For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்கொலைக்கு முயன்ற ஆணுக்கு லிப்லாக் முத்தமிட்டு காப்பாற்றிய இளம்பெண் - வீடியோ!

தற்கொலைக்கு முயன்ற ஆணுக்கு லிப்லாக் முத்தமிட்டு காப்பாற்றிய இளம்பெண் - வீடியோ!

|

தான் அந்த நபரின் காதலி என்று காவலர்களிடம் பொய் சொல்லி நடித்து, தற்கொலைக்கு முயன்ற வாலிபரை நெருங்கி அவரிடம் பேசி, அரவணைத்து லிப்லாக் முத்தமிட்டு காப்பாற்றியுள்ளார் ஒரு பலே கில்லாடி இளம்பெண்.

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது ஷெனென், குவாங்டாங் எனும் பகுதி. இந்த இடத்தில் அமைந்திருக்கும் ஒரு ஷாப்பிங் மால் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என ஒரு இளைஞர் பீதியை கிளப்பினார். சுற்றி இருந்த மக்களால் புகார் அளிக்கப்பட்டு அங்கே தீயணைப்பு படை வீரர்களும், காவலர்களும் சூழ்ந்தனர்.

யார் பேசியும் அந்த நபர் தனது தற்கொலை முயற்சியை கைவிடுவதாக இல்லை. அந்த சமயத்தில் தான் காவலர்களிடம் லூயி வென்ஷியூ எனும் இளம்பெண், நான் தான் அந்த இளைஞரின் காதலி, நான் அவரிடம் பேச வேண்டும் என்று கூறி, அவரை அரவணைத்து ஆறுதல் கூறி காப்பாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வு சுற்றி இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. அந்த நபரை காப்பாற்றிய பிறகு தான் தெரிந்தது லூயி வென்ஷியூ அவரது காதலியே இல்லை. அந்நபரின் வாழ்க்கையை காப்பாற்ற இவ்வாறு பொய் கூறியுள்ளார் என்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியப்பு!

வியப்பு!

சுற்றி இருக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியதும் தற்கொலைக்கு முயற்சித்த நபர் வியப்படைந்தார் என்றும். மற்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மக்கள் யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் வெறுமென வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர் என்று கூறும் லூயி வென்ஷியூ ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வரும் 19 வயது இளம்பெண் ஆவார்.

தற்கொலை!

தற்கொலை!

அந்த இளைஞர் தனது வாழ்வில் நடந்த விரக்தியின் காரணமாக, வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால், சுற்றி இருந்த மக்கள் அவரை படம் பிடித்துக் கொண்டும், வீடியோ எடுத்துக் கொண்டும் மட்டுமே இருந்துள்ளனர். ஆனால், லூயி வென்ஷியூ மட்டுமே, இன்னும் சில நிமிடத்தில் நாம் ஏதேனும் செய்ய வில்லை என்றால் அவர் நிஜமாகவே இறந்துவிடுவார் என்று எண்ணியுள்ளார். இதற்கு காரணம், லூயி வென்ஷியூ பலமுறை தற்கொலைக்கு முயன்ற நபராவார்.

பேட்டி!

பேட்டி!

அந்த இளைஞரை காப்பாற்றிய பிறகு லூயி வென்ஷியூ அளித்த பேட்டியில், எனது கடந்த காலத்தில் நான் பல முறை தற்கொலை செய்துக் கொள்ள முயன்றுள்ளேன். கட்டிடத்தின் மேலிருந்து குதித்து, கையை பிளேட் கொண்டு அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்ய முயற்சித்தேன். ஆகயால், தற்கொலைக்கு முயற்சிப்பது எத்தனை வலிமிகுந்தது என்று நான் அறிவேன். நான் கண்ட போது அந்த இளைஞர் மாடியில் இருந்து குதிக்க அடி அடி மட்டுமே இடைவேளை இருந்தது. ஆகயால் தான் உடனே அவரை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து காவலர்களிடம் பொய் கூறி, அவரை நெருங்கினேன் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார் லூயி வென்ஷியூ.

பொய்!

பொய்!

அந்த இளைஞரை அருகே நெருங்கினால் தான் காப்பாற்ற முடியும். ஆகவே, நான் அவரது காதலி என்று பொய்கூறி நெருங்கினேன். மேலும், நான் தான் அவரது தற்கொலைக்கு காரணமானவள், நான் அவரை சில நாட்களாக காண மறுத்து வந்தேன். இதற்காக இவர் தற்கொலைக்கு முயற்சிப்பார் என்று நான் கருதவில்லை என்று போலீஸிடம் பொய்கூறி அந்த இளைஞரை நெருங்கியுள்ளார் லூயி வென்ஷியூ.

பேசிய போது...

பேசிய போது...

