72 வயதில் பெரியார் மணியம்மையை திருமணம் செய்துக் கொண்டது ஏன்?

Posted By: Staff
Subscribe to Boldsky
72 வயதில் பெரியாருக்கு மனைவி தேவைப்பட்டது இதற்கு தான்..!!- வீடியோ

பெரியார் மீது தீவிர மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர்கள், அவரது கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்பி மகிழ்ந்த தொண்டர்கள், தி.கவினர் என பெரியாரிஸம் போற்றி வந்த நபர்கள் மற்றும் தமிழக மக்கள் பலர் என, பெரியார் - மணியம்மை திருமணத்தை எதிர்த்தவர்கள், அந்த திருமணத்தின் காரணத்தால் பெரியாரின் வட்டத்தில் இருந்து விலகி சென்றவர்கள் என பலர் இருக்கிறார்.

தனது முதல் மனைவி நாகம்மை பெரியாருக்கு 54 வயதிருக்கும் போதே இறந்துவிடுகிறார். அந்த காலக்கட்டதிலேயே உறவினர், நண்பர்கள் என பலர் பெரியாரை திருமணம் செய்துக் கொள்ள கூறிய போது, முழுமனதுடன் மறுப்பு தெரிவித்திருந்தார் பெரியார். தனது மீத வாழ்க்கை மற்றும் அதில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் நிச்சயம் தனது துணை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெகுவாக அறிந்திருந்தார் பெரியார்.

ஆனால், பிறகு தனது எழுபதுகளில் மணியம்மையை பெரியார் திருமணம் செய்துக் கொள்ள காரணம் என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்நலக் குறைபாடு...

உடல்நலக் குறைபாடு...

எழுபதுகளில் பொதுவாக முதியவர்களுக்கு என்னென்ன உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுமோ அவை எல்லாம் பெரியாருக்கும் ஏற்பட்டது. அந்நாள் வரை தன் இயக்கம், கொள்கைகள், போராட்டங்கள் குறித்து மட்டுமே கவனம் கொண்டிருந்த பெரியாருக்கு, தனக்கு பின் யார், யார் அனைத்தையும் வழிநடுத்தி செல்வார்கள் என்ற எண்ணம் அப்போது தான் பிறக்க துவங்கியது.

கவலைகள்!

கவலைகள்!

மக்கள் மேம்பாட்டு போராட்டங்கள் மற்றும் அதற்கான சிந்தனைகள் ஒருபுறம், அடித்தட்டு மக்கள் மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட கழகம் மற்றும் அதன் எதிர்காலம் ஒருபுறம்., தனது மரணத்திற்கு பிறகு தனது சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் கூட்டம் ஒருபுறம் என பெரியாரின் மனதை சூழ்ந்திருந்தன.

Image Source:commons.wikimedia

கழகமும், சொத்தும்!

கழகமும், சொத்தும்!

பெரியாருக்கு பெரும் சொத்து இருந்தது. அதை அவரது இறப்புக்கு பிறகு தனது கழகத்திற்கு எழுதி வைத்துவிட்டால், அதனால் கழகமும் சிறப்பாக இயங்க வழிவகுக்க முடியும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் பெரியார். இதற்காக, உடனடியாக தனது வழக்கறிஞரை வரவழைத்து கோப்புகள் ஏற்பாடு செய்ய கூறினார்.

சட்டசிக்கல்!

சட்டசிக்கல்!

ஆனால், பெரியார் அறிந்திருக்காத ஒரு சட்ட சிக்கலை எடுத்துரைத்தார் அவரது வழக்கறிஞர். ஆம்! பெரியாருக்கு பிறகு அவரது இரத்த பந்தத்திற்கு தான் சொத்து போகும். அவர்களது கையொப்பமும் இருந்தால் தான் சொத்துகளை கழகத்தின் பெயருக்கு மாற்ற முடியும் என்று கூறினார்.

பிள்ளை?

பிள்ளை?

பெரியாரின் முதல் மனைவியான நாகம்மை வெகு காலம் முன்பே இறந்துவிட்டார். பெரியாருக்கு பிறந்த குழந்தையும் இறந்தே பிறந்ததால், இந்த இரண்டு வாய்ப்புகள் இல்லாமல் போயின. ஆகவே, ஒன்று பெரியார் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் கழகத்திற்கு சொத்து எழுதி வைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

தவிப்பு!

தவிப்பு!

