For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஏழு புத்தகம் மட்டும் படிச்சிங்கனா போதும்... வாழ்க்கையில நீங்க எங்கயோ போயிடுவீங்க

|

நாம் எப்போதும் கவலைப்படும் விஷயம் நம் வாழ்க்கையை பற்றி தான் இருக்கும். நம் பார்வை மாறுபாட்டால் நம் வாழ்க்கையும் மாறுபடும் என்பார்கள். நல்லது கெட்டது இரண்டுமே நம் வாழ்க்கையில் கிடக்கத்தான் செய்கிறது. அதை நாம் தான் கண்டு அனுபவிக்க வேண்டும்.

Books That Can Change Your Perspective In Life

சிலருக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் வாழ்க்கையை வாழ வழி உண்டாக்கும். சிலருக்கு நல்ல புத்தகங்கள் வழி காட்டும். அப்படிப்பட்ட சில புத்தகங்களை பற்றித் தான் இப்பகுதியில் நாம் காண போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்தகங்கள்

புத்தகங்கள்

இது வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல. வாழ்க்கையையே புரட்டிப் போடும் வெளிச்சம் என்றே சொல்லலாம். நல்ல புத்தகங்கள் நம்மளை மட்டுமல்ல நம் வாழ்க்கையையும் மாற்ற கூடியது. இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் போதே உங்கள் வாழ்க்கையை அதோடு தொடங்க ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பாக புத்தகத்தை முடிக்கும் போதும் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள். அந்த வகையில் உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல இது கைகொடுக்கும். உங்கள் வாழ்க்கையை செழுமையாக்கும் அந்த புத்தகங்களைப் பற்றி இங்கே காண்போம்.

Image Courtesy

 தி பவர் ஆப் ஹேபிட் - சார்லஸ் டுஹிக்

தி பவர் ஆப் ஹேபிட் - சார்லஸ் டுஹிக்

நம் வாழ்க்கையை பெரும்பாலும் அடைத்து இருப்பது நம் பழக்க வழக்கங்கள் தான். நம்முடைய பழக்க வழக்கங்கள் கொண்டு தான் தினசரி வாழ்ந்து வருகிறோம். நம்முள் இருக்கும் தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு இடையில் ஒளிந்து கிடக்கும் சக்தி வாய்ந்த பழக்க வழக்கங்களை நாம் கண்டறிய வேண்டும் என்கிறது இந்த நூல்.

ஏனெனில் உங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க பழக்க வழக்கங்கள் மிகவும் முக்கியம். பெரிய வெற்றியை அடைய உங்களை தடுக்கும் பழக்கத்திலிருந்து எப்படி வெளியேறிவது, மேலும் பழக்க வழக்கங்களை மாற்றி புதிய பழக்க வழக்கங்களை உருவாக்கி இலக்கை நோக்கி நகர்வது எப்படி என்று கூறுகிறது. எனவே இதுவரை நீங்கள் இலக்கை அடையாவிட்டால் உங்களுக்கு இந்த புத்தகம் ஏற்றது. வாங்கி படியுங்கள் உங்கள் இலக்கு உங்கள் கையில் கூடி வரும்.

Image Courtesy

தி சீக்ரெட் - ரோண்டா பைரன்

தி சீக்ரெட் - ரோண்டா பைரன்

இந்த புத்தகத்தை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பிரபல பாலிவுட் "ஓம் சாந்தி ஓம்" தயாரிப்பாளர் கூட இந்த புத்தகத்தை படித்து தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதில் வரும் ஒரு சக்தி வாய்ந்த வாக்கியம் இது தான்

"உங்கள் மனதில் முழு நம்பிக்கையுடன் ஒன்றை நினைத்தால் அது நிறைவேற இந்த பிரபஞ்சமே உங்களுக்கு உதவியாக இருக்கும் " என்கிறார். தி ஆல்கிமிட்ஸ் புத்தகம் கூட இதைப் போன்றே சிறந்தது.

தி சீக்ரெட் என்ற இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். உங்களுடைய எதிர்காலம் என்பது உங்களுடைய வலுவான எண்ணங்கள் தான் என்கிறது. முதலில் இந்த புத்தகத்தை படிக்கும் போது இது சாத்தியமா என்று நினைக்கலாம் ஆனால் பக்கத்தை திருப்ப திருப்ப உங்களுக்கு வாழ்க்கையின் ரகசியம் புரியும். அதனால் தான் உலகளவில் பல மில்லியன் கணக்கான வாசகர்களை பெற்ற புத்தகம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

உங்கள் சக்தி வாய்ந்த எண்ணங்களுக்கு நீங்கள் உயிர் கொடுக்க நினைத்தால் இந்த புத்தகங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த நண்பன் எனலாம்.

Image Courtesy

 7 ஹேமிட்ஸ் ஆஃப் ஹைலி எவக்டிவ் பீப்பிள் - ஸ்டீபன் ஆர் கவி

7 ஹேமிட்ஸ் ஆஃப் ஹைலி எவக்டிவ் பீப்பிள் - ஸ்டீபன் ஆர் கவி

இந்த புத்தகம் புத்திசாலித்தனமான கருத்துகளை எடுத்துரைக்கும் அற்புதமான நூல். இது உலகளவில் பல மில்லியன் கணக்கில் விற்பனை செய்யப்பட்ட புகழ் பெற்றது.

இந்த புத்தகத்தை தொடர்ந்து வாசிக்கும் போது உங்களுக்கு புரியும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை.