அந்த இளைஞரை நெருங்கி பேசிய போதுதான்... அந்த இளைஞரின் தாய் இறந்து விட்டதாகவும். அவரது இரண்டாம் தாய் இவரை துன்புறுத்தி வந்ததாகவும், சரியாக உணவளிக்க மாட்டார். ஒரு நாள் தந்தையின் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு அவரும் ஓடிவிட்டார் என்றும் அந்த இளைஞர் குறித்து பல விவரங்கள் அறிந்துள்ளார்.

இதன் பிறகு தந்தையும், மகனும் பகுதிநேர வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இப்படியாக தற்கொலைக்கு முயன்ற இளைஞர் கவலையை பகிர்ந்து கொண்ட போது கண்ணீர்விட்டு அழுதுள்ளார் லூயி வென்ஷியூ. இதே போன்ற சூழலை கடந்து வந்தவள் நான்.

எனது பெற்றோர்கள் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் எனது மற்றும் என் இளைய சகோதரியின் வாழ்க்கை இருண்டு போனது என்று பேட்டியில் கூறியிருக்கிறார் லூயி வென்ஷியூ.

யாருமே இல்லை..

யாருமே இல்லை..

எனக்கு தங்குவதற்கு வீடில்லை. என் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவும் யாருமில்லை. யாரும் என்னை நம்புவதற்கும் தயாராக இல்லை என்று லூயி வென்ஷியூயிடம் கூறியுள்ளார் அந்த இளைஞர். அந்த சமயத்தில். அவரது வலது கையை படித்துக் கொண்ட லூயி வென்ஷியூ, தான் தற்கொலைக்கு முயன்ற போது தனது கைகளில் ஏற்பட்ட காயங்களை அவரிடம் கான்பித்துள்ளார்.

மேலும், தற்கொலை எவ்வளவு வலிமிகுந்தது என்று நான் அறிவேன் என்று தனது கடந்த கால நினைவுகளை அவருடன் பகிர்ந்துள்ளார்.

வெற்றி!

வெற்றி!

பல கடின சூழலை கடந்து அந்த இளைஞரை காப்பாற்றி விட்டார் லூயி வென்ஷியூ. மேலும், அந்த நபருக்கு நாம் கூறுவதை புரிந்துக் கொள்ளும் அளவிற்கு அறிவு இருக்கிறது. ஆனால், அவர் தேவையின்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மேலும், லூயி வென்ஷியூ முதலில் சென்ற போது, எனக்கு வாழ்க்கையில் பிடிப்பே இல்லை. மேலும், என்னை காப்பாற்ற வந்து உன் நேரத்தை வீணடிக்காதே என்றும் கூறியள்ளார்.

எதிர்பாராத நிலையில்..

எதிர்பாராத நிலையில்..

தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர் எதிர்பாராத நிலையில், லூயி வென்ஷியூ அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். அந்த தருணத்தில் சுற்றி இருந்த மக்கள் அனைவரும் உற்சாகத்தில் கத்தினார்கள். அப்போது ஒருநொடி அந்த நபர் தன்னிலை மறக்க, டக்கென்று அவரை தன் பக்கமாக இழுத்து அவரை கைப்பற்றியுள்ளார் லூயி வென்ஷியூ.

கத்தி!

கத்தி!

தான் அந்த இளைஞரை முத்தமிடும் போது அவர் தன் கையில் இருந்த கத்தி கொண்டு தனது இடுப்பில் குத்த முயன்றார். அப்போது நாங்கள் இருவருமே அழுதுக் கொண்டிருந்தோம். ஆனால், நான் ஒரு உயிரை காப்பற்றிய மகிழ்ச்சியில் தான் இருந்தேன். அன்று லூயி வென்ஷியூ பேட்டியில் கூறியுள்ளார். .

மேலும், அந்த நபரை முத்தமிடும் முன்னர் தான் அதிகமாக எதுவும் யோசிக்கவில்லை என்றும். அந்த நேரத்தில் என்ன செய்தால் அவரை காப்பாற்ற முடியும் என்பதை மட்டுமே நான் யோசித்தேன் என்றும் இவர் கூறியுள்ளார்.

சுபம்!

லூயி வென்ஷியூ அந்த இளைஞரை தன் பக்கமாக இழுத்த மறுநொடி, தீயணைப்புப் படை வீரர்கள் ஏணி மூலம் மேலே சென்று அவரை பாதுகாப்பாக கீழே இறக்கினார்கள்.

உடனே, ஊடகத்தினர் அனைவரும் லூயி வென்ஷியூவை சூழ்ந்து எப்படி இதை செய்தீர்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். எப்படியோ லூயி வென்ஷியூவின் சமயோசித புத்தியால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Young Woman Saves a Suicidal Boy's Life By Kissing on His Lip in China!

Young Woman Saves a Suicidal Boy's Life By Kissing on His Lip in China!
Desktop Bottom Promotion