இன்று இந்த ராசிக்காரர் எதை தொட்டாலும் பொன்னாகும்... நீங்களும் அந்த ராசி தானா?

Subscribe to Boldsky

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே போகும். நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக வெற்றியில் முடியும். இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். இன்று உங்களுக்கு வெற்றியைத் தருகின்ற அதிர்ஷ்ட எண்ணாக 5 ம்அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

பெற்றோர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பயணங்களின் மூலம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களினால் நன்மை உண்டாகும். செய்யும் தொழிலில் பல புதிய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களை சம்பாதிப்பீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 1 ம் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் திசையாக மேற்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறமாக சிவப்பு நிறமும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுனம்

மிதுனம்

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெரும் புகழ் பெறுவீர்கள். உங்களுக்கு உங்கள் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

கடகம்

கடகம்

பொருள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கும். அந்நியர்களால் வருமானம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட பல புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளால் சில சுப விரயங்கள் உண்டாகும். அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக நீலநிறமாகவும் இருக்கப்போகிறது.

சிம்மம்

சிம்மம்

புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தொழிலில் பல மடங்கு லாபம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த உறவுநிலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களைப் பற்றிய நம்பிக்கை மேலோங்கிக் காணப்படும். பணியில் உள்ளவர்களுக்கு இன்று மேன்மையான நாளாக அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

பொது சேவையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உங்களுடைய செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

துலாம்

துலாம்

கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனைவியால் சேமிப்புகள் உயரும். பணியில் உள்ளவர்களுக்கு பல்வேறு விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களால் சுப விரயங்கள் உண்டாகும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அந்த பயணத்தில் உங்களுக்கு சாதகமான முடிவினை எட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளையாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உள்ளூர் வாணிகம் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். வெளிமாநில, வெளிநாட்டு வாணிகத்தில் லாபம் உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட திட்டங்களைத் தீட்டுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் கற்ற கலைகளால் நீங்களே எதிர்பார்க்காத லாபங்கள் உங்களை வந்து சேரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையும் வடக்கும் இருக்கும்.

தனுசு

தனுசு

உயர் அதிகாரிகளிடம் உங்களைப் பற்றிய நம்பிக்கையை அதிகப்படுத்துவீர்கள். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நிலையில், கவனமாக இருக்க வேண்டும். அரசாங்கப் பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்ணாக 3 ம் அதிர்ஷ்டம் தரும் திசையாக மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மகரம்

மகரம்

கல்வி சம்பந்தப்பட்ட பணியில், ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வாதத்தினுடைய திறமையால் லாபம் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது, கவனத்துடன் ஈடுபடுவது அவசியம். பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 7 ம் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்தை தரும் நிறமாக பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளினால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். கோப்புகளைக் கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிற எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மீனம்

மீனம்

சுய தொழிலில் ஈடுபடுவர்கள் தொழிலில் புதுவிதமான யுக்திகளைக் கையாளுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எண்ணாக 4 ம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    horoscope for 24 May 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions

    There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people. By analyzing the projection of the position of planets, and the Sun and the Moon on the Ecliptic at the moment of birth. Astrology can give us a glimpse of a person's basic characteristics, preferences, flaws and fears.
    Story first published: Thursday, May 24, 2018, 7:47 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more