இந்த நூலின் ஆசிரியரான மிஸ்டர் கவே ஒரு சிறிய பழக்க மாற்றம் நம் வாழ்க்கையை எப்படி உயர்த்துகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார். இந்த ஒரு புத்தகமே போதும் நாம் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. எந்த வித குழப்பமும் இல்லாத தெளிவான வார்த்தைகள். ஆரம்பம் முதல் இறுதி வரை சுவராஸ்யத்தை குறைக்காத கருத்துக்களால் ஆனது இந்நூல்.

இதில் கூறப்பட்ட அனைத்தையும் புரிந்து கொண்டாலே போதும் உங்கள் இலக்கை அடைந்து விடலாம். இது உங்கள் மூடப்பட்ட கண்களை திறந்து வாய்ப்புகளையும் வழிகளையும் காட்டி உங்கள் இலக்கை அடைய உதவியாக இருக்கும்.

MOST READ: முடி சரசரனு வேகமா வளரணுமா? இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...

Image Courtesy

தி கிரேட் டிவர்ஸ்-எஸ்.லூயிஸ்

தி கிரேட் டிவர்ஸ்-எஸ்.லூயிஸ்

இது ஒரு நாவல் புத்தகம். கொஞ்சம் மனிதர்களை பறக்கும் வாகனம் மூலம் சொர்க்கத்திற்கு அழைத்து செல்வதாக கதை ஆரம்பிக்கிறது. சொர்க்கத்தில் அவர்களின் அனுபவங்களையும், அங்கே எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவர்கள் இருக்கலாம். ஆனால் முதலில் அதற்கு அவர்கள் செய்த பாவங்களை விட்டொழிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நரகத்திற்கு செல்வதாக இந்த கதை செல்லுகிறது.

இந்த அற்புதமான கதை நாம் வாழ்க்கையில் செய்யும் தவறுகளையும் அதனால் விளையும் தீமைகளையும் நன்மைகளையும் காட்டுகிறது. இந்த புத்தகம் ஒன்றே போதும் பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டை காட்டுகிறது. இதை வாசித்தால் உங்கள் வாழ்க்கை கூண்டில் சிறைபட்டு இருப்பதில் இருந்து வெளியே வரலாம்.

MOST READ: வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...

Image Courtesy

 தி ஆர்ட் ஆஃப் ஆஸ்க்கிங்-அமெண்டா பாமர்

தி ஆர்ட் ஆஃப் ஆஸ்க்கிங்-அமெண்டா பாமர்

உங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இது மக்களின் வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதாகவும், இலக்கை, வெற்றியை அடைய உதவியாகவும் இருக்கும் என்கிறார்.

இது கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இது உங்களை வலிமையாகவும், வாழ்க்கையை பற்றிய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வைத்து விடும். உங்கள் தடைகளைக் கண்டு கண்ணீர் விட்ட இடங்களையெல்லாம் இனி புன்னகையால் நிரப்பி வெற்றி கொள்ளச் செய்யும் அற்புத நூல்.

Image Courtesy

தி ரோடு லஸ் டிவாரல்டு - ஸ்கோட் பீக்

தி ரோடு லஸ் டிவாரல்டு - ஸ்கோட் பீக்

இந்த ஒரு புத்தகம் போதும் வாழ்க்கையை பற்றிய கெட்ட எண்ணங்களை மாற்றுவதற்கு இது போதும். இது உங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும். இந்த புத்தகம் உங்கள் சிந்தனைக்கான உணவு என்றே கூறலாம். இது உங்கள் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான ரெசிபியை தராது ஆனால் அதை எதிர்ப்பதற்கான தைரியத்தை தரும். ஒரு சரியான வழிகாட்டியாக இருக்கும்.

வாழ்க்கை என்றாலே துன்பம். இந்த உலகத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கிறோம். இது போன்ற எண்ணங்களை உடைத்தெறியும் அற்புதமான புத்தகம். இது உங்கள் வாழ்வின் வளர்ச்சியையும் சாராம்சத்தையும் சொல்லித் தருகிறது. ஆன்மீக பாதையில் கூட இந்த புத்தகத்தை படிக்கலாம்.

MOST READ: இது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்

Image Courtesy

தி கோ-கிவ்வர்-பாப் பர்க் மற்றும் ஜான் டி மான்

தி கோ-கிவ்வர்-பாப் பர்க் மற்றும் ஜான் டி மான்

இந்த புத்தகமும் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒன்று தான். இதன் சில பக்கங்கள் வாழ்க்கையை பற்றிய உள்ளார்ந்த பார்வையை தருகிறது. இது உங்களுக்கு சக்தியையும் மாற்றத்தையும் தரும். வாழ்க்கையை பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கும்.

மேற்கண்ட இந்த 7 புத்தகங்களும் உங்கள் வாழ்க்கையை மாற்ற பெரிதும் பயன்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் விரும்பினால் இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து படியுங்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் நல்ல பழக்க வழக்கங்களுள் ஒன்று. புத்தகம் உங்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பதோடு உங்களை மாற்றவும் வெற்றியை அடையவும் உதவியாக இருக்கும்.

எனவே வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து இது போன்ற புத்தகங்களை படித்து வரலாம். பொழுதும் போகும் வாழ்க்கையும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும். என்னங்க மாற்றத்திற்கு நீங்கள் தயராகிவிட்டீங்களா.

MOST READ: ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது? என்ன செஞ்சா பிரச்னை தீரும்?

MOST READ: முன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா?

MOST READ: உச்சா போற எடத்துல கடுகடுனு வலிக்குதா? புற்றுநோயா கூட இருக்கலாம்... இத சாப்பிடுங்க சரியாயிடும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Books That Can Change Your Perspective In Life

Sometimes in life, you come across things that can change the way you look at life completely. From there, it can make you into a different person altogether, Good or Bad, but not the same. And reading a book that connects to your soul is definitely one of them.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more