For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையில் உடனடியாக வெற்றிபெற இந்த குறுக்கு வழிகளை பயன்படுத்த வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்

இந்த உலகம் எப்பொழுதும் வெற்றி பெற்றவர்களை மட்டுமே நினைவில் வைத்திற்கு, உங்களிடம் உள்ள நல்ல குணங்களோ, பண்போ உங்களின் அடையாளமாக இருக்காது.

|

இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்தவர்களில் சாணக்கியர் மிகவும் முக்கியமான ஒருவராவார். பொருளாதரம், அரசியல் மற்றும் இராஜதந்திரங்களில் மேதையாக விளங்கிய சாணக்கியரின் அறிவுரைகளும், தந்திரங்களும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகும். இன்று கூட புத்திக்கூர்மையில் வாய்ந்தவனை சாணக்கியன் என்றுதான் பாராட்டுவார்கள், அந்த அளவிற்கு வரலாற்றால் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமை சாணக்கியர் ஆவார்.

Chanakya Niti : Shortcuts For Immediate Success

இந்த உலகம் எப்பொழுதும் வெற்றி பெற்றவர்களை மட்டுமே நினைவில் வைத்திற்கு, உங்களிடம் உள்ள நல்ல குணங்களோ, பண்போ உங்களின் அடையாளமாக இருக்காது. உங்களின் வெற்றிதான் இந்த உலகில் உங்களுக்கான முகவரி ஆகும். எப்படியாவது வாழ்க்கையில் வெற்றபெற வேண்டும் என்ற எண்ணமே அனைவருக்கும் இருக்கும், அதனை மற்றவர்களுக்கு தீமையை ஏற்படுத்தாத எந்த குறுக்கு வழியில் வேண்டுமென்றாலும் பெறலாம் என்கிறார் சாணக்கியர். இந்த பதிவில் வெற்றிக்கான குறுக்கு வழிகளாக சாணக்கியர் கூறுவது என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணோட்டம்

கண்ணோட்டம்

நீங்கள் பார்க்கும், கேட்கும் மற்றும் பேசும் அனைத்திற்கும் உங்களுக்கென ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் இருக்க வேண்டும். நீங்கள் பார்க்கும் கண்ணோட்டம்தான் உங்களின் எதிரிகளுக்கும், இந்த உலகத்திற்கும் நீங்கள் தரும் முதல் செய்தி ஆகும். எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன் அதை நீங்கள் பார்க்கும் கண்ணோட்டம்தான் உங்கள் வெற்றியை நிர்ணயிக்கும். எனவே எப்பொழுதும் அதனை சரியாக செய்யுங்கள்.

எப்போதும் எளிதான போட்டியாளராக இருக்கக்கூடாது

எப்போதும் எளிதான போட்டியாளராக இருக்கக்கூடாது

ஒருவர் மற்றவர்கள் எளிதில் சமாளிக்கக்கூடிய ஆளுமை உள்ளவராக இருந்தாலும், அல்லது ஓடி வந்து உதவி செய்பவராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றியை பெற முடியாது. மறந்து விடாதீர்கள் போட்டி நிறைந்த இந்த உலகில் இப்படிப்பட்டவர்கள் எளிதில் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள்.

பணத்தின் முக்கியத்துவம்

பணத்தின் முக்கியத்துவம்

பணம்தான் இந்த உலகத்தின் ஒரே உந்து சக்தியாகும், இந்த உண்மையை முடிந்தளவு சீக்கிரமாக உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உடனடியாக வெற்றி பெற விரும்பினால், உங்களைச் சுற்றி செல்வத்தின் மாயையை உருவாக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். உங்களிடம் பணம் இல்லையென்றாலும் மற்றவர்களுக்கு அது தெரியாதபடி மாயையை உருவாக்க வேண்டும். இந்த உலகம் கண்ணை மூடிக்கொண்டு பணம் உள்ளவர்களை மதிக்கவும் , நம்பவும் செய்யும்.

MOST READ:எடையை குறைக்க கோதுமையை தொடர்ந்து சாப்பிடுபவரா நீங்கள்? ஜாக்கிரதையாக இருங்கள்

பாதுகாப்பான தூரம்

பாதுகாப்பான தூரம்

உடனடியாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களின் வெற்றிக்கான ஆதாரத்திலிருந்து ஒரு சமநிலையான துரத்தை கடைபிடிக்க வேண்டும். அவளோ/அவனோ அவர்களிடம் இருந்து அதிகம் விலகியும் இருக்கக்கூடாது, மிகவும் நெருக்கமாகவும் இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு நெருப்பிடம் இருந்து நீங்கள் மிகவும் விலகி இருந்தால் உங்களால் உணவை சமைக்க இயலாது, அதுவே மிகவும் நெருங்கி போனால் அது உங்களையும் சேர்த்து எரித்துவிடும். எனவே சீரான தூரத்தில் இருப்பதுதான் உங்களுக்கு சுவையான உணவை வழங்கும். உறவுகளும் அதுபோலத்தான்.