நிச்சயம் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டிருந்தார் பெரியார். ஆனால், அதற்காக இந்த முதிய வயதில் திருமணம் செய்துக் கொள்வது எப்படி சாத்தியம். அன்றைய சட்டம் பெண்களுக்கான திருமண வயது 13 என்று வகுத்து வைத்திருந்தது.

மேலும், 70 வயது முதியவரை யார் தான் திருமணம் செய்துக் கொள்ள முன்வாருவார்கள்.

யோசனை!

யோசனை!

ராஜாஜி உட்பட தனது நெருங்கிய வட்டத்தினர் பலரிடம் இதுகுறித்து விசாரிக்கிறார் பெரியார். பெரும்பாலானவர்கள் இது அவப்பெயரை பெற்றுத்தரும் வேண்டாம் என்று முனைகிறார்கள். ஆனால், கழகத்தின் எதிர்காலம் மட்டுமே கருத்தில் கொண்டு, வேறு வழியில்லை என்பதால் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை ஏற்கிறார் பெரியார்.

மணியம்மை!

மணியம்மை!

யாரை திருமணம் செய்வது என்ற பேச்சின் போது, மணியம்மை தானாக முன்வருகிறார். அவர் பெரியார் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்தவர். "நான் தானே பெரியாரை கவனித்து வருகிறேன். இதுவெறும் சட்டத்திற்கான பதிவு மட்டும் தானே. அதைத்தாண்டி எங்கள் உறவானது எப்போதுமே போல தானே தொடர போகிறது என்று கூறி" திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார் மணியம்மை.

 அண்ணா - பெரியார் விரிசல்!

அண்ணா - பெரியார் விரிசல்!

ஏற்கனவே சுதந்திரத்திற்கு பிறகு வெள்ளை - கருப்பு சட்டை கருத்து வேறுபாடு காரணமாக பெரியார் - அண்ணா இடையே ஒரு மனஸ்தாபம் நிலவி வந்தது. அன்றில் இருந்து அவர்கள் இருவருக்கும் நடுவே சிறு பிளவு ஏற்பட்டது. பெரியாரின் திருமண செய்தி இந்த பிளவை பெரிதாக்கியது.

திருமண செய்தி!

திருமண செய்தி!

சென்னை தியாகராயநகரில் செ.தெ.நாயகம் இல்லத்தில் ஏப்ரல் 9, 1949 என்று பெரியாருக்கும் தனது அவரிடம் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த 32 வயது ணியம்மைக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. இந்த செய்தி கேட்ட பிறகு அண்ணாவுக்கும், பெரியாருக்கும் இருந்த உறவானது ஏறத்தாழ முடிவு பெற்றது என்று தான் கூற வேண்டும்.

அவப்பெயர்!

அவப்பெயர்!

பெரியார் கருதியது போலவும், பெரியாரின் நெருங்கிய வட்டத்தினர் அறிவுரைத்தது போலவும் தன் மகள் வயதி பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார் பெரியார் என்று அவருக்கு அவப்பெயர் உண்டானது. ஆனால், பெரியார் இத்திருமணம் செய்துக் கொண்டதற்கு ஒரே காரணம் தனது சொத்து கழகத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் மட்டுமே.

தி.க'விலிருந்து தி.மு.க

தி.க'விலிருந்து தி.மு.க

1949 செப்டம்பர் 17ம் நாள், பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா உட்பட ஈ.வி.கே சம்பத், அன்பழகன், நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், என்.வி. நடராஜன் என முக்கிய பேச்சாளார்கள் அனைவரும் பிரிந்து வந்து திராவிட முன்னேற்ற கழகத்தினை துவக்கினார்கள்.

எப்போதுமே பெரியார் தான்...

எப்போதுமே பெரியார் தான்...

தி.க'விலிருந்து பிரிந்து வந்தாலும், எங்கள் கொள்கைகள் ஒன்று தான் என்பதை தீர்க்கமாக கூறினார்கள். மேலும், திமுகவிற்கு தலைவர் யாரும் இல்லை, எங்கள் தலைவர் எப்போதுமே பெரியார் தான். அந்த பதிவியிடம் எப்போதுமே காலியாக தான் இருக்கும் என்றும் அறிவித்திருந்தார் அறிஞர் அண்ணா.

ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற கருத்து கொண்டிருந்தாலும் பின்னாட்களில் அரசியல் தேர்தலில் களம் கண்டது திமுக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Periyar Married Maniyammai in the Age of 70? Lesser Known Story

Why Periyar Married Maniyammai in the Age of 70? Lesser Known Story
Story first published: Thursday, March 8, 2018, 12:30 [IST]