For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அப்ரைசல் நேரத்துல இப்படி எல்லாமா கொடுமை பண்ணுவாங்க.. வைரல் வீடியோ!

  By Staff
  |

  வருடம் முழுக்க நாம் உழைப்பது ரெண்டே விஷயத்திற்காக தான். இன்று ஒரு ஜான் வயிற்று பசி, மற்றொன்று வருட கடைசியில் மேனேஜர் கையில் இருந்து கிடைக்கும் அந்த அப்ரைசல் கடிதம்.

  சிலருக்கு பார்த்த வேலைக்கு ஹைக்கு கிடைக்கும். சிலருக்கு எவ்வளவு கடினமாக உழைத்தாலும் மேனேஜருக்கு கூஜா தூக்க தெரியவில்லை என்றால் சல்லி காசு தேறாது. கூஜா தூக்கி வேற லெவல் ஹைக்கு வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.

  Disturbing Video! Employees Slapped & Made To Crawl In Appraisal Meeting

  அப்ரைசல் என்பது அடுத்த வருடமும் சிறந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு ஊக்க தொகை தன். ஊழியர் மூலம் நிறுவனம் லாபம் அடையும் போது. அதை சரி பங்கு தராவிட்டாலும். நியாயமான அளவு தர வேண்டியது நிறுவனத்தின் கடமை.

  ஆனால், சில நிறுவனங்களில் அப்ரைசலின் போது கொஞ்சம் மோசமாகவும் நடந்துக் கொள்வதுண்டு. நீ சரியாக வேலை செய்யவில்லை, டார்ஜெட் அச்சீவ் செய்யவில்லை, அடிக்கடி லீவ் போடுகிறாய் என்று நொண்டி சாக்கு சொல்லுவார்கள். இதற்கு எல்லாம் பின்னாடி இருக்கும் காரணம்... உனக்கு இந்த வருடம் அப்ரைசல் பெரிதாக இருக்காது என்பது தான்.

  இப்படி ஏதாவது சாக்குப் போக்கு கூறினால் கூட பரவாயில்லை. ஆனால், சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் அப்ரைசல் பிராசஸ் போது நடந்த அசௌகரியமான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

  சீனாவின் ஹுபேய் என்ற பகுதியில் தான் இந்த நிறுவனம் அமைந்திருப்பதாக அறியவருகிறது. இந்த வீடியோ காட்சியில் தங்கள் ஊழியர்களை அந்த நிறுவனத்தின் ஆட்கள் மிக மோசமாக நடத்துவது போல அமைந்திருக்கிறது.

  ஊழியர்கள்!

  இந்த வீடியோ காட்சி வெளியான பிறகு அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது தான் பல திடுக்கிடும்உண்மைகள் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இது ஏதோ விளையாட்டு என்று கருதினார்கள் இந்த வீடியோ காட்சியை இணையத்தில் கண்டவர்கள்.

  ஆனால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண் மேனேஜர் ஒருவர் ஆண் ஊழியர்களை வரிசையாக அழைத்து கண்ணத்தில் மூன்று முறை பளார் என விடுகிறார். மேலும், அப்ரைசல்காக ஊழியகளை நாய்களை போல நான்கு கால்களில் நடக்க விடுவது போலவும் இந்த வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

  ராஜினாமா

  சிலர் இந்த வீடியோ அப்ரைசல் பிராசஸ் போது எடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர். சிலர் மோசமாக பர்பார்மன்ஸ் செய்தவர்களை அழைத்து இப்படி வினோதமாக அந்த பெண் தண்டித்தார் என்று கூறியுள்ளனர். இந்த தண்டனை பெற்ற சில பெண்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

  இதே போல இரண்டு வருடங்களுக்கு முன்னர், பைஷன் இன் ஜிலின் எனும் பகுதியில் வருடாந்திர டார்கெட் அச்சீவ் செய்யாதவர்களை அழைத்து சேல்ஸ் மீட்டிங்கின் போது ஊர்ந்து வரச்சொல்லி அவமானப்படுத்திய வீடியோவும் இன்டர்நெட்டில் வைரலானது.

  எதுக்கு?

  சாப்பிடுவதில் இருந்து வாழ்க்கை முறை, காதல், காமம், வேலை என்று ஏதோ ஒன்றை வினோதமாக செய்து இன்டர்நெட்டில் வைரலாக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள் போல சீனர்கள். இதெல்லாம் இவர்கள் எதற்காக செய்கிறார்கள்.

  இது விபத்தாக நடப்பவையா? அல்ல வேண்டுமென்றே இப்படி ஒரு வீடியோவை எடுத்து அதற்கு கதைக் கட்டி இவர்கள் இணையங்களில் வைரல் ஆக்குகிறார்களா? என்பதே பெரும் புதிராக இருக்கிறது. யாருக்கு தெரியும் சீனர்கள் எதை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் செய்வார்கள்.

  English summary

  Disturbing Video! Employees Slapped & Made To Crawl In Appraisal Meeting

  A video has been widely shared online of a particular company’s monthly appraisal meeting in China. The employees were seen being slapped by the lady manager and were made to crawl like dogs due to poor performance during the appraisal meeting.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more