For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தில் அர்ஜுனன், கர்ணனை விட அதிக சக்திவாய்ந்த வீரர் யார் தெரியுமா?

அர்ஜுனன், கர்ணன், பீஷ்மர், துரோணர், பீமன், துருபதன் என பல மாவீரர்களை பற்றி நாம் மகாபாரதம் முழுவதும் படித்திருப்போம். ஆனால் அவர்கள் அனைவரையும் மிஞ்சிய ஒரு வீரன் கௌரவர் தரப்பில் இருந்தார்.அந்த மாவீரர்த

|

மகாபாரத போரில் பாண்டவர்கள், கௌரவர்கள் என இருவரின் தரப்பிலும் பல மாவீரர்கள் இருந்தார்கள். இருப்பினும் கிருஷ்ணரின் அருளால் பல சிரமங்களுக்கு பிறகு பாண்டவர்கள் போரை வென்றனர். அர்ஜுனன், கர்ணன், பீஷ்மர், துரோணர், பீமன், துருபதன் என பல மாவீரர்களை பற்றி நாம் மகாபாரதம் முழுவதும் படித்திருப்போம். ஆனால் அவர்கள் அனைவரையும் மிஞ்சிய ஒரு வீரன் கௌரவர் தரப்பில் இருந்தார்.

அந்த மாவீரர்தான் சல்லியன். இவரை பற்றி பலரும் கவனித்திருக்க மாட்டோம். கௌரவ படைகளின் கடைசி சேனாதிபதியாக இருந்தது இந்த சல்லியன்தான். இவர் வேறு யாருமல்ல பாண்டவர்களான நகுலன் மற்றும் சகாதேவனின் தாய்மாமாதான் இந்த சல்லியன். இவரின் ஆற்றல் முன் எவராலும் இவரை வெல்ல இயலாது, அப்படியொரு சிறப்பான வரத்தை பெற்றவர் இவர். அது என்ன வரம் அவரை வதைக்க கிருஷ்ணர் தீட்டிய திட்டம் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சல்லியன்

சல்லியன்

மத்ர தேசத்தின் மன்னனான சல்லியனின் சகோதரிதான் நகுலன் மற்றும் சகாதேவனின் அம்மாவான மாதுரி. மகாபாரத போரிலும் சரி, அதற்கு முன் இவர் பங்கேற்ற போரிலும் சரி இவர் என்றுமே தோற்றதில்லை. அதற்கு அவரின் வீரம் ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் அவரின் அற்புத சக்திதான்.

சல்லியன் பெற்ற வரம்

சல்லியன் பெற்ற வரம்

சல்லியனின் அற்புத வரம் என்னவெனில் சல்லியன் முன் யாரேனும் கோபமாக அவரை தாக்க முற்பட்டால் எதிரியின் பலம் ஆயிரம் மடங்காக அதிகரித்து அது சல்லியனை சென்று அடைந்து விடும். அதாவது அவர் எதிரிகளின் கோபம் அவரின் சக்தியை ஆயிரம் மடங்கு அதிகரிக்கும். இந்த விஷயம் துரியோதனனுக்கு தெரியாது, அதனால்தான் சல்லியரை அவன் இறுதிவரை கர்ணனின் தேரோட்டியாக இருக்க வைத்தான். இதனை அறிந்த ஒரே நபர் பகவான் கிருஷ்ணர்தான்.

சல்லியர் ஏன் துரியோதனனுடன் சேர்ந்தார்

சல்லியர் ஏன் துரியோதனனுடன் சேர்ந்தார்

பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்கு ஆயத்தமாகி கொண்டிருந்த போது சல்லியர் தன் மருமகன்களுக்கு உதவி செய்வதற்காக தன் படைகளுடன் கிளம்பினார். இதனை அறிந்த துரியோதனன் அவர் வரும் வழியில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்து அவருக்கும் அவர் படைக்கும் ராஜஉபச்சாரம் வழங்கும்படி செய்தான். தன் மருமகன்கள்தான் இப்படி தன்னை கவனிக்கிறாரக்ள் என்று நினைத்த சல்லியன் உங்களுக்கு போரில் உறுதுணையாக இருப்பேன் என்று வாக்களித்து விட்டார். பின்னர்தான் தான் துரியோதனின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டதை அறிந்து வருந்தினார். கொடுத்த வாக்கிற்காக தன் மருமகன்களுக்கு எதிராக போர் புரிய ஒப்புக்கொண்டார்.

