தங்கள் உடல் பாகங்களை இன்சூர் செய்து வைத்திருக்கும் உச்ச நட்சத்திரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் பொதுவாக வீடு, வாகனம், விலைமதிப்பற்ற நமது ஆரோக்கியத்திற்கு இன்சூர் செய்து வைத்திருப்போம். இப்போதெல்லாம் நகைகளுக்கு, செல்லமாக வளர்க்கும் நாய்களுக்கும் கூட இன்சூர் செய்கிறார்கள்.

நாம் முதன் முதலில் ஒருவர் தனது உடல் பாகத்தை இன்சூர் செய்தார் என்று அறிந்தது நடிகை ரம்பா மூலமாக தான். அவர் தனது தொடைகளை இன்சூர் செய்து வைத்திருந்தார் என்று சில செய்திகள் புரளியாக வெளியாகின. இது உண்மை தானா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.

ஆனால், உண்மையாகவே இந்தியாவின் மற்றும் உலகின் பிரபல நடிகர், நடிகைகள், மாடல் மற்றும் இசை உலகை ஆளும் பிரபலங்கள் தனது உடல் பாகங்களை பல மில்லியன் டாலர்களுக்கு இன்சூர் செய்து வைத்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா!

தனது சிரிப்பை இன்சூர் செய்து வைத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. நடிகைகளின் மிகப்பெரிய ஈர்ப்பே அவர்களது சிரிப்பும், கண்களும் தான். இயற்கையிலேயே சிலர் நல்ல புன்னகை கொண்டிருப்பார்கள். ஆனால், சிலர் இதழ் அவர்களது புன்னகையை கொஞ்சம் சுமாராக காண்பிக்கும் என்பதால் காஸ்மெடிக் சர்ஜெரி செய்துக் கொள்வதும் உண்டு. அந்த வகையில் இயற்கையாகவே அழகான புன்னகை கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா தனது சிரிப்பை இன்சூர் செய்து வைத்திருக்கிறார்.

அமிதாப்பச்சன்!

அமிதாப்பச்சன்!

இந்திய திரை உலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் தனது குரலை இன்சூர் செய்து வைத்திருக்கிறார்.

அமிதாப்பச்சனின் குரல் தனித்தன்மை கொண்டுள்ளதாகும். அதில் ஒரு கம்பீரம் இருக்கும். ஒவ்வொரு முறை அமிதாப் பேசும் போதும் அதில் ஆண்மை வெளிப்படுவதை கவனிக்க முடியும். சிலர் அமிதாப்பச்சனின் குரலை தங்கள் விளம்பரத்திற்காக மிமிக்கிரி செய்து பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதால், அவர் தனது குரலை இன்சூர் செய்து வைத்திருக்கிறார்.

ராக்கி சவாந்த்!

ராக்கி சவாந்த்!

அடிக்கடி சர்ச்சயை கிளப்பும் இந்தி திரை துறையின் ஐட்டம் டான்ஸ் நடிகை ராக்கி சவாந்த் தனது பிட்டத்தை / பின்னழகை இன்சூர் செய்து வைத்திருக்கிறார். தனது செக்ஸி உடலை குறித்து மிகவும் பெருமைப் பட்டு கொள்ளும் இந்த கவர்ச்சி அழகி தனது பின்னழகை இன்சூர் செய்துக் கொண்டதிலும் அதிக பெருமை கொண்டிருக்கிறார்.

ஜான் ஆபிரகாம்!

ஜான் ஆபிரகாம்!

தோஸ்தானா, ஃபோர்ஸ் 2 படங்களில் நடித்துள்ள ஜான் தனது பின்னழகை இன்சூர் செய்து வைத்திருக்கிறார். பொதுவாக பெண் அழகிகள், நடிகைகள் தான் தனது அந்தரங்க பாகங்கள், செக்ஸி உடல் பாகங்களை இன்சூர் செய்துக் கொள்வார்கள். ஆனால், முதல் முறையாக நடிகர் ஜான் தனது பின்னழகை இன்சூர் செய்திருக்கிறார். இவருக்கு பெண் ரசிகைகளை விட ஆண் ரசிகர்கள் தான் அதிகமாம். அதிலும், இவரது அழகை ரசிக்கும் ஆண்கள் கூட்டம் பாலிவுட்டில் தனியாக இருக்கிறதாம்.

மல்லிகா!

மல்லிகா!

நடிகை மல்லிகா ஷெராவத் பாலிவுட்டில் ஃபிட்னஸ்க்கு பெயர்போனவர். இவர் தனது ஒட்டுமொத்த உடலையும் இன்சூர் செய்து வைத்திருக்கிறார். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொல்வதற்கு எனவே, தனியாக இவர் நிறைய கவனம் செலுத்துகிறார், செலவு செய்கிறார். இதற்காக தான் மல்லிகா தனது ஒட்டுமொத்த உடலையும் இன்சூர் செய்து வைத்திருக்கிறார்.

லதா மங்கேஷ்கர்!

லதா மங்கேஷ்கர்!

