For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களிடம் பழகுபவர்கள் பேராசை பிடித்தவர்களா என்பதை கண்டறியும் எளிய வழிகள் என்ன தெரியுமா?

ஆசைக்கும், பேராசைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தனக்கும் வேண்டுமென்று விரும்புவது ஆசை, தனக்கு மட்டுமே அனைத்தும் வேண்டும் என்று விரும்புவது பேராசை அவ்வ்ளவுதான்.

|

மனிதர்கள் இலைகளை உடுத்தி குகைகளில் வாழ்ந்த காலம் முதல் இன்று செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடும்வரை முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை காரணம் அவர்களுக்குள் இருந்த ஆசைதான். எந்தவொரு செயலுக்கு பின்னாலும் ஒருவரின் ஆசை என்பது நிச்சயம் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் மனிதனை மனிதனாக மாற்றியதே ஆசைதான். ஆனால் மனிதனை மிருகமாக மாற்றுவது பேராசைதான்.

Best Ways To Find Greedy People

ஆசைக்கும், பேராசைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தனக்கும் வேண்டுமென்று விரும்புவது ஆசை, தனக்கு மட்டுமே அனைத்தும் வேண்டும் என்று விரும்புவது பேராசை அவ்வ்ளவுதான். மனிதனுக்குள் இருக்கும் மிருக குணத்தை தூண்டிவிடும் தீக்குச்சிதான் பேராசை. இந்த பதிவில் பேராசை பிடித்தவர்களை கண்டறியும் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேராசை

பேராசை

பேராசைக்கு ஏழை, பணக்காரர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது, அனைவருக்கும் பேராசை இருக்கும். அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களே மனிதர்கள், அதன்போக்கில் செயல்படுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகி விடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இன்று நமது சமூகத்தில் பேராசை பிடித்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் பழகுவதற்கு இனிமையனவராக தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுடன் பழகுபவர்கள் பேராசை பிடித்தவர்களா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் வழிகளை தொடர்ந்து பார்க்கலாம்.

இவர்கள் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள்

இவர்கள் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள்

வேலைகளில் இருந்து இவர்கள் எப்பொழுதும் விலகியே இருப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் வேலையை முடிக்க கடினமாக உழைக்கும் போது, இவர்கள் வேலை செய்வதில் இருந்து தப்பிக்க கடினமாக உழைப்பார்கள். மற்றவர்கள் புயல் போல வேலை செய்தாலும் இவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் பொறுமையை கடைபிடிப்பார்கள். ஆனால் வேலை வெற்றிகரமாக முடிந்த பிறகு அதற்கான வெகுமதியை பெறும்போது இவர்கள்தான் அங்கு முதலில் நிற்பார்கள்.

அனைத்தும் எனக்கே

அனைத்தும் எனக்கே

பேராசை பிடித்தவர்கள் எப்பொழுதும் சிக்கனமானவராய் இருப்பார்கள். தன் கையிலிருக்கும் பணத்தை பிறருக்கு தேவைகள் இருந்தாலும், இவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடமை இருந்தால் கூட அதனை கொடுக்கமாட்டார்கள். உதாரணத்திற்கு சில முதலாளிகள் மட்டுமே தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய போனஸ் போன்றவற்றை நியாயமாக வழங்குகிறார்கள். பலரும் நஷ்ட கணக்கு காட்டி அவர்களின் பணத்தையும் சுருட்டவே முயலுவார்கள். நண்பர்களிலேயே பணம் வாங்கும்போது இருக்கும் ஆர்வம் அதனை திருப்பி கொடுக்கும்போது கையில் பணம் இருந்தால் கூட வராது.

MOST READ:செக்ஸில் ஈடுபடும் போது ஆண் மற்றும் பெண் மூளையில் என்னென்ன வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

என்னை பாதிக்காத வரை உனக்கு ஆதரவு கொடுப்பேன்

என்னை பாதிக்காத வரை உனக்கு ஆதரவு கொடுப்பேன்

பேராசைக்காரர்களுக்கு எப்பொழுதுமே அனைத்து பிரச்சினைகளின் மீதும் வலுவான கருத்துக்கள் இருக்கும் ஆனால் அதனை மற்றவர்கள் மட்டுமே சுமக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது போர் நடக்க வேண்டும் ஆனால் அதில் நாம் கலந்து கொள்ளக்கூடாது, வரி அதிகரிக்கப்பட வேண்டும் ஆனால் தான் அதை கட்டக்கூடாது போன்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எது கிடைத்தாலும் போதும்

எது கிடைத்தாலும் போதும்

பேராசைக்காரர்கள் எப்பொழுதும் அதிகம் பெறுவதற்கு முதலில் நிற்பார்கள் ஆனால் அந்த வெகுமதியை பெற முயற்சி செய்வதில் எப்பொழுதும் கடைசியாகவே இருப்பார்கள். அனைவருக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதற்கு பதிலாக இவர்கள் எப்பொழுதும் தனக்கு மட்டுமே பெரும்பான்மையான நன்மைகள் கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அடுத்தவர்களின் உழைப்பாய் இருந்தாலும் தனக்கே அதிகபட்ச பலன்கள் கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதை பெறவும் செய்வார்கள்.

அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள்

அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள்

பேராசை நோய் பிடித்தவர்கள் தனக்கு சொந்தமில்லாத பொருளாக இருந்தாலும் அது யாருடைய பொருளாக இருந்தாலும் யோசிக்காமல் எடுத்துக்கொள்வார்கள். இது மற்றவர்களின் உழைப்பய் திருடுவதற்கு சமமாகும். இவர்களிடம் பொருளை இழப்பவர்கள் புத்திசாலிகளாக இல்லாவிட்டால் அவற்றை நிரந்தரமாகி மறந்துவிட வேண்டியதுதான்.

புத்திசாலிகள்

புத்திசாலிகள்

பேராசைக்கார்கள் எப்பொழுதும் புத்திசாலிகளாக இருப்பார்கள் அவர்கள் எப்பொழுதும் தங்கள் சுயலாபத்திற்காக விதிமுறை மீறல்களில் ஈடுபடுவார்கள். இவர்களின் செயல்கள் முற்றிலும் சட்டபூர்வமானதாக இருந்தாலும் மற்றவர்கள் தலையில் பொறுப்பை சுமத்துவதன் மூலம் இவர்கள் தப்பித்து கொள்வார்கள்.

MOST READ:உங்களின் இந்த இரவு நேர செயல்கள் உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது..

மற்றவர்களின் தன்னம்பிக்கையை சுரண்டுவது

மற்றவர்களின் தன்னம்பிக்கையை சுரண்டுவது

சிலர் மற்றவர்களின் சிறப்பை வெளியே கொண்டுவர முயலுவார்கள் ஆனால் பேராசைக்காரர்களோ தங்களை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்களை சிறப்பாக உணர் வைக்க மற்றவர்களின் நம்பிக்கையை சிதைப்பார்கள். இவர்களிடம் உதவிகளை துளியும் எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களின் நம்பிக்கையை தகர்ப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Ways To Find Greedy People

Here are a few signs you should be aware of in order to find a greedy/selfish person.
Story first published: Thursday, April 4, 2019, 17:35 [IST]
Desktop Bottom Promotion