச்சரிப்புகள்

நமக்கு என்னதான் ஆங்கிலம் நன்றாக தெரிந்திருந்தாலும் வெளிநாட்டினரின் உச்சரிப்புகள் நமக்கு வருவது சற்று சிரமமே. தெளிவான ஆங்கிலமே அவர்களுடன் தொடர்பு கொள்ள போதுமானது ஆனால் நாம் வராத ஆங்கில உச்சரிப்பில் வம்பாக பேசி அவர்களிடம் பல்பு வாங்குவோம். எங்கு சென்றாலும் நாம் நாமாக இருப்பதே நல்லது.

உடைகள்

உடைகள்

ஒருவரை வெளிநாட்டில் அவர் இந்தியர்தான் என்று காட்டிக்கொடுக்கும் முதல் விஷயம் அவர்கள் உடைதான். விடுமுறைகளுக்காக வெளிநாடு செல்பவர்கள் அங்கே சென்று மேற்கத்திய ஆடைகள் அணிந்தாலும் அவர்களின் சில பழக்கவழக்கங்கள் அவர்களை காட்டிக்கொடுத்துவிடும். பெண்கள் ஜீன்ஸ் அணிந்து கையில் வளையல் போடுவது, பொட்டு வைத்துக்கொள்வது ஆண்கள் கைகளில் காப்பு போடுவது போன்றவை அதிகம் பார்க்கக்கூடிய ஒன்று.

குழந்தைகளை கொஞ்சுவது

குழந்தைகளை கொஞ்சுவது

குழந்தைகளை கொஞ்சுவது என்பது நமக்கு பிடித்த ஒன்றாகும். நாம் எத்தனை வயதானாலும் நம் பிள்ளைகளை குழந்தையாகத்தான் பார்ப்போம் வெளிநாட்டினரோ ஐந்து வயதிலேயே குழந்தைகளை தனியாக படுக்கவைக்க துவங்கிவிடுவார்கள். வெளிநாட்டு குழந்தைகள் இயற்கையாவே கொழுகொழு கன்னங்களுடனும், ரோஜா பூ நிறத்திலும் இருப்பார்கள். எனவே அவர்களின் கன்னத்தை பிடித்து கொஞ்சுவது நமக்குள் இயற்கையாகவே எழும் ஆசையாக இருக்கும். இதை வெளிநாட்டினர் பெரும்பாலும் விரும்பமாட்டார்கள்.

MOST READ: 1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட ரகசியங்கள்

உணவு

உணவு

வெளிநாடுகள் பல விஷயங்களில் சிறப்பாக இருந்தாலும் அவர்கள் உணவு விஷயத்தில் எப்பொழுதும் இந்தியர்களுக்கு இணையாக இயலாது. எனவே நாம் எங்கு சென்றாலும் இந்திய உணவுகளை தேடுவதில் ஆர்வமாக இருப்போம். இந்தியர்கள் வெளிநாடு சென்றாலும் இந்திய உணவுகள் எங்கு கிடைக்கும் என்றுதான் தேடிஅலைவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Things Indians Do When They Go Abroad

The moment an Indian lays foot on foreign soil, they will start to do some funny things.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more