அன்றும், இன்றும், என்றும் யாராலும் மாற்ற முடியாத, ரீப்ளேஸ் செய்ய முடியாத பாடகி லதா மங்கேஷ்கர். தனது அழகான குரலால் பல உணர்வுகளை பதிவு செய்திருக்கிறார் லதா. இவரது வெற்றிக்கும், சாதனை பயணத்திற்கும் காரணமாக இருந்த தனது அழகிய குரலை இன்சூர் செய்து வைத்திருக்கிறார் லதா.

 சானியா மிர்சா!

சானியா மிர்சா!

இந்தியாவின் டென்னிஸ் புயல் சானியா மிர்சா தனது கைகளை இன்சூர் செய்து வைத்திருக்கிறார்.

இந்தியாவில் டென்னிஸ் மீது பலரும் காதல் கொள்ள மிக முக்கிய காரணமாக திகழ்பவர் சானியா மிர்சா. சானியா மிர்சாவின் திறமை மட்டுமின்றி, அவர் மீதும் பலர் காதல் கொண்டிருந்தனர். அதற்கு காரணமாக இருந்தது அவரது கைகள் தான். அதனால் தான் தனது கைகளை இன்சூர் செய்து வைத்திருக்கிறார் சானியா மிர்சா.

விஜேந்தர்!

விஜேந்தர்!

பத்ம ஸ்ரீ மட்டும் பல உலகளாவிய குத்து சண்டை விருதுகள் வென்றுள்ள விஜேந்தர் சிங். இவரது வெற்றிக்கு மணிக்கட்டு, உள்ளங்கை, விரல்கள் தான் முக்கிய காரணம். தனது விரல்கள் இல்லாமல் தனது விளையாட்டில் எதையும் சாதிக்க முடியாது என்று கருதிய விஜேந்தர். தனது கை விரல்களை இன்சூர் செய்து வைத்திருக்கிறார்.

ரிஹானா!

ரிஹானா!

உலக அளவில் தனக்கென தனி இரசிகர் பட்டாளம் உருவாக்கி வைத்திருக்கும் பாப் பாடகி ரிஹானா தனது கால்களை இன்சூர் செய்து வைத்திருக்கிறார். ஏறத்தாழ ஒரு மில்லியன் டாலர்களுக்கு தனது கால்களை ரிஹானா இன்சூர் செய்து வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நேஹா துபியா!

நேஹா துபியா!

ஆங்கில பாடகி மற்றும் நடிகை ஜெனிபர் லோபஸ் இன்சூர் செய்த அதே அமெரிக்க நிறவனத்தின் மூலமாக தான் நேஹா துபியாவும் தனது பின்னழகை இன்சூர் செய்து வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய அழகியான நேஹா கொஞ்சமும் எந்த மாற்றமும் இன்றி, இந்த விஷயத்தில் அப்படியே ஜெனிபர் லோபசை காப்பி அடித்துள்ளார்.

டேவிட் பெக்கம்!

டேவிட் பெக்கம்!

ஓய்வுபெற்ற உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம் தனது கால்களை இன்சூர் செய்திருக்கிறார். தான் தனது திறமை கொண்டு தனது கேரியரை மட்டும் சிறப்பித்து கொண்டார் என்றில்லாமல், தன்னை பின் தொடர்ந்து பல இளம் வீரர்கள் சிறந்து விளங்கவும் ஒரு ஊக்க கருவியாக திகழ்ந்தார் பெக்கம். இவர் தனது கால்களை 70 மில்லியன் டாலர்களுக்கு இன்சூர் செய்து வைத்திருக்கிறார்.

ஜெனிபர் லோபஸ்!

ஜெனிபர் லோபஸ்!

ஏறத்தாழ ஐம்பதை எட்டவிருக்கும் ஜெனிபர் லோபஸ் தனது பின்னழகை இன்சூர் செய்து வைத்திருப்பது சிலரை ஆச்சரியப்பட வைக்கிறது. ஆயினும், தனது திறமையிலும் துளியும் சோர்வு காணாத ஜெனிபர் தனது பின்னழகை 300 மில்லியன் டாலர்களில் இன்சூர் செய்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மடோனா!

மடோனா!

அன்று முதல் இன்று வரை உலகின் கவர்ச்சி அழகியாக திகழ்ந்து வரும் பாடகி, நடிகை மடோனா. பதின் வயதை கடந்த மகள் இருந்தாலும் கூட, இன்றும் ஃபேஷன் மற்றும் இசை உலகில் கொடிக்கட்டி பறக்கும் மடோனா தனது மார்பகங்களை 2 மில்லியன் டாலர்களுக்கு இன்சூர் செய்து வைத்திருக்கிறார்.

ஜூலியா ராபர்ட்ஸ்!

ஜூலியா ராபர்ட்ஸ்!

ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் தனது அழகுக்கு அழகு சேர்க்கும் புன்னகையை இன்சூர் செய்து வைத்திருக்கிறார். மில்லியன் டாலர் ஸ்மைல் என்று அழகை சில சமயம் ஆங்கிலத்தில் புகழந்து கூறுவது உண்டு. அதை நிஜப்படுத்தி காண்பித்துள்ளார் ஜூலியா ராபர்ட்ஸ். ஆம்! தனது புன்னகையை 30 மில்லியன் டாலர்களுக்கு இன்சூர் சித்து வைத்துள்ளார் இவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

World Famous Stars Who Have Insured Their Body Parts!

World Famous Stars Who Have Insured Their Body Parts!