போரில் சல்லியன்

போரில் சல்லியன்

துரியோதனன் தன்னை சூழ்ச்சியால் ஏமாற்றிவிட்டதை அறிந்த சல்லியன் துரியோதனனை தொடர்ந்து வசைபாடி கொண்டிருந்தார். இதனால் கோபமுற்ற துரியோதனன் சல்லியனை அவமதிக்கும் பொருட்டு அவரை கர்ணனின் தேரோட்டியாக்கினான். போரில் கர்ணனின் தேர்சக்கரம் சேற்றில் சிக்கி கொண்டபோது சல்லியன் ரத்தத்திலிருந்து இறங்கி சென்றுவிட்டார். இதுவே கர்ணனின் மரணத்திற்க்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சேனாதிபதியாக சல்லியன்

சேனாதிபதியாக சல்லியன்

கர்ணன் இறந்த பிறகு சல்லியனை படைக்கு சேனாதிபதியாக மாற்றினான் சல்லியன். ஏனெனில் தன் நண்பன் கர்ணனின் மரணத்திற்கு காரணமான சல்லியன் அவரின் மருமகன்கள் கையாலேயே கொல்லப்பட வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் இதனை செய்தான் துரியோதனன். அதற்கேற்றாப்போல் நகுலனும் சல்லியனை வதைப்பதாக சபதம் ஏற்றிருந்தான்.

கிருஷ்ணரின் கலக்கம்

கிருஷ்ணரின் கலக்கம்

போரின் 17 ஆம் நாள் இரவு கிருஷ்ணர் தூக்கமின்றி தவித்து கொண்டிருந்தார். ஏனெனில் சல்லியனின் ஆற்றல் பற்றி கிருஷ்ணர் நன்கு அறிவார். பீமன் கிருஷ்ணரிடம் போருக்கு தான் தலைமை ஏற்பதாக கூறினான். ஆனால் கிருஷ்ணர் அதனை மறுத்துவிட்டார். ஏனென்றால் பீமனின் கோபம் சல்லியனை மேலும் பலசாலியாக மாற்றிக்கொண்டே செல்லும் என அவர் நன்கு அறிவார்.

பீமனின் கர்வம்

பீமனின் கர்வம்

கிருஷ்ணர் தன்னை தலைமையேற்க வேண்டாமென கூறியதால் கோபமுற்ற பீமன் அதற்கான காரணத்தை கிருஷ்ணரிடம் கேட்டான். அதற்கு கிருஷ்ணர் உன்னால் சல்லியனை வெல்ல முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பீமன் கௌரவ சேனையில் பாதியை அழித்து, 99 கௌரவர்களை கொன்ற என்னால் சல்லியனை வெல்ல முடியாதா என்று கேட்டான்.

கிருஷ்ணரின் பதில்

கிருஷ்ணரின் பதில்

பீமனின் சினத்தை கண்டு பொறுமையாக இருந்த கிருஷ்ணர் பின்னர் அவனிடம் சல்லியனின் வீரத்தையும், அவரின் வரத்தை பற்றியும் கூறினான். அதனை கேட்ட பீமன் மட்டுமின்றி அனைத்து பாண்டவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். பிறகு எப்படித்தான் சல்லியரை வீழ்த்துவது என்று தர்மன் கேட்க அதற்கு கிருஷ்ணர் அவரை எதிரியாய் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

தர்மனின் உறுதி

தர்மனின் உறுதி

குழப்பமுற்ற தர்மன் போரில் எதிர் பக்கம் உறவினர்களே இருந்தாலும் அவர்களை எதிரியாகாவே பார்க்க வேண்டுமென்று நீதானே கூறினாய் என்று கிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு கிருஷ்ணர் ஆம் உண்மைதான் ஆனால் இந்த தருணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது சல்லியனிடம் சரணாகதி அடையவேண்டியது என்று கூறினார். மேலும் குழப்பமடைந்த தர்மன் அது எப்பாய்டு என்று கேட்க அவரை மனதளவில் எதிரியாக நினைக்காமல் அவரின் ஆசியை பெரும் பொருட்டு அவரை வணங்க வேண்டும். அவர் மேல் எரியும் ஒவ்வொரு அஸ்திரத்திலும் உங்களுடைய கோபமோ, வன்மமோ இருக்க கூடாது என்று கூறினார். இறுதியாக தர்மன் தான் அவ்வாறு சல்லியனுடன் போர் புரிவதாக உறுதியளித்தார்.

சல்லியன் மரணம்

சல்லியன் மரணம்

இறுதி நாள் போர் தொடங்கியது. சேனாதிபதியாக சல்லியன் சிறப்பாகவே போரிட்டார். தர்மன் கிருஷ்ணருடைய அறிவுரைப்படி மனதில் வன்மம், கோபம் இல்லாமல் சல்லியருடன் போரிட்டார். அதேநேரம் நகுலனும் சல்லியனை தாக்கி அவரை சாய்க்க சல்லியன் தன் மருமகன் கையால் இறக்க விரும்பாமல் தர்மனை தன்னை கொள்ளும்படி வேண்டினார். ஏனெனில் மருமகன் தாய்மாமனை வதைப்பது நகுலனுக்கு தோஷத்தை உண்டாக்கும் என சல்லியன் அறிவார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க தர்மரும் அவரின் சல்லியனின் ஆசியுடன் தன் ஈட்டியால் சல்லியனை வதைத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What made King Shlaya more powerful than Arjuna

halya is king Of Madra and he is the uncle for Nakula and Sahadeva. He is a more powerful warrior than Arjuna.
Desktop Bottom Promotion