வருத்தப்படக்கூடாது

வருத்தப்படக்கூடாது

மற்றவர்களிடம் இருந்து வெற்றிகரமானமவர்களை பிரித்து காட்டும் முதல் முக்கிய குணம் அவர்களின் வருத்தப்படாத குணம்தான். எவர் ஒருவர் தான் வீணடித்த நேரத்தை எண்ணியும், எடுத்த முடிவுகளை நினைத்தும் வருத்தப்படுகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். கடந்த காலத்தை நினைத்து வருந்துவது முட்டாள்களின் செயலாகும். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே தவிர அதனை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருக்கக்கூடாது.

கூடாநட்பு

கூடாநட்பு

ஒருவர் தான் கடைபிடித்த நேர்மை மற்றும் தர்மத்தை துறந்து மற்றவர்களை ஏமாற்றி அதன்மூலம் பணம் சேர்த்துவிட்டு, உங்களை ஏமாற்றக்கூடியவர்களுடன் நெருக்கமாக இருப்பது உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் விஷமாகும் என்று சாணக்கியர் கூறுகிறார். இப்படிப்பட்டவர்கள் விஷத்தை போன்றவர்கள், விஷம் கூட ஆரம்பத்தில் இனிப்பாகத்தான் இருக்கும் ஆனால் அது அளிக்கும் முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும். அதுபோல்தான் சிலரின் நட்பும்.

MOST READ:இந்த கனவுகளில் ஒன்று வந்தாலும் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது என்று அர்த்தம்...

மூன்று கேள்விகள்

மூன்று கேள்விகள்

எந்தவொரு செயலையும் தொடங்கும் முன் அனைவரும் தங்களுக்குள்ளேயே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் பதில்களை பொறுத்தே நீங்கள் அந்த செயலில் இறங்கலாமா? கூடாதா? என்பதை முடிவுசெய்ய வேண்டும். அந்த கேள்விகள், நான் என்ன செய்ய வேண்டும்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? இதன் மதிப்பு என்ன?. இதன் பதில்கள்தான் அந்த செயலின் வெற்றியை தீர்மனிக்கும்.

உங்கள் நிலையிலிருந்து எப்போதும் பின்வாங்காதீர்கள்

உங்கள் நிலையிலிருந்து எப்போதும் பின்வாங்காதீர்கள்

விஷம் இல்லாத பாம்பு கூட எப்பொழுதும் தன்னை தானே அழித்து கொள்வது இல்லை, விஷமே இல்லாத பாம்பு கூட உங்களை பயமுறுத்தி கொள்ளக்கூடும். அதேபோல ஒருவர் எப்போதும் தனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ள கூடாது. அப்படி சிக்கினாலும் தன் சாதுர்யத்தால் அதனை சமாளிக்கும் திறனை பெற்றிருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஒருபோதும் தங்கள் பலவீனத்தை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

பாராட்டிற்காக செய்யாதீர்கள்

பாராட்டிற்காக செய்யாதீர்கள்

நல்ல வாசனையாக இருந்தாலும் அது உங்களை வந்து அடைய காற்றின் உதவி தேவை, ஆனால் வெற்றிகரமானவர்கள் எப்போதும் பாராட்டுக்காகவோ, மற்றவர்களின் ஆதரவிற்காகவோ காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் பாராட்டை பெற காத்திருப்பதற்கு பதிலாக அந்த நேரத்தில் தன் அறிவை மேலும் கூர்மையாக்குவார்கள்.

MOST READ:இன்னைக்கு லக்குல டாப் 3 இடத்துல இருக்கிற ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

பலவீனத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்

பலவீனத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்

நண்பர்களை நெருக்கமாக வைத்திருப்பது எப்போதுமே நல்லது, ஆனால் உங்கள் எதிரிகளை மேலும் நெருக்கமாக வைத்திருப்பது அதைவிட நல்லது. பலவீனமானவர்களுடன் விரோதம் கொள்வது தேள் கொட்டுவதை விட ஆபத்தானது. பலவீனமான ஒரு நபரை நீங்கள் மறக்கவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது, நீங்கள் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் பழிவாங்கும் குணம் உங்களின் வெற்றியை பாதிக்கும். பலவீனமானவர்களுக்கு நன்றாக தெரியும் அவர்களால் உங்களுடன் போட்டி போட இயலாது என்று, அதனால் அவர்கள் உங்களை பழிவாங்க தந்திரமான வழிகளை பின்பற்றுவார்கள். அதனை உங்களால் கூட தெரிந்து கொள்ள முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti : Shortcuts For Immediate Success

Chanakya’s principle and policies are relevant even today. Check out the shortcuts for immediate success said by Chanakya.
Desktop Bottom